கிளெவுட் எல்வுட் ஷெனான் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த கணிதவியலாளர், மின்பொறியாளர், தகவல் தொடர்பு கோட்பாட்டாளருமான கிளெவுட் எல்வுட் ஷெனான் (Claude Elwood Shannon) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மிச்சிகன் மாகாணத்தில் கேலார்ட் என்ற இடத்தில் பிறந்தவர் (1916). தந்தை வியாபாரி, நீதிபதியாகவும் பணியாற்றியவர். அரசுப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். அறிவியல், கணிதம் மற்றும் இயந்திரங்கள், பிற தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டினார்.

* இளம் வயதில் ஓய்வு நேரங்களில் மாதிரி விமானங்கள், ரேடியோ-கன்ட்ரோட் மாதிரி படகு, ஒயர் மூலம் டிரான்ஸ்மிட் செய்யும் டெலகிராஃப் அமைப்பு உள்ளிட்ட பல கருவிகளைத் தயாரித்து வந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் மற்றும் கணிதம் பயின்று பட்டம் பெற்றார்.

* எலக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1936-ல் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி.) எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் துறை பேராசிரியரின் உதவியாளராகச் சேர்ந்தார். ஏற்கெனவே பேராசிரியர் உருவாக்கியிருந்த டிஃபரென்ஷியல் அனலைசர் கம்ப்யூட்டிங் சாதனத்தை மேம்படுத்தும் வழிமுறைகளைச் சிந்தித்தார்.

* இந்த அனலைசரில் அட்ஹாக் சர்க்யூட்டின் சிக்கல்களுக்குப் பூலியன் அல்ஜீப்ரா கோட்பாடுகளைப் பயன்படுத்தி இதன் சர்க்யூட்களை மாற்றியமைத்து, இதற்குத் தீர்வு கண்டார். டிஜிட்டல் சர்க்யூட் வடிவமைப்புக்கான அடித்தளமாக இவரது கண்டுபிடிப்பு அமைந்தது.

* 1940-ல் எம்ஐடி.யில் ‘ஆன் அல்ஜீப்ரா ஃபார் தியரிட்டிகல் ஜெனடிக்ஸ்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, முனைவர் பட்டம் பெற்றார். இவர் எழுதிய ‘ஏ சிம்பாலிக் அனாலிசஸ் ஆஃப் ரிலே அன்ட் ஸ்விட்சிங் சர்க்யூட்ஸ்’ என்ற ஆய்வுக் கட்டுரை தலைசிறந்த கட்டுரைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

* 1942-ல் பெல் லெபாரட்டரியில் இணைந்தார். 1948-ல் ‘ஏ மேதமெடிக்கல் தியரி ஆஃப் கம்யூனிகேஷன்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையை வெளியிட்டார். இதில் தகவல் சிக்னலிங்கின் அடிப்படைக் கோட்பாடுகளை எழுதியிருந்தார்.

* இந்தத் தகவல் தியரி அறிவாற்றல், உயிரியல், மொழியியல், உளவியல், பொருளாதாரம் மற்றும் இயற்பியல் போன்ற பிற களங்களிலும் பயன்படுத்துவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 1948-ல் இவர் எழுதிய ‘ஏ ப்ளூபிரின்ட் ஆஃப் டிஜிட்டல் ஏஜ்’ என்ற கட்டுரை இன்றும்கூட வல்லுநர்களால் போற்றப்படுகிறது.

* இவரது கண்டுபிடிப்புகள், கம்ப்யூட்டரின் பல்வேறு தவறுகள், புதிர்கள், குறியீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டறிந்தன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இவரும் இவரது அணியினரும் எதிரிப்படையின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் திசையைக் கண்டறியும் எதிர்ப்பு விமான ஏவுகணைக் கட்டுப்பாட்டு அமைப்பின் (anti aircraft missile control systems) வடிவமைப்பை மேம்படுத்தினர்.

* இதன் மூலம் எதிர்ப்பு விமான ஏவுகணைக் கட்டுப்பாட்டு அமைப்பில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். அமெரிக்கக் கட்டிடப் பொறியாளர் சமூகத்தினரால் வழங்கப்படும் ஆல்ஃபிரட் நோபல் பரிசு, மோரீஸ் லீப்மன் நினைவுப் பரிசு, மார்வின் கெல்லி விருது, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்களைப் பெற்றார்.

* அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. ‘தகவல் கோட்பாட்டின் தந்தை’ எனப் போற்றப்பட்ட கிளெவுட் எல்வுட் ஷெனான் 2001-ம் ஆண்டு 85-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்