விடுதலை வீரர், சமூக சேவகர்
‘ராஜரிஷி’ என போற்றப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் புருஷோத்தம் தாஸ் டாண்டன் (Purushottam Das Tandon) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l உத்தரப் பிரதேச மாநிலம் அலகா பாத்தில் (1882) பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் திருமணம் செய்து வைத்தனர். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தவர், பிறகு தீவிர அரசியலில் இறங்கினார்.
l அலகாபாத் பல்கலைக்கழகத்தின் மியூர் சென்ட்ரல் கல்லூரியில் சேர்ந்தார். புரட்சி நடவடிக்கைகளால் ஈடுபட்டதால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கஷ்டப்பட்டு படித்து 1904-ல் சட்டத்தில் பட்டம் பெற்றார். வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
l வங்கப் பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார். சுதேசி விரதம் பூண்டார். அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தார். வக்கீல் தொழிலைக் கைவிட்டு, சுதந்திரப் போராட் டத்தில் முழுமூச்சாக இறங்கினார். கோபாலகிருஷ்ண கோகலேயின் பாதுகாவலர் போல காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்றார்.
l இந்தி மொழி, இலக்கியம், மதம், கலாச்சாரம், அரசியல், சமூகம் குறித்து பத்திரிகைகள், இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் பிரபலமானவை. ஏராளமான கவிதைகளும் எழுதினார்.
l ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். 1931-ல் விவசாயிகள் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1934-ல் பிஹார் மாகாண கிஸான் சபா தலைவராக செயல்பட்டார். லாலா லஜபதிராயின் ‘லோக் சேவக் மண்டல்’ சேவை அமைப்பில் இணைந்தார்.
l உத்தரப் பிரதேச சட்டமன்ற சபாநாயகராக 1937 முதல் 1950 வரை பணியாற்றினார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இந்தப் பிரிவினை, இந்து - முஸ்லிம் இரு பிரிவினருக்குமே எந்த பலனையும் தராது’ என்று காங்கிரஸ் கூட்டத்தில் வாதிட்டார்.
l நாட்டில் நிலவும் ஆங்கில மோகத்துக்கு முடிவுகட்ட இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வலியுறுத்தினார். வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக ஏற்குமாறும் வலியுறுத்தினார். நாட்டின் விடுதலைக்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழி என்ற அந்தஸ்து பெற முக்கியப் பங்காற்றினார்.
l ‘இந்தி வித்யாபீட்’ என்ற அமைப்பை நிறுவினார். இதன்மூலம் தென் மாநிலங்களிலும் இந்தி மொழி பரவியது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
l காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-ல் மக்களவைக்கும் 1956-ல் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சமூக, அரசியல் வாழ்க்கையில் புதிய விழிப்புணர்வு, புதிய அலை, புதிய புரட்சியை ஏற்படுத்திய கர்மயோகி எனப் போற்றப்பட்டார்.
l மக்களால் ‘ராஜரிஷி’ என அழைக்கப்பட்ட இவருக்கு 1961-ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது. அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவர், சிறந்த சமூக சேவகர், பத்திரிகையாளர், சிறந்த பேச்சாளர் என பல்வேறு களங்களில் முத்திரை பதித்த புருஷோத்தம் தாஸ் டாண்டன் 80-வது வயதில் (1962) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago