ஜார்ஜ் ஸ்டீபன்சன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இங்கிலாந்து பொறியாளர்

‘ரயில் பாதைகளின் தந்தை’ என்று போற்றப்படும் இங்கிலாந்து பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபன்சன் (George Stephenson) பிறந்த தினம் இன்று (ஜூன் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இங்கிலாந்தின் நார்த்அம்பர் லேண்ட் பகுதியில் (1781) பிறந்தார். தந்தை, நிலக்கரி சுரங்க கூலித் தொழிலாளி. பெற்றோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். வறுமையால் இவரும் பள்ளிக்குச் செல்லவில்லை. சிறு வயதில் மாடு மேய்த்தார்.

# பத்து வயதில் நிலக்கரி எடுத்துச் செல்லும் குதிரை வண்டி ஓட்டினார். பின்னர், தந்தையுடன் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றினார். இயந்திரங்கள், இன்ஜின்களை அக்குவேறு ஆணிவேறாக கழற்றி மீண்டும் சரியாகப் பொருத்துவதுதான் இவரது பொழுதுபோக்கு.

# இரவுப் பள்ளியில் சேர்ந்து எழுத, படிக்கவும், கணிதமும் கற்றார். 1802-ல் விலிங்டன் நகருக்கு குடிபெயர்ந்து, அங்குள்ள சுரங்கத்தில் வேலை செய்தார். ஓய்வு நேரங்களில் காலணி தயாரிப்பது, கடிகாரம் பழுதுபார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். இதனால் வருமானம் உயர்ந்தது.

# ஸ்காட்லாந்தில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றார். சில மாதங்களிலேயே, ஒரு சுரங்க விபத்தில் தந்தையின் பார்வை பறிபோனதால், ஊர் திரும்பினார். அந்த விபத்து மனவேதனை அளித்ததோடு விபத்துகளைக் குறைப்பதற்கான முனைப்புகளை மேற்கொள்ளும் உந்துசக்தியையும் தந்தது.

# கில்லிங்வொர்த் பகுதியில் நீராவியால் இயங்கும் இயந்திரத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களைக் காக்க பாதுகாப்பு விளக்கு உருவாக்குவதில் ஈடுபட்டார். எந்தவித அறிவியல் அறிவும் பெறாத ஸ்டீபன்சன் அதில் வெற்றி கண்டார்.

# மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தார். மரத்துக்கு பதில் இரும்பு தண்டவாளம் அமைத்தார். பின்னர், நீராவியால் இயங்கும் ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1825-ல் ஸ்டாக்டன் நகரில் இருந்து டார்லிங்டன் வரை 25 மைல் இரும்பு தண்டவாளப் பாதை அமைத்து, நீராவி இன்ஜினை ஓட்டிக் காட்டினார்.

# பல சுரங்கங்களை இணைக்கும் வகையில் பாதை அமைக்கும் பணியை அரசு இவரிடம் ஒப்படைத்தது. தன் மகனுடன் சேர்ந்து இதை முடித்தார். ரயில் பாதைகளை அமைக்க ‘ராபர்ட் ஸ்டீபன்சன் நிறுவனம்’ தொடங்கினார்.

# ரயில்வே முதலாளிகளுக்கு இடையே 1829-ல் நடந்த போட்டியில் இவர் வடிவமைத்த ‘ராக்கெட்’ என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசு வென்றது. இந்த மகத்தான கண்டுபிடிப்பால் நாட்டில் மாபெரும் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இவர் நிர்ணயித்த பாதைகளின் அகலமே உலகம் முழுவதும் பின்னாளில் ரயில் பாதைகளின் அகலமாகப் பின்பற்றப்பட்டது.

# இயந்திரப் பொறியாளர் பயிற்சி நிறுவனத்தின் முதல் தலைவராக 1847-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது உருவம் அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகள், அஞ்சல் தலைகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக இவர் வடிவமைத்த ‘ராக்கெட்’ ரயில் மாதிரி வடிவமும் அங்கு உள்ளது.

# பள்ளிக்கல்விகூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்தவரும் ‘ரயில் பாதைகளின் தந்தை’ என போற்றப்படுபவருமான ஜார்ஜ் ஸ்டீபன்சன் 67-வது வயதில் (1848) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்