இத்தாலி அறிவியலாளர்
இத்தாலியின் அறிவியலாளரும் முதன்முதலாக இயற்கணிதத் தீர்வு வழங்கியவருமான ஜெரோலாமோ கார்டானோ (Gerolamo Cardano) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள பாவியா என்ற நகரில் பிறந்தார் (1501). தந்தை, வழக் கறிஞர். தன்னைப் போலவே மகனும் சட்டம் பயில வேண்டும் என்று அப்பா வற்புறுத்தினார். ஆனால், மகனுக்கோ அறிவியலி லும் தத்துவத்திலும் ஆர்வம் இருந்தது.
*அப்பாவின் பேச்சை மீறி படுவா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவத்தில் 1526-ல் பட்டம் பெற்றார். எதையும் வெளிப்படையாகப் பேசுவார். தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்காத இவருக்கு நண்பர்களும் அதிகம் இல்லை.
*சில காலம் தனிப்பட்ட முறையில் மருத்துவராகப் பணியாற்றினார். போதிய வருமானம் ஈட்ட முடியதாததால், சிறுசிறு கல்வி நிலையங்களில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். சூதாட்டம், சதுரங்கம் ஆட்டங்களில், கணித அறிவால் சாதுர்யமாக ஆடி வெற்றிபெற்று பணம் ஈட்டியுள்ளார்.
*அசாதாரண அறிவுக்கூர்மை கொண்ட இவர், அற்புதமான மருத்துவ சிகிச்சை அளித்து புகழ் பெற்றார். இவரது அறிவுத் திறனைப் புரிந்து கொண்ட செல்வாக்கு பெற்ற சிலரின் உதவியால் ‘காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ்’ கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது ‘தி பிராக்டிஸ் ஆஃப் அரித்மாடிக்’ மற்றும் ‘சிம்பிள் மென்சுரேஷன்’ என்ற இவரது இரண்டு நூல்கள் வெளியாகின.
*மருத்துவம், தத்துவம், ஜோதிடம், மெய்யியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதினார். டென்மார்க், ஸ்காட்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ் முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அதன் பிறகு பவியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் ஈருறுப்பு கெழு (binomial coefficients), ஈருறுப்புத் தேற்றம் (binomial theorem) மற்றும் நிகழ்தகவு ஆகியவற்றுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்த முக்கியமானவர்களுள் ஒருவர்.
*நிகழ்தகவு குறித்த ‘லீபர் டெ லூடோ அலியே’ என்ற நூலை 1560-ல் எழுதினார். இது இவரது மரணத்துக்குப் பிறகு வெளியானது. இதுதான் நிகழ்தகவு குறித்து சீராக எழுதப்பட்ட முதல் நூல். ‘இம்மார்டலிடேட்’, ‘ஆர்டிஸ் மாக்னியே’, ‘சிவே டி ரெகுலிஸ் அல்ஜீபிராசிஸ்’, ‘லிப்ரிஸ் ப்ரோபிரிஸ்’, ‘நெரோனிஸ் என்கோமியம்’, ‘மெத்தோடோ மெடின்டி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
*இயற்கணிதத்தைச் சார்ந்த முப்படியச் சமன்பாட்டுக்கு முதன் முதலாக இயற்கணிதத் தீர்வை வழங்கினார். அறிவியலிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இயற்கை அறிவியலின் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
*கார்டியன் கிரில்லே என்ற கிறிப்டோகிராஃபிக் சாதனம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்தும் மேம்படுத்தியும் உள்ளார்.
*இயற்கணிதம், கன அளவு மற்றும் நான்கு எண் சமன்பாடுகள் (quartic equations) உள்ளிட்ட பல்வேறு கணிதத் தீர்வுகளுக்கு இவர் அடித்தளம் இட்டிருந்தது, இவர் மரணமடைந்த பல ஆண்டு களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. முதன்முதலாகப் பூஜ்யத்துக் கும் குறைவான எதிர்மறை எண்களை முறையாகப்பயன்படுத்தியவர்.
*கணிதம், மருத்துவம், உயிரியல், இயற்பியல், வேதியியல், ஜோதிடம் வானியல் ஆகிய களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கிய மேதை ஜெரோலாமோ கார்டானோ 1576-ம் ஆண்டு 75-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago