நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்
ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான வில்ஹம் கார்ல் வீன் (Wilhelm Carl Wien) பிறந்த தினம் இன்று (ஜனவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரஷ்யாவின் காஃப்கன் (இன்றைய ரஷ்யா) என்ற இடத்தில் பிறந்தார் (1864). இவரது முழுப்பெயர், வில்ஹம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃபிரிட்ஸ் பிரான்ஸ் வீன். 1866-ல் குடும்பம் ராஸ்டெம்போர்க் என்ற இடத்துக்குக் குடியேறியது. வரலாறு, கணிதம், அறிவியல் மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கினார்.
* கோட்டிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் பெர்லின் பல்கலைக்கழகங்களில் கணிதமும் இயற்கை அறிவியலும் கற்றார். இரண்டாண்டுகள், ஒரு அறிவியல் அறிஞரின் ஆய்வுக்கூடத்தில் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார்.
* உலோகங்களில் உண்டாகும் ஒளியின் விளிம்பு விளைவு (Diffraction of light), ஒளி விலகலின்போது பல்வேறு பொருட்க ளால் வண்ணங்களில் ஏற்படும் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங் கள் குறித்து ஆராய்ந்து 1886-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
* ஆக்சென் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தான் ஏற்கெனவே பணியாற்றி வந்த இயற்பியல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தின் தலைவராகப் பதவி ஏற்றார். 1900-ல் கீஸன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில் நீரியக்கவியல் குறித்து பாடப்புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அயனியாக்க வாயு குறித்து ஆராய்ந்தபோது, ஹைட்ரஜன் அணுவுக்கு சமமான நிறை கொண்ட ஒரு நேர்மறை (possitive) துகளை அடையாளம் கண்டார். இதன் மூலம் பெரிய அளவிலான நிறமாலையியலுக்கான (mass spectrometry) அடித்தளமிட்டார். இவர் அடையாளம் கண்ட துகள் ஏற்கப்பட்டு, ‘புரோட்டான்’ என்று பெயரிடப்பட்டது.
* வெப்ப இயக்கவியல் வெப்பக் கதிர்வீச்சுக்கான விதிகள் பற்றிய கோட்பாடுகளிலும் வெற்றிடத்தில் மின்னிறக்கம் (electric discharge) நிகழ்வது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். வெப்பவியல், மின்காந்தவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வீனின் இடப்பெயற்சி விதியை உருவாக்கினார் (Wien's displacement law). 1898-ல் கால்வாய்க் கதிர்கள் (canal rays) குறித்து ஆராய்ந்தார்.
* மேலும் நேர்மறை - மின்னேற்றம் கொண்ட துகள்களான இவை எலக்ட்ரான்களைவிட லேசானவை என்பதையும் அறிந்தார். அணுக்கரு எதிர்வினைகளால் வெளியிடப்படும் ஆற்றல்களைக் கணக்கிடுவதற்குத் தேவையான பெருந்திரளான பல்வேறு அணுக்கள் மற்றும் அவற்றின் ஐசோடோப்களைத் துல்லியமாக அளவிடுவதற்கு இந்த முறை உதவியது.
* இயக்கவியலுக்கு அடிப்படையாக மின்காந்த சாத்தியம் குறித்து ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டார். மேலும், நீர்ம இயக்கவியல், மின்காந்த அடிப்படையில் இயந்திரவியல் என்ற கோட்பாட்டு ஆய்வு, நேர்மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகள், நியுட்டனின் இயற்பியல் கோட்பாடுகள், துகள் கற்றை இயற்பியல் (Mass spectroscopy) ஆய்வுகள் உள்ளிட்ட ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டார்.
* வெப்பக்கதிர் வீச்சு குறித்தப் பங்கீட்டு விதிகளையும் உருவாக்கினார். வெப்பக் கதிர்வீச்சு பற்றிய தனது ஆய்வுகளுக்காக 1911-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். 1920-ல் மியுனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
* பெர்லின் அகாடமி ஆஃப் சயின்ஸ், கோட்டிங்கன் அகாடமி ஆஃப் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் அமைப்புகளில் கவுரவ உறுப்பினராக செயல்பட்டார். வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் மகத்தான பங்களிப்பை வழங்கிய வில்ஹம் கார்ல் வீன் 1928-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 64-ம் வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
25 days ago