நாடகாசிரியர், கவிஞர், ஓவியர்
புகழ்பெற்ற நாடகாசிரியர், இசைக்கலைஞர், பத்திரிகையாளர், ஓவியக் கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோதிரிந்திரநாத் தாகூர் (Jyotirindranath Tagore) பிறந்த தினம் இன்று (மே 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கல்கத்தாவில் பிறந்தார் (1849). தந்தை தத்துவவாதி; மத சீர்திருத்தவாதி. செயின்ட் பால் பள்ளியிலும் மான்டேகு பள்ளியிலும் பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே நாடகத்தால் வசீகரிக்கப்பட்ட இவர், ஒரு ஹோம் தியேட்டர் குழுவைத் தொடங்கி நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார்.
* பிரசிடென்சி கல்லூரியில் ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ் தேர்வுக்காக படிக்கும் போது நாடகத் துறையில் ஈடுபடுவது என முடிவு செய்தார். உடனே படிப்பை நிறுத்திவிட்டார். இவரது உறவுக்காரர் ஒருவர் தொடங்கிய ஜோராசங்கோ நாட்டியசாலாவில் இவரது முதல் நாடகம் ‘கிருஷ்ணகுமாரி’ அரங்கேறியது. அதில் இவர் நடிக்கவும் செய்தார்.
* இவரது பெரும்பாலான கவிதைகள் மற்றும் நாடகங்களில் தேசபத்தி உணர்வு அதிகமாக இருந்ததோடு நையாண்டியும் காணப்பட்டது. தனது நாடகங்களை அரங்கேற்ற 1874-ல் ‘பிட்வாஜ்ஜன் சமாகம்’ என்ற ஒரு கலாச்சார அமைப்பை நிறுவினார். இதில் இவரது தம்பி ரவீந்திரநாத் தாகூரின் சில நாடகங்களும் நாட்டிய நாடகங்களும் அரங்கேறின.
* புகழ்பெற்ற இந்து மேளா அமைப்பின் செயலராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். இவரது நாடகங்கள் அதிக அளவில் பிரபலமடைந்தன. வர்த்தக ரீதியிலும் வெற்றிகரமாகத் திகழ்ந்தன. 1867-ல் தன் அண்ணனுடன் அகமதாபாத்தில் வசித்தபோது, சிதார் வாசிக்கவும், ஓவியம் வரையவும், பிரெஞ்ச், மராத்தி மொழிகளையும் கற்றார்.
* மேலும் சிறுவயது முதலேயே இசை பயின்ற இவர், தனது இசை, நாட்டிய நாடகங்களுக்கு இவரே இசையமைத்தார். இசை தொடர்பான செய்திகளுக்காகவே ‘பீணாபந்தினி’ என்ற இதழைத் தொடங்கி நடத்திவந்தார். புகழ்பெற்ற இசை மேதைகளின் பாடல்களை வங்காள இசைக்குறிப்புகளோடு ‘ஸ்வரலிபிகிதிமாலா’ என்ற நூலாக வெளியிட்டார்.
* பல்வேறு மொழிகளின் தலைசிறந்த நாடகங்கள், சிறுகதைகள், வரலாறு, தத்துவம் மற்றும் பயண நூல்களைத் தன் தாய்மொழியான வங்காளத்தில் மொழிபெயர்த்தார். 1899 முதல் 1904 வரையிலான காலகட்டத்தில் சமஸ்கிருத மொழியின் 17 மிக முக்கிய நாடகங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். இதில் காளிதாசரின் ‘சாகுந்தலம்’ மற்றும் சுதாரக்கின் ‘மிர்ச்சகடிகா’வும் குறிப்பிடத்தக்கவை.
* திலகரின் ‘கீதாரகஸ்யா’வை மராத்தியிலிருந்து மொழிபெயர்த்தார். தலைசிறந்த ஓவியருமான இவர், 2000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
* இவரது அத்தனை படைப்புகளும் 46 தொகுதிகளாக வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. ‘புருபிக்ரம்’, ‘சரோஜினி’, ‘அஸ்ருமதி’, ‘கிஞ்சித் ஜலாஜோக்’ உள்ளிட்ட இவரது நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
* தனது ஒன்பதே வயதான மனைவிக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். இவரது தம்பியும் உலகப் புகழ்பெற்ற படைப்பாளருமான ரவீந்திரநாத் தாகூரின் திறன்கள் வெளிப்படுவதற்கு முக்கிய பங்கு வகித்தார். ஆதி பிரம்மோ சமாஜின் செயலராகப் பணியாற்றினார். ஆதி பிரம்மோ சமாஜ் சங்கீத வித்யாலயா தொடங்கினார்.
* ஏராளமான ஆன்மிக, தேசபக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இலக்கியம், இசை, கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம், நாடகம் எனப் பல்வேறு களங்களில் முத்திரைப் பதித்த ஜோதிரிந்திரநாத் தாகூர் 1925-ம் ஆண்டு 76-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago