பில் வாட்டர்சன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பில் வாட்டர்சன் - உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கார்ட்டூனிஸ்ட்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பில் வாட்டர்சன் (Bill Watterson) பிறந்தநாள் இன்று (ஜூலை 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் வாஷிங் டன் நகரில் (1958) பிறந்தார். முழு பெயர் வில்லியம் பாய்டு வாட்டர்சன். 6 வயதில் குடும்பம் ஓஹியோ மாநிலத்தில் குடியேறியது. சிறு வயதில் இவர் வரைந்த ஓவியங்கள் பள்ளி இதழ்களிலும் ஆண்டு புத்தகத்திலும் வெளியாயின.

* உலகப் புகழ்பெற்ற பீநட்ஸ், போகோ, கிரேசி கேட் உள்ளிட்ட கார்ட்டூன் சித்திரங்களால் கவரப்பட்டார். படித்து முடித்ததும் தொழில்முறை கார்ட்டூனிஸ்ட் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார். அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, 'சின்சினாட்டி போஸ்ட்' நாளிதழில் கார்ட்டூனிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தார்.

* அரசியலில் இவருக்கு ஆர்வம் இல்லாததால், இவரது கார்ட்டூன்கள் பெரிதாக எடுபடவில்லை. இதனால், அந்த வேலையோடு சேர்த்து, அரசியல் கார்ட்டூனுக்கும் முழுக்கு போட்டு, காமிக் கதைகள் வரைந்தார்.

* நாளிதழ்களுக்கு அவர் அனுப்பிய கதைகள், போன வேகத்தில் திரும்பின. வேறு வழியின்றி கடைகளுக்கு விளம்பர டிசைன் உருவாக்கித் தந்தார். 'யுனைட்டெட் பிரஸ் சிண்டிகேட்' நிறுவனத்துக்கு பல கார்ட்டூன்களை வரைந்து கொடுத்தார். அதில் 'லிட்டில் பிரதர்' என்ற படைப்பில் ஒரு பொடியனும் புலி பொம்மையும் இருந்தது.

* 'அவர்கள் இருவரையும் தனியாக வரைந்துகொடுங்கள்' என்று அந்த நிறுவனம் கேட்க, அதனால் உருவானதுதான் உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களான 'கால்வின் அண்டு ஹாப்ஸ்' (Ca*vin and Hobbes).

* புத்திசாலித்தனம், கற்பனைத்திறன், குறும்புத்தனம் நிறைந்த 6 வயது சிறுவன் கால்வின் மற்றும் அவனிடம் இருந்த 'ஹாப்ஸ்' பொம்மைப் புலி. இவர்களது குறும்பு, லூட்டிகளை மையப்படுத்தி படக்கதையை உருவாக்கினார். 1985-ல் நாளிதழில் முதல்முறையாக 'கால்வின் அண்டு ஹாப்ஸ்' இடம்பெற்றனர். ஒரே ஆண்டில் 250 நாளிதழ்களில் வலம்வரத் தொடங்கினர். 1995-க்குள் இது 2,400 பத்திரிகைகளில் இடம்பெற்றது.

* இந்த படக்கதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு, 8 புத்தகங்கள் வெளியாகி, 5 கோடி பிரதிகள் விற்றுள்ளன. அனைத்து கதைகளும் தொகுக்கப்பட்டு, 'தி கம்ப்ளீட் கால்வின் அண்டு ஹாப்ஸ்' என்ற 1,440 பக்கப் புத்தகம் 2005-ல் வெளியானது. இது உலகம் முழுவதும் பல நாடுகளில், பல மொழிகளில் வெளிவந்து சாதனை படைத்தது.

* ஓவியக்கலையின் பிற பாணிகளையும் உருவாக்க விரும்புவதாகக் கூறி, கால்வின் படக்கதைகளை நிறுத்திய வாட்டர்சன், இயற்கை ஓவியங்களில் கவனம் செலுத்தினார். இன்றும் பல நாடுகளில், பல நாளிதழ்களில் மறுபதிப்புகளாக 'கால்வின் ஹாப்ஸ்' உலா வருகின்றனர்.

* அமெரிக்க தேசிய கார்ட்டூன் சொசைட்டி ரூபன் விருது, தேசிய கார்ட்டூன் கலைஞர்களின் கூட்டமைப்பு விருது, ஹார்வே விருது, ஆடம்சன் விருது, ஸ்புரோயிங் விருது, மேக்ஸ் அண்ட் மோரிட்ஸ் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* தற்போது 58 வயதாகும் பில் வாட்டர்சன், அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பெர்க்லி ப்ரீத்துடன் இணைந்து 'தி ஃபிரான்சிஸ் ஓவர் டு மை அட்மினிஸ்ட்ரேஷன்' என்ற புதிய காமிக் படக்கதைக்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்