பிரான்ஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர்
ஒளிப்படவியல் முன்னோடியாகக் கருதப்படும் பிரான்ஸ் கண்டுபிடிப்பாளர் ஜோசப் நீசஃபர் நியெப்ஸ் (Joseph Nicephore Niepce) பிறந்த தினம் இன்று (மார்ச் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் முத்து:
* பிரான்ஸின் சாலோன் சர் சயோனே என்ற நகரில் (1765) பிறந்தார். அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், கத்தோலிக்க மதபோதகர் பணிக்காக கல்வி பயின்றார். சில காலம் பாதிரியாராகப் பணியாற்றினார்.
* ராணுவத்தில் இணைந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து வெளி யேற்றப்பட்டு, மீண்டும் சொந்த ஊரில் குடியேறினார். ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிரான்ஸின் நைஸ் மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டார். ஆராய்ச்சிகள் மீதான ஆர்வத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.
* தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் வழக்கம் இவருக்கு கிடையாது. புதிது புதிதாக எதையாவது செய்துகொண்டே இருப்பார். சகோதரருடன் இணைந்து, உள்ளே எரிகிற இன்ஜினை உருவாக்கினார். பெரிய படகுகளுக்கான மோட்டாரை உருவாக்கினார். தனது முதல் கேமராவையும் வடிவமைத்தார்.
* சகோதரர் லண்டன் சென்றுவிட, இவர் மட்டும் உள்ளூரில் தங்கினார். அப்போது, பிரான்ஸில் பலருக்கும் பொழுதுபோக்காக மாறிய லித்தோகிராபியில் (கல் அச்சுக் கலை) ஆர்வம் கொண்டார். நவீன முறையாக கருதப்பட்ட அச்சுத் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* படம் வரையும் திறமை இல்லாததாலும், கைநடுக்கம் இருந்ததாலும் மகனிடம் படங்கள் வரைந்து கொடுக்கச் சொன்னார். அவற்றை ஒரு ப்ளேட்டில் வைத்து அதில் காரீயத்துடன் பல்வேறு ஒளி உணர் ரசாயனக் கலவையைப் பூசினார். இம்முறையில், அதிக நேரம் நீடித்திருக்கும் ஒளிப் படங்களை உருவாக்கினார்.
* மகனுக்கு ராணுவப் பணிக்கான அழைப்பு வந்ததால் படம் வரைவதற்கு பதிலாக, இயற்கையில் இருந்தே நேரடியாக பிம்பங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார். இதற்காக வெள்ளி குளோரைட், நிலக்கீல் (Asphalt) ஆகியவற்றைப் பயன்படுத்தினார். இத்தகைய பிம்பங்களை ‘ஹீலியோகிராபி’ என்று குறிப்பிட்டார். இவை குறுகிய காலமே நீடித்தன.
* பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, நிலைத்திருக்கக்கூடிய ஒரு ஓவியத்தை 1824-ல் படமெடுத்தார். கேமரா கரும்பெட்டியை (Camera Obscura) பயன்படுத்தி, நிரந்தரமாக நீடித்திருக்கும் ஒரு புகைப்படத்தை 1826-ல் முதன்முதலாக எடுத்தார். அதுதான் உலகின் முதல் நீடித்து நிற்கும் புகைப்படமாகக் கருதப்படுகிறது.
* இதை அரசுக்கு விற்றார். அதற்காக, பிரான்ஸ் அரசு இவருக்கு 6,000 பிராங்க்குகளை இறக்கும் வரை வழங்கியது. இவர் இறந்த பிறகு, இவரது வாரிசுகளுக்கு 4,000 பிராங்க்குகளை வழங்கியது. மனநிலை பாதிக்கப்பட்ட அண்ணன் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக குடும்பச் சொத்து முழுவதும் பறிபோனது. ஆனாலும் ஆராய்ச்சி முனைப்புகளை இவர் கைவிடவில்லை.
* இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த லூயில் டாகுவேரெ என்பவருடன் இணைந்து, கூட்டாகப் புகைப்படம் எடுக்கும் வழிமுறை களை மேம்படுத்தினார். பிற்கால அறிஞர்கள் இவரது பங்களிப்பு களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தனர். 1825-ல் இவர் எடுத்ததாக கருதப்பட்ட முதல் புகைப்படம் 2002-ல் தேடிக் கண்டறியப்பட்டது.
* அந்த புகைப்படம் ஏலம் விடப்பட்டு 4.50 லட்சம் யூரோவுக்கு விற்பனையானது. புகைப்படம் எடுக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் ஜோசப் நீசஃபர் நியெப்ஸ் 68-வது வயதில் (1833) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago