ஹியுகோ மரீ டி வ்ரீஸ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

டச்சு நாட்டு உயிரியியலாளர்

டச்சு நாட்டைச் சேர்ந்த உயிரியியலாளரும் மரபணுவியலாளருமான ஹியுகோ மரீ டி வ்ரீஸ் (Hugo Marie de Vries) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நெதர்லாந்தில் ஹர்லேம் என்ற இடத்தில் பிறந்தவர் (1848). தந்தை வழக்கறிஞர். சொந்த ஊரில் பள்ளிக் கல்வி பயின்றார். பள்ளியில் படிக்கும் போது தாவரவியல் தொடர்பான அனைத்துப் போட்டிகளிலும், பிராஜக்டு களிலும் முதலாவதாக வந்தார்.

* பின்னர் லைடன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது சோதனை தாவரவியல் மற்றும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு மற்றும் இயற்கைத் தேர்வு (natural selection) களங்களில் கவர்ந்திழுக்கப்பட்டார். டார்வினின் ‘ஆரிஜின் ஆஃப் ஸ்பிசிஸ்’, மற்றும் ‘ஜூலியஸ் சாக்சின் டெக்ஸ்ட் புக் ஆஃப் பாட்டனி’ நூல்களைப் படிக்க நேர்ந்தது.

* 1870-ல் தாவர உடற்கூறியியலில் (plant physiology) முனைவர் பட்டம் பெற்றார். சவ்வூடு பரவல், தாவர செல்களில் உப்பு கரைசல்களால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* பின்னர் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் இயற்பியல் பயின்றார். இவற்றைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, 1875-ல் ஜெர்மன் சென்று அங்கே தாவர வளர்ச்சி, மரபியல் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தன் கண்டுபிடிப்புகளைக் குறித்து ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

* ஆம்ஸ்டெர்டாம் சென்ற இவர் ஆம்ஸ்டெர்டாம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1889-ல் தாவரங்களிடம் பான்ஜீன்ஸ் எனப்படும் (இப்போது மரபணுக்கள் எனக் குறிப்பிடப்படும்) ஒரு பொருள் இருப்பதாகவும் இவைதான் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபணு தகவல் களைக் கொண்டு செல்வதாகவும் கணித்தார்.

* இந்த மரபணுக்களின் காரணமாக உயிரினங்கள் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தற்போது குரோமோசோமல் கிராஸ்சோவர்ஸ் என்று குறிப்பிடப்படும், ஒரே மாதிரியான அமைப்புடைய குரோமோசோம்களிடையே மறு சேர்க்கை ஏற்படுவதை முதன்முதலில் எடுத்துக்கூறினார்.

* உயிரினங்கள் ஏன், எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதை ஆராயும்போது, காலப்போக்கில் மரபணுக்களில் ஏற்படும் மரபணு திடீர் மாற்றங்கள் அல்லது பிறழ்வுகளால்தான் (mutations) இவை மாற்றமடைகின்றன என்பதைக் கண்டறிந்தார். இந்த மாற்றங்கள் குறுகிய காலத்தில் ஏற்படுகின்றன என்றும் கூறினார்.

* இந்தக் கண்டுபிடிப்பைக் குறித்து மியுடேஷன் கோட்பாட்டை வகுத்தார். இவரது இந்தக் கண்டுபிடிப்பால் ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்தார். ‘ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ்’ அமைப்பின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் சொசைட்டியின் அயல்நாட்டு உறுப்பினராகவும் செயல்பட்டார். ‘ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ அமைப்பின் உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

* டார்வின் பதக்கம், லீனியன் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகள் கவுரவங்களையும் பெற்றார். ‘இன்ட்ராசெல்லுலர் பான்ஜெனிசஸ்’, இரண்டு தொகுதிகளாக வெளிவந்த மிகப் பெரிய நூல், ‘மியுடேஷன் தியரி’, ‘ஃபெர்டிலைசேஷன் அன்ட் பாஸ்டர்டிங்’, ‘ஸ்பீசிஸ் அன்ட் வெரைட்டீஸ்: தெர் ஆரிஜின் பை ம்யுடேஷன்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். 1918-ல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

* பரிணாம வளர்ச்சியின் மரபணு திடீர் மாற்றக் கோட்பாட்டை வகுத்தவரும் இறுதிவரை தாவரவியல் மரபணுத் துறைக்கு மகத்தானப் பங்களிப்பை வழங்கிவருமான ஹியுகோ மரீ டி வ்ரீஸ் 1935-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்