புரட்சிப் போராட்டங்களை ஆதரிக்கும் கவிதைகளை எழுதி, புகழ்பெற்ற தாய்க்கும், ஏழைகளின் பார்வை இழப்பைத் தடுப்பதற்காக தனது சொந்த செலவில் கண் மருத்துவமனையை ஆரம்பித்து, சேவையாற்றிய தந்தைக்கும் மகனாக அயர்லாந்தின் டியுப்லின் நகரில் பிறந்தவர்.
• ஒன்பது வயது வரை வீட்டிலேயே கல்வி பயின்றார். பின்னர், பள்ளியில் சேர்ந்து படித்த சமயத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் காதல் பிறந்தது. கல்லூரியில் கிரேக்க மொழிப் பாடத்தில் தலைசிறந்த மாணவனாக தங்கப் பதக்கம் வென்றார்.
• உடல்நலம் பாதிக்கப்பட்டு பத்து வயதில் உயிரிழந்த தங்கையின் நினைவாக அவளது ஒரு கற்றை தலைமுடியை ஒரு அலங்கார உறையில் வைத்து பத்திரப் படுத்திக்கொண்ட பாசக்கார அண்ணன் இவர்.
• ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் தனது படைப்பாற்றலை உலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் எழுதிய ‘ரவேனா’ என்ற கவிதை பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த ஆங்கிலப் படைப்புக்கான பரிசை வென்றது.
• அழகியலைப் பரப்புவதில் தணியாத தாகம் கொண்டிருந்த இவர், இது தொடர்பாக உரை நிகழ்த்துவதற்காக அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது நாவன்மை அமெரிக்க மக்களை வசீகரித்ததால் 140-க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
• விற்பனை சரிந்திருந்த ‘லேடீஸ் வேர்ல்ட்' என்ற மகளிர் இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று இரண்டாண்டுகளில் அதன் விற்பனையை அதிகரித்துக்காட்டினார். பெண்களின் உணர்வுகளையும், அறிவாற்றலையும் பிரதிபலிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு புகழ்பெற்றார்.
• ‘ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ்' என்ற குழந்தைகளுக்காக சிறுகதைத் தொகுப்பு, அழகியல் குறித்த இன்டன்ஷன் என்ற கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட படைப்புகள் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. த பிக்சர் ஆஃப் டோரியன் கிரே என்ற இவரது நாடகத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்கள் தன்னைப் பிரதிபலிப்பதாக ஆஸ்கர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் இந்தப் படைப்பு தற்போது பாராட்டுகளைப் பெற்றுள்ளபோதிலும், அந்த நாளில் ஒழுக்கக்கேட்டை ஆதரிப்பதாக கடும் கண்டனக் கணைகளை சந்தித்தன.
• 1892-ல் இவரது முதல் நாடகம் லேடி வின்டர்மியர்’ஸ் ஃபேன். ஏ வுமன் ஆஃப் நோ இம்பார்ட்டன்ஸ், அன் ஐடியல் ஹஸ்பன்ட், த இம்பார்ட்டன்ட் ஆஃப் பீயிங் ஏர்னஸ்ட் ஆகியன இவரது தலைசிறந்த நாடகங்களாகப் போற்றப்படுகின்றன.
• லார்ட் ஆல்ஃப்ரட் டக்ளஸ் என்ற இளம் நண்பருடன் இவர் நெருக்கமாக உறவாடிய குற்றத்துக்காக இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலை அடைந்ததும் சிறை அனுபவங்களை சித்தரிக்கும் ‘The Ballad of Reading Gaol’ என்ற கவிதையை எழுதி முடித்தார். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டு 46- ஆவது வயதில் இறந்தார்.
• நீதிமன்றத்தில் நடைபெற்ற மூன்றுகட்ட விசாரணையை மையமாக வைத்து இவர் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட ‘The Trials of Oscar Wild’ நாடகம் நாடக ரசிகர்களிடையே இப்போதும் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago