ஆர்.கே.நாராயணன் 10

By பூ.கொ.சரவணன்

இந்திய ஆங்கில இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆர்.கே.நாராயணின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயண், சென்னை புரசைவாக்கத்தில் பிறந்தவர். அப்பா பள்ளி ஆசிரியர். அவர் வேலை பார்த்து வந்த பள்ளியிலே நாராயண் படித்தார். இளம் பிராயத்தில் பெரும்பாலும் பாட்டியிடமே வளர்ந்தார்.

• கல்லூரி இளங்கலை நுழைவுத் தேர்வில் இருமுறை தோல்வி. அதில் ஒரு முறை ஆங்கிலத்தில் என்பதுதான் ஆச்சரியம். ஆசிரியர் வேலை சலித்துப்போக அப்போது பேனாவுடன் அமர்ந்தவரிடம் உருவானதுதான் ‘மால்குடி டேஸ்’.

• கோவையில் சகோதரியின் வீட்டிலிருந்தபோது கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ராஜம் மீது காதல் கொண்டார். முதலில் அவரது தந்தையை நட்பு பிடித்தவர், பின்பு ராஜத்தை திருமணம் செய்து கொண்டார்.

• ‘தி இந்து’விலும் ஆனந்த விகடனில் இருந்து வெளிவந்த ‘The merry’ இதழிலும் எழுதி வந்தார். அவரின் முதல் கதை வேர்க்கடலை உண்ண பாக்கெட் மணி இல்லாமல் அலையும் சிறுவனைப் பற்றியது. அக்கதைக்கு அவர் பெற்ற சன்மானம் 10 ரூபாய்.

• வருமானம் பெரிதாக இல்லாமல் இருந்த சூழலில் அவரின் ‘ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ்’ நாவல் ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்த அவரின் நண்பன் கிட்டு பூர்ணாவின் மூலம் பிரபல எழுத்தாளர் கிரஹாம் க்ரீன் வசம் போனது. அவர் அதை ஹாமிஷ் ஹாமில்டன் பதிப்பகத்தில் வெளியிட செய்தார். எளிமையான ஆங்கில நடை, சமூகத்தின் மீதான இயல்பான பார்வை இவையே அவரது எழுத்து நடை. “ஆர்.கே-வின் மால்குடி நகரில் எந்த நிகழ்வும் அர்த்தமில்லாமல் நிகழாது. அங்கே எந்தத் துயரத்துக்கும் விடிவு இல்லாமல் போகாது” என்பார் அமிதவ் கோஷ்.

• வீணை வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறார். அவரின் அமெரிக்க அனுபவங்களை ‘My Dateless Diary' என்றும், நினைவலைகளை ‘My Days' என்றும் பதிவு செய்துள்ளார்.

• ‘மால்குடி டேஸ்’ கதைகள் ஷங்கர் நாக் என்பவரால் தொலைக்காட்சி தொடர் ஆக்கப்பட்டது. தேவ் ஆனந்தின் நவ்கேதன் தயாரிப்பு நிறுவனம் ‘தி கைட்’ நாவலை ஹிந்தியில் படமாக எடுத்தது.

• அவரை ஆங்கில அறிவுலகுக்கு அறிமுகப்படுத்திய கிரஹாம் க்ரீன் இப்படி அவரின் எழுத்தைப்பற்றிச் சொன்னார்: “அவரின் படைப்புகள் அவரின் சொந்த பிராந்திய அனுபவத்தில் இருந்து வருபவை. அதனால் அவர் ஆங்கிலத்தில் எழுதினாலும் அது அமைதியான,தெளிவாக அமைந்தது. அந்த ஆங்கில நடை தமிழோடு மிகவும் நெருக்கமானது!”

• கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மண் இவரது இளைய சகோதரர். இருவருக்கும் 18 வருடங்கள் இடைவெளி. ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்திருக்கும் நாராயண் எல்லோரையும் சமமாக நடத்தும் பண்பு கொண்டவர். அவரது எழுத்துப் பயணமும் அரை நூற்றாண்டைக் கடந்தது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்