இமயமலைகளின் கும்பமேளா- லடாக் கலாச்சாரத்தை பறைசாற்றும் புத்த திருவிழா

By வி.தேவதாசன்

லடாக் பகுதியின் தொன்மையான கலாச் சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகை யில் இரண்டு வார கால புத்த திருவிழா, லேஹ் அருகேயுள்ள ஹெமிஸ் கிராமத் தில் தற்போது நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி, இமயமலைகளின் உச்சியில் அமைந்துள்ள கலாச்சார செழுமைமிக்க பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்துக்கும் மேல் அமைந்துள்ள இந்த பகுதியில் புத்த மதம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது. குறிப்பாக புத்த மத திருக்பா வம்சத் தினரின் பல நூற்றாண்டுகள் தொன்மை யான புத்த மடாலயங்கள் இங்கு ஏராள மாக உள்ளன. அந்த வரிசையில் லேஹ் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹெமிஸ் புத்த மடாலயம், உலகெங்கும் உள்ள புத்த மதத்தினரை மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் கவரும் பிரசித்தி பெற்ற இடமாக திகழ்கிறது.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்று விளங்கிய புத்த மத பேரறிஞர் நரோபாவின் பெயரில் ஹெமிஸ் மடாலயத் தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்த திரு விழா நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த திருவிழா ‘இமயமலை களின் கும்பமேளா’ என போற்றப்படுகிறது. நரோபாவின் 1000-வது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த ஆண்டின் ‘இமயமலை களின் கும்பமேளா’ கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சிந்து நதியின் மேற்கே, இமயமலை சிகரங்களுக்கு இடையே வீற்றிருக்கும் ஹெமிஸ் புத்த மடாலயத்தில் லடாக் பகுதி யைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்களைத் தவிர, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான திருக்பா வம்சத்தினர் இதற் காக குவிந்துள்ளனர். பல்வேறு நாடு களிலிருந்து ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் இங்கு வந்துள்ளனர்.

நரோபா காலத்தில் அவர் பயன்படுத் திய, எலும்புகளால் செய்யப்பட்ட வேலைப்பாடு மிக்க 6 ஆபரணங்கள் திருக்பா வம்சத்தினரின் மிக முக்கிய வழிபாட்டு பொருள்களாக திகழ்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நரோபா திருவிழாவில் மட்டுமே இவை பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படும். ஹெமிஸ் மடாலயத்தில் இருந்து நரோபா அரண்மனைக்கு இந்த 6 ஆபரணங்களையும் கொண்டு வரும் மிக முக்கிய நிகழ்வு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் நரேந்தர் நாத் வோரா முன்னிலையில் திருக்பா வம்சத்தின் தலைவர் கேயல்வாங் திருக்பா நரோபா திருவிழாவைத் தொடங்கி வைத்தார். கடந்த சனிக்கிழமை முதல் நரோபா அரண்மனையில் எலும்புகளால் ஆன 6 ஆபரணங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.

60 அடி உயர கொடி

புத்தரின் உருவத்துடன் கூடிய பட்டுக் கொடியை ஏற்றுவது இந்த திருவிழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வாகும். சுமார் 60 அடி உயரமும், 20 அடி அகலமும் கொண்ட இந்த கொடி மிக உயர்ந்த பட்டுத் துணியைக் கொண்டு கையால் நெய் யப்பட்டது. கையால் மேற்கொள்ளப்பட்ட பல வண்ண வேலைப்பாடுகள் மிகுந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இந்த கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த திருவிழாவின்போது புத்த துறவி கள் பங்கேற்கும் சிறப்பு வழிபாடுகள், நரோபாவின் தத்துவங்களை போதிக்கும் வகுப்புகள், தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப புத்த மத கொள்கைகள், தத்துவங்களை நவீனப்படுத்துவது பற்றிய அறிஞர்களின் விவாதங்கள் தினமும் காலையில் நடைபெறுகின்றன.

கலை நிகழ்ச்சிகள்

தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை லடாக்கியர்களின் கலாச்சார உன்னதத்தைப் போற்றும் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்த மத பெண் துறவிகளின் குங்பூ நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பூடான், திபெத் புத்த துறவிகளின் பழங்குடியின கலைநிகழ்ச்சிகளைக் காண காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

தொன்மை கலாச்சாரத்தை போற்றும் அதே நேரத்தில் நவீனத்தின் வாய்ப்புகளை பயன்படுத்துவதிலும் திருக்பா வம்சத்தினர் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற லேசர் ஒளி நடனம், லடாக்கியர்களின் பாரம்பரிய உடையில் சனிக்கிழமை நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்திய திரையுலகில் இரட்டையர் களாக வலம் வரும் விஷால் சேகர், 3 பேர் கூட்டணியாக திகழும் ஷங்கர் ஈஷான் லாய், பிரபல இரட்டைக் குரல் பாடகர் சாய்ராம் அய்யர், ஷக்தி மோகன் என பாலிவுட் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் இந்த ஆண்டு நரோபா திருவிழாவில் இடம்பெற்றன.

சிவன், விநாயகர், அனுமார் என இந்து மதக் கடவுள்களைப் போற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதன் மூலம், நரோபா திருவிழா மத நல்லிணக்கத்தை தூக்கிப் பிடிக்கும் உன்னத விழா என்பதை உணர்த்தியது. நள்ளிரவு நேரத்தில் 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் வெப்ப நிலை நிலவும் நேரத்திலும், தினமும் கலைநிகழ்ச்சிகள் முடியும் வரை உற்சாகக் குரல் எழுப்பி, ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாட்டங்களில் லடாக் கியர்கள் பங்கேற்றனர்.

ஒட்டுமொத்த திருவிழா நிகழ்வுகளை யும் வழிநடத்திய வம்சத் தலைவர் கேயல்வாங் திருக்பா இல்லாமல் ஒரு கலைநிகழ்ச்சி கூட நடைபெறவில்லை. நிகழ்ச்சி தொடங்கும் சரியான நேரத்தில் வருவதுடன், தினமும் நள்ளிரவு நிகழ்ச்சிகள் முடியும் வரை அமர்ந்திருந்து கலைஞர்களையும், துறவிகளையும், மக்களையும் உற்சாகப்படுத்தியதுடன், சில நேரங்களில் அவரும் மக்களுடன் சேர்ந்து நடனமாடினார். இத்தகைய பல காட்சிகளைக் கண்டு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர்கள் வியப்படைந்தனர்.

சைக்கிள் பயணம்

புத்த பெண் துறவிகள் 500 பேர் பங்கேற்ற 2,500 கி.மீ. தொலைவு சைக்கிள் பயணம் இந்த திருவிழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வாகும். நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து கடந்த ஜூலை முதல் வாரத்தில் பயணத்தை தொடங்கிய இவர்கள், இரண்டு மாத காலம் பயணித்து நரோபா திருவிழா இடத்துக்கு வந்து சேர்ந்தனர். உலக அமைதி, பாலின சமத்துவம் ஆகியவற்றை வலி யுறுத்தி இவர்களின் இந்த பயணம் அமைந்தது.

பாத யாத்திரை

திருவிழாவின் நிறைவாக செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை லடாக்கின் தொலைதூர கிரா மங்களுக்கும் செல்லும் வகையில் பாத யாத்திரை நடைபெற உள்ளது. இமயமலை களின் சூழலியல் பாதுகாப்பு, மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருள்களால் இமயமலை பகுதிகள் எதிர்கொண்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவை குறித்து லடாக்கியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பாத யாத்திரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த திருவிழா நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த கேயல்வாங் திருக்பா, “புத்தம் என்பது சூழலியல் சார்ந் தது. மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஆண் பெண் சமத்துவத்தையும் வலி யுறுத்துவது. மனித வாழ்வியலின் இந்த உன்னத நோக்கங்களை மக்களிடையே மென்மேலும் வளர்க்கும் வகையில் 2016-ம் ஆண்டின் நரோபா திருவிழா கொண்டாட் டங்கள் நடைபெறுகின்றன” என்றார்.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் இடைவிடாது முழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத் தில், அந்த சம்பவங்களின் தாக்கங்கள் எதுவுமின்றி, உலகுக்கு அகிம்சையை யும், அமைதியையும் வலியுறுத்திய புத்த பிரானை லடாக்கியர்கள் உற் சாகத்துடன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்