இதுதான் நான் 79: இது நம்ம ஸ்டைல்!

By பிரபுதேவா

எப்பவுமே என்னை அணுகுவது ரொம்ப ஈஸி. எந்த ஒரு விஷயமானாலும் இது பண்ண முடி யும், இது பண்ண முடியாதுன்னு உடனே சொல் லிடுவேன். அப்புறம் வாங்க, இப்போ வாங்கன்னு இழுத்தடிக்கிறதெல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக் காது. உதாரணமா, ஒரு கதை சொல்லணும்னு யாரா வது என்னை சந்திக்க நினைக்கிறப்ப, சில நேரங் கள்ல என்னை சந்திக்க ரெண்டு, மூணு மாசமானா, நிஜமாவே நான் வெளியூரு இல்லேன்னா வெளி நாடுன்னு எதாவது தவிர்க்க முடியாத வேலையில இருந்திருப்பேன். மற்றபடி சந்திக்க முடியாததுக்கு வேற எந்தக் காரணமும் இருக்காது.

கதை சொல்ற விஷயத்தைப் பற்றி பேசுறப்ப, இயக்குநரா நான் ஒரு படத்தை எப்படி ஆரம்பிச்சு எப்படி முடிக்கிறேன்னு இங்கே பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்.

ஒரு இயக்குநரா கதை சொல்றப்ப, ஒண்ணு தயா ரிப்பாளர் வழியாப் போவோம். இல்லேன்னா ஹீரோ மூலமா ஒரு கதையை ஓ.கே. வாங்கி படம் பண்றது வழக்கம். அப்படித்தான் எனக்கும் அமையும். நான் இப்போ வரைக்கும் நேரடியா ஒரு கதையை எடுத் துப் படம் செய்திருக்கேன். சில நேரத்துல ரீமேக் படமும் செய்திருக்கேன். சில படங்களோட மையக் கரு என்னோடதாயிருக்கும். அந்த ஐடியாவை கதா சிரியரை வெச்சி அதற்குத் திரைக்கதை அமைச்சு பட மும் எடுத்திருக்கேன். ஆனா, முழுமையா நானே ஒரு கதை ரெடி செஞ்சு, அதற்குத் திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி படம் பண்ணியதே இல்லை. என்னோட நம்பிக்கை என்னன்னா… டயலாக் ரைட்டர் தனி, கதாசிரியர் தனி, டைரக்டர் தனின்னு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. இப்போ கதை, திரைக்கதை, வசனம், எல்லாத்தையும் டைரக்டரே பண்ணிடுறாங்க. அதனால சினிமாவுல கதாசிரியர் நிறையப் பேர் இல்லாமலே போயிட்டாங்க. இதை தப்புன்னு நான் சொல்லவில்லை. தனித் தனியா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.

எப்பவுமே நான் ஒரு கதையை ரெடி பண்றப்ப, அது நமக்கு மட்டும் பிடிச்சாப் போதும்னு இருக் கவே மாட்டேன். அது தயாரிப்பாளர், நடிகர், கேமரா மேன், ஆர்ட் டைரக்டர், மியூசிக் டைரக்டர், எடிட்டர், அசோஸியேட் டைரக்டர்ஸ்னு இப்படி எல்லாருக்கும் பிடிக்கணும்கிறதுதான் என் ஆசை. அதே மாதிரி, சினிமா சம்பந்தமே இல்லாத அமெரிக்காவுல இருக் குற என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்கிட்டக்கூட போன்ல கதையைச் சொல்வேன். அதில் ஒருத்தன் கதை நல்லா இருக்குன்னு சொல்வான். இன்னொருத்தன் இந்த இடத்தை மாத்தினா இன்னும் பெட்டரா இருக்கும்னு சொல்வான். அதையும் நோட் செஞ்சி விவாதிப்பேன்.

இப்போ அடுத்த மாசம் ஷூட்டிங் போகப் போற ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தோட கதை யைக் கூட இந்த மாதிரிதான் ரெடி பண்றேன். நான் எங்கேயெல்லாம் டிராவல் செய்றேனோ, அங்கே யெல்லாம் ஸ்கிரிப்ட் ரைட்டரையும் கூடவே இருக்க வெச்சி, கதையைப் பற்றி பேசிட்டே இருப்பேன். பத்து நாட்களுக்கும் மேல யோசிச்சி யோசிச்சி ஒரு ஐடியாவை பிடிச்சிருப்போம். யாராவது ஒருத்தர் வந்து ‘அது இன்னும் பெட்டரா இருக்கலாமே’ன்னு சொன்னா, அதை அப்படியே விட்டுட்டு அடுத்து வேற ஒரு புது விஷயத்துக்குள்ளே போய்டுவோம். இந்த மாதிரி பண்றப்ப 80 சதவீதம் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரிதான் பண்ணுவேன். அதிலே எனக்கும் என்ன வேணும்னு தெரிஞ்சுடும். கடைசியில என் மனசுக்கு ஏத்த மாதிரிதான் பண்ணுவேன்.

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’படக் கதையைக் கடந்த ஆறேழு மாசங்களா பேசுறோம். ஆரம்பிக் கிறப்ப ஃபர்ஸ்ட் டிராஃப்ட்னு தொடங்கி இப்போ எட்டு, ஒன்பது டிராஃப்ட்னு வந்தாச்சு. ஷூட்டிங் போற வரைக்கும்கூட மெருகேத்திட்டே இருப் போம். ஏன், ஷூட்டிங் ஸ்பாட்லேயும் அது நடக்கும்.

அதே மாதிரி என் படங்களில் பாடல்களையும் ரசிகர்கள் தனியா எதிர்பார்க்கிறாங்க. ஒரு படத்தில் வர்ற எல்லாப் பாடல்களிலும் கதை சொன்னா பெட்டர். அதுக்காக எல்லா பாடல்களும் மாண்டேஜா இருந்து, அதில் டான்ஸே இல்லேன்னா அப்போ பாட்டு எதுக்கு? காட்சிகளாவே (ஸீன்) சொல்லிடலா மேன்னு எனக்குத் தோணும். படம்னாலே பாட்டு, ஃபைட், காமெடி, எமொஷனல், ரொமான்ஸ்னு எல்லாமும் இருக்கணும். அப்படித்தான் நாம பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கோம். இங்கிலீஷ் படம்னா டான்ஸ் படம் தனி, ஃபைட் படம் தனி, லவ் படம் தனின்னு ஒவ்வொண்ணா பிரிச்சுப் பண்ணுவாங்க. அது அவங்க ஸ்டைல். நமக்கு சாம்பார், தயிர், ரசம், ஸ்வீட், அப்பளம், ஊறுகாய், பொரியல்னு வேணும். இது நம்ம ஸ்டைல்!

டைரக்‌ஷன் பண்றப்ப எல்லாரும் ஒவ்வொரு விதமா காட்சிகளை ஹேண்டில் பண்ணுவாங்க. நான் ஒரு விதமா ஹேண்டில் பண்ணுவேன். ஒரு பாட்டை கேட்டவுடனே எனக்கு ஒரு விஷூவல் வரும். அதன்படிதான் டைரக்‌ஷன் பண்றப்ப அந் தக் காட்சியையும் பண்ணு வேன்.

உதாரணமா, ‘போக்கிரி’ படத்தில் விஜய்-அசின் சந்திக்கிற ஒரு ஸீன். நார்மலான காதல் காட்சி தான். ஹீரோ, ஹீரோயின் சந்திக் கிறக் காட்சியை ஆயிரம் படங்களில் பார்த் திருப்போம். இருந்தா லும் இதில் என்ன பண்ண லாம்னு யோசிச்சோம். அந்த மாதிரி யோசிக்கிறப்ப அவங்க ரெண்டு பேரும் ஒரு ரோடு சைடு டீக் கடை முன்னால் சந்திக்கிற மாதிரி ஸீன். ஹீரோவுக் குப் பின்னாடி நெருப்பு எரிஞ்சிட்டிருக்கும். ஹீரோயி னுக்கு பின்னாடி யாரோ ஒருத்தர் தண்ணியில லாரியை கிளீன் பண்ணிட்டிருப்பார். அப்போ, பொண்ணு ஜில்லுன்னு ஒரு ஃபீல்ல இருப்பாங்க. பையன் நெருப்பு மாதிரி ஒரு ஃபீலோட பொண் ணைப் பார்க்குற மாதிரி ஸீன் வெச்சோம். பக்கத்தில் வந்து ரெண்டு பேரும் கை கொடுத்துக்கறப்ப ஸ்கூல் பெல் அடிக்கும். ஏன்னா, நாங்க முன்னாடியே ரீரெக்கார்டிங் பிளான் பண்ணியதால், அந்தக் காட்சியில் ஸ்கூல் இருக்கிற மாதிரி வெச்சோம். கை கொடுத்துக்கும்போது அவங்க சந்தோஷமா இருக்குற மாதிரியே, படம் பார்க்கிற ஜனங்களுக்கும் அந்த ஃபீல் வரணும்னுகிறதுக்காக… ஸ்கூல் பெல் அடிச்சதும் பசங்க சந்தோஷத்தோட கத்திக் கிட்டே வெளியே ஓடி வருவாங்க. ஹீரோ, ஹீரோயின் மட்டும்னு இல்லாம சுத்தி இருக்குறவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்குற மாதிரி ஒரு சூழல் கிரியேட் செஞ்சோம். இந்த மாதிரி ஒரு ஸீன்ல மழை வேணுமா? வெயில் வேணுமா? பக்கத் தில் என்ன வண்டி இருக்கணும்? என்ன கலர் டிரெஸ்? சுத்தி யார் யாரெல்லாம் இருக் கணும்? என்ன சவுண்ட் வரணும்கிற வரைக் கும் யோசிப்போம்.

இதேமாதிரி ‘எங்கேயும் காதல்’ படத்துலேயும் ஒரு ஸீன் இருக்கு. அதைப் பற்றி அடுத்த வாரம் சொல்றேனே.

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்