தமிழகத்தில் இதுவரை நடந்திருக்கும் கோயில் சிலை திருட்டு சம்பவங் களில் நடராஜர் சிலையே பிர தானமாகக் கடத்தப்பட்டுள் ளது. நடராஜர் சிலைகள் மீதான ஈர்ப்பின் காரணத்தை விளக் கிய ஸ்தபதி மோகன்ராஜ், ‘‘இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் விஞ்ஞானத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்து வைத்திருந் தார்கள். அதை பின்னணியாக வைத்துதான் நடராஜர் சிலை கள் வடிக்கப்பட்டன. நடராஜர் சிலையானது படைத்தல் (உடுக் கையுடன் கூடிய வலது மேல் கை), காத்தல் (வலது முன் கை), அருளல் (பூமியை நோக்கி இறங்கும் இடது முன் கை), மறைத்தல் (இடது மேல் கை) ஆகிய அம்சங் களைச் சொல்கிறது.
அண்டத்தின் சுழற்சியை தனது சுழற்சி நடனத்தின் மூலம் உணர்த்தும் நடராஜர், ஐம்பூதங் களால் உண்டானது இந்த அண்டம் என்பதை புரிய வைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அள வில் பெரியதாக இருக்கும் நடராஜர் சிலையை வைத்திருப் பது பெருமை, அதனால் ஐஸ் வர்யம் பெருகும் என்று நம்பப் படுகிறது. இத்தகைய நம்பிக்கை கள் இருப்பதால் நடராஜரைக் கடத்தினால் கை நிறையக் காசு பார்க்கலாம் என்பது கடத்தல் காரர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது. ஆனால், ‘சிவன் சொத்து குலநாசம்’ என்பதை ஏனோ அவர்கள் மறந்து விடுகிறார்கள்’’ என்றார்.
இனி, பழவூர் சிலைக் கடத்தலுக்கு வருவோம். கபூருக்காக கடத்தப்பட்ட நாறும்பூநாதர் கோயில் சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் நகைக் கடைக்காரர் ஒருவரின் பொறுப்பில் இருந்தது. அந்த சிலையில் பெருமளவு தங்கம் அல்லது அதன் உள்ளே விலை உயர்ந்த கற்கள் இருக்கலாம் என நினைத்த அவர், நடராஜர் சிலையின் ஒரு கையை மட்டும் அறுத்து உருக்கினார். ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த எதுவும் இல்லை. நடராஜர் சிலையின் கை அறுக்கப்பட்ட விஷயத்தைக் கேட்டு, சிலைக் கடத்தல் ஏஜென்ட் கள் கொதித்துப் போனார்கள்.
ஒச்சமான (மூளி) சிலை சர்வதேச சந்தையில் விலை போகாதே என்று ஆத்திரப்பட்ட அவர்கள் நகைக் கடை புள்ளி யோடு மோதலில் ஈடுபடுகிறார்கள். இந்த மோதலில் நகைக் கடைப் புள்ளி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ஆக, தனது கையை அறுத்தவரின் கருவை அப்போதே அறுத்துவிட்டார் நட ராஜர்! கை அறுந்தாலும் பரவா யில்லை என்று சொல்லி பழவூர் நடராஜரை லண்டனுக்கு அனுப்பி வைக்கச் சொல்கிறார் கபூர்.
வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு சிதிலமடைந்து, அரைகுறையாக வரும் சிலை களை சரிசெய்து கொடுப்பதற் காகவே லண்டனில் கெட்டிக்காரக் கொல்லர் ஒருவரை கைவசம் வைத்திருக்கிறார் கபூர். லண்டனுக்குத் தருவிக்கப்பட்ட பழவூர் நடராஜருக்கு புதிதாக கை செய்து பொருத்திக் கொடுக்கிறார் அந்தக் கொல்லர். இதையடுத்து, பழவூர் நடராஜர் புதுப் பொழிவு பெற்று கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ ஏப்ரல் 2007 கேட்லாக்கில் இடம்பிடிக்கிறார். இந்தத் தக வலை ‘தி இந்தியா ப்ரைடு புரா ஜெக்ட்’ தன்னார்வலர்கள்தான் ஆதாரத்துடன் உறுதிப்படுத்து கிறார்கள்.
பழவூர் வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள்
பழவூர் சிலைக் கடத்தலின் பின்னணியில் நடந்த கொலை உட்பட பல உண்மைகள் மறைக் கப்பட்டன. இதில், போலீஸ் தரப் பிலும் சிலர் பலன் அடைந்ததை மறுப்பதற்கு இல்லை. இன் னொருபுறம், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளைக் காபந்து பண்ணவும்; வழக்கை நீர்த்துக் போகச் செய்யவும் சதி வேலைகள் நடந்தன. ஜெர்மனி யில் அக்டோபர் 30-ல் கபூர் கைது செய்யப்படுகிறார். அதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாக 8.8.11-ல் ஒரு செய்தி அறிக்கை வெளியிடுகிறது தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவு, பழமையான இரண்டு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டதாகச் சொன்னது அந்த அறிக்கை. அந்த இரண்டு சிலைகளில் ஒன்று பழவூர் கோயிலில் திருடுபோன நடராஜர் சிலை என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு சிலைகளும் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை? அவை எப்படி இங்கு வந்து சேர்ந்தன என்ற விவரம் எதையும் வெளியிடாத சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், ‘‘கலைப் பொருள் டீலர் ஒருவர் தன்னிடம் இருந்த இந்தத் திருட்டு சிலைகளை நன்னடத்தையின் காரணமாக தாமாகவே கொண்டுவந்து திருப்பி ஒப்படைத்துவிட்டார். அவர் யார் என்ற விவரத்தை வெளியில் சொல்லமுடியாது’’ என்று கெட்டிக்காரத்தனமாக மழுப்பினார்கள். (இந்த அறிக்கை வெளியானபோது பொன்.மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இல்லை என்பது முக்கியமான விஷயம்).
நடராஜரை ஒப்படைத்த சென்னைப் புள்ளி
பழவூரில் இருந்து கடத்தப்பட்ட கை அறுந்த நடராஜர் சிலை நியூயார்க்கில் கபூரிடம் இருந்த நிலையில், அது எப்படி எந்த வழியில் என்ன காரணத்துக்காக மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது இதுவரை விளங்காத மர்மம்!
சிலைகளை ஒப்படைத்தவருக் கும் சிலைக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்திருந்தும், சிலையை ஒப்படைத்த நபரை அன்றைக்கு சொல்லாமல் மறைத்தது போலீஸ். இப்போது சிக்கி இருக்கும் தீனதயாள்தான் பழவூர் நடராஜரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் மீண்டும் ஒப்படைத்தவர் என்பது இதுவரை வெளியிடப்படாத செய்தி.
இந்த உண்மைகள் மறைக் கப்பட்ட நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே, வில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் எப்படியோ முடிந்திருக்க வேண்டிய இந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்திருக்கும் பொன்.மாணிக்க வேல், தீனதயாளையும் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். குறுக்கீடுகள் இல்லாமல் விசாரணை நடந்தால் பழவூர் நடராஜர், நிச்சயம் பலரது தூக்கத்துக்கு வேட்டு வைப்பார்.
- சிலைகள் பேசும்.. | ‘The India Pride Project’ உதவியுடன்..
முந்தைய அத்தியாயம்: > சிலை சிலையாம் காரணமாம் - 13: ஐம்பொன் சிலையில் தங்கம் இருக்கிறதா?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago