ரோஜர் மூர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

சீனியர் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• லண்டனில் பிறந்தவர். அப்பா போல போலீஸாக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், ஓவியராகி, பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார். அதிலும் நிலைக்கவில்லை.

• பிறகு, புகைப்படக் கலைஞரான நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனாலும், பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள்.

• மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை துளிர்த்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். முதலில் தெரு நாடகங்கள், டிவி தொடர்களில் வாய்ப்பு வந்தது.

• 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் வெறுத்துப்போனவர் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். ‘டிராயிங் ரூம் டிடெக்டிவ்’, ‘தி செயின்ட்’ ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின.

• ஒருவழியாக 46 வயதில் கதாநாயகன் ஆனார். 1973-ல் வெளிவந்த ‘லிவ் அண்ட் லெட் டை’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார்.

• 1985 வரை ‘ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’, ‘ஏ வியூ டு எ கில்’ உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே நட்சத்திரம் ரோஜர்.

• படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்தது.

• ஜூனியர் ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடித்த படத்தில் வில்லனாக நடிப்பது இவரது தீராத ஆசை.

• டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் எழுதுவது என்று 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த முன்னாள் 007, தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லையாம்!

• தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். எல்லாவற்றையும்விட இந்த பணியே மிகுந்த மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்