கனடாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற படைப்பாளியும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆலிஸ் ஆன் மன்ரோ (Alice Ann Munro) பிறந்த தினம் இன்று (ஜூலை 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
கிழக்கு கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் விங்காம் என்ற பகுதியில் பிறந்தார் (1931). தந்தை விவசாயி. தாய் பள்ளி ஆசிரியை. தன் மகளைப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தினார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசமும் ஆங்கிலமும் பயின்றார்.
இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் புகழ் பெற முடியவில்லை. பத்திரிகைகளுக்கு போன வேகத்தில் பல படைப்புகள் திரும்பி வந்தன. ஆனாலும் தொடர்ந்து எழுதி வந்தார்.
1950-ம் ஆண்டில் ‘தி டைமன்ஷன்ஸ் ஆஃப் ஏ ஷாடோ’ என்ற இவரது முதல் நூல், பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் வெளியானது. படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டதால், 1951-ல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் விக்டோரியா மாநிலத்தில் குடியேறினார்.
1963-ல் அங்கு ‘மன்ரோஸ் புக்ஸ்’ என்ற புத்தகக் கடையைத் தொடங்கினார். 1968-ல் ‘டான்ஸ் ஆஃப் தி ஹாப்பி ஷேட்ஸ்’ என்ற இவரது முதல் கதைத் தொகுப்பு வெளிவந்தது. தொடர்ந்து ‘தி நியு யார்கர்’, ‘தி அட்லாண்டிக் மந்த்லி’ உள்ளிட்ட பல்வேறு பிரபலமான பத்திரிகைகளில் இவரது நூல்கள் வெளிவந்தன.
மனித வாழ்வின் சிக்கல்களை, சிக்கலற்ற எளிய நடையில் இவரது கதைகள் வெளிப்படுத்தின. ‘லைஃவ்ஸ் ஆஃப் கேர்ல்ஸ் அன்ட் வுமன்’ சிறுகதைத் தொகுப்பு 1971-ல் வெளிவந்தது. நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை விட தனது சிறுகதைகளுக்காகவே புகழ்பெற்றார். ‘ஹூ டு யு திங்க் யு ஆர்?’, ‘டூ மச் ஹாப்பினஸ்’, உள்ளிட்ட ஏராளமான கதைத் தொகுப்புகள் வெளிவந்தன.
13-க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. ‘ஹேட்ஷிப், ஃபிரன்ட்ஷிப், கோர்ட்ஷிப், லவ்ஷிப் மேரேஜ்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பின் அடிப்படையில் ‘அவே ஃபிரம் ஹர்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இவரது படைப்புகள் இலக்கிய ஆழம் நிறைந்தவை. 1970 முதல் இவரது படைப்புகளைக் கொண்டு பலர் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றனர். கனடாவின் புனைக் கதைகளுக்கான ஆளுநர் விருதை (Governor General's Award) மூன்று முறை வென்றுள்ளார்.
புனைக்கதையின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும் ‘கனடாவின் செக்கோவ்’ என்றும் புகழப்பட்டார். 2009-ம் ஆண்டுக்கான ‘மான் புக்கர்’ பன்னாட்டுப் பரிசையும் வென்றார். சமூகத்தில் நலிந்த பிரிவினரின் அவலங்களை வெளிப்படுத்திய இவரது சிறுகதைகளுக்காக, 2013-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற கனடாவின் முதல் பெண்மணி, உலக அளவில் 13-வது பெண்மணி என்ற பெருமை பெற்றார். அப்போது இவருக்கு வயது 82. இலக்கியப் பயணத்தில் நோபல் பரிசு தவிர ஏராளமான விருதுகள், பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
ஓ ஹென்றி விருது, எட்வர்ட் மெக்டோவெல் பதக்கம், டபிள்யு.ஹெச்.ஸ்மித் இலக்கிய விருது, கில்லர் பரிசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உலகின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகப் புகழ் பெற்றுள்ள ஆலிஸ் ஆன் மன்ரோ இன்று 86-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago