இதுதான் நான் 74: கடைசி பெஞ்சு!

By பிரபுதேவா

எப்பவும் ஸ்கூல்ல பின்வரிசையில் உட்காரத்தான் பிடிக்கும். என்னோட உயரம்தான் அதுக்கு முதல் காரணம். அதைவிட முதல் காரணம் நல்லா படிக்காதது. வகுப்பில் டீச்சர் கேள்வி கேட்குறப்ப ஒரு மாதிரி பயம் வரும் பாருங்க, ‘அப்பப்பா! அதிலேர்ந்து தப்பிக்கணும்னா, கடைசி வரிசையில ஒளிஞ்சிக்கிறதுதான் ஒரே வழி’ன்னு அப்போ தோணும். இதெல்லாம் மனசுல இருக்குறதுனாலதான், சினிமா வுக்கு வந்ததுக்கு அப்புறம், இப்பவும் முதல் வரிசைன்னா ஒரு மாதிரியாதான் இருக்குப் போலிருக்கு!

முதல் வரிசையை நான் அதிகம் விரும்பாததுக்கு இன்னொரு காரணம் என்னோட கழுத்து வலி. சின்ன வயசு லேர்ந்தே டான்ஸ் ஆடி ஆடி எனக்குக் கழுத்து வலி இருக்கு. அப்பப்போ கழுத்தை இடது பக்கம் வலது பக்கம் திருப்பி அசைவு கொடுத்துட்டே இருப் பேன். முதல் வரிசையில் உட்கார்ந்து நான் இது மாதிரி செய்றதை மேடை யில இருக்குறவங்க பார்க்குறப்ப, ‘என்ன இவர் இப்படி நெளியுறார்? இந்நிகழ்ச்சி பிடிக்கலையோ!’ன்னு நினைக்கலாம். அதனாலயே முடிஞ்ச வரைக்கும் நான் இரண்டாவது, மூணா வது வரிசையிலதான் உட்காரு வேன்.

அதே மாதிரி, ஒரு சாதாரண மனித னாயிருந்து ஜாலியா சொல்றேன்… முதல் வரிசையில் இருக்குறப்ப திடீர்னு அவரசம்னா உடனே எழுந்து போக முடியாது. என்ன அவசரம்னு உங்களுக் குப் புரிஞ்சிருக்கும். நினைச்ச மாதிரி சிரித்துப் பேச முடியாது. ஏன் தும்மக்கூட முடியாது. அப்படியே தும் மினாலும் கரெக்டா தும்முறதுக்கு வாய் திறக்குறப்ப போட்டோ எடுத் துட்டுட்டாங்கன்னா? அதே மாதிரி சாதாரணமா சொறிஞ்சிக்கவும் முடி யாது.

இப்படி ஸ்டேஜ்ல தொடங்கி எல்லாருடைய கவனமும் முன் வரிசை யிலதான் அதிகமா இருக்கும். நிகழ்ச்சி நடக்குற அந்த இரண்டு, மூணு மணி நேரத்துக்கும் எந்தவொரு அசைவும் இல்லாம இருந்தே ஆகணும். பெண்டு நிமிந்துடும். அதனாலதான் நான் நிகழ்ச்சிகளுக்கு போறப்ப முதல் வரிசைன்னா ரொம்பவும் யோசிப் பேன்.

நிகழ்ச்சின்னு சொன்னதும் எங்க வீட்டுல நடக்கிற நல்ல நல்ல நிகழ்ச்சி கள் ஞாபகத்துக்கு வருது. பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் பண்டிகை எல்லாம் வீட்டுல ரொம்ப முக்கிய மானதா இருக்கும். ஆனா, சினிமாவுல இருக்குறவங்க இந்த மாதிரி நிகழ்ச்சி கள்ல கலந்துக்க முடிவதே இல்லை. ஒருமுறை, ரெண்டுமுறைன்னு இல்லை. வீட்டுல நடக்குற பெரும்பா லான நிகழ்ச்சிகளில் கலந்துக்க முடியாமலே போயிடும். பிறந்த நாள் கொண்டாடுற பையன்கிட்ட ஃபிரெண்ட்ஸுங்க கேட்டா, ‘‘அப்பா ஷூட்டிங் போய்ட்டார்’’ன்னு நாம இல்லைங்கிறதை ஒரு பெரிய விஷயமாவே எடுத்துக்காம சொல் வாங்க. ஏன்னா, பசங்களுக்கும் அது பழகிப் போயிருக்கும்.

என் பையனோட முதல் பிறந்த நாளப்ப நான் ‘நுவ்வஸ்தானென்டே நேனொத்துன்டனா’ தெலுங்கு பட முக்கிய ஷூட்டிங்ல இருந்தேன். என் டைரக்‌ஷன்ல முதல் படம் அது. தேதிகூட நினைவில் இருக்கு. ஆகஸ்ட் 3. அதுக்கு அடுத்த நாள் தான் என் பையன் பிறந்த நாள். இடைவேளை காட்சி ஷூட்டிங் அது. நிறைய வசனம் பேசி எடுக்க வேண்டிய காட்சி. அதை விட்டுட்டு பையன் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு என்னால் போக முடியலை. எனக்கும் ரொம்ப ஆசை ஆசையாதான் இருந்தது. இருந்தாலும் போக முடியலை. வீட்டுல இருந்தவங்களும் இதைப் புரிஞ்சிக்கிட்டாங்க. எவ் வளவு பெரிய விஷயம்! சினிமா வேலைகள்ல அதுவொரு சாதாரண விஷயமாயிடுது. இது முதல்முறையா இருந்தா பரவாயில்லை. நிறைய முறை வேற வேற நிகழ்ச்சிகளுக்கும் இப்படி ஆயிருக்கு.

சமீபத்தில் நாங்கள் ஹாங்காங், நியூசிலாந்துன்னு வெளிநாட்டு டான்ஸ் நிகழ்ச்சிக்குப் போனோம். அந்த நிகழ்ச் சிக்கு எங்களோடு ஒரு டெக்னீஷியனும் வர்றதா இருந்தாங்க. அவங்களுக்குப் பணத் தேவை இருந்ததால் அது முக்கியமான நிகழ்ச்சியா இருந்தது. ஆனா, திடீர்னு ஒருநாள் வந்து நான் வரலைன்னு சொன்னாங்க. ‘‘ஏன்?’’னு கேட்டப்ப, ‘‘என் பையன் பிறந்த நாள் இருக்கு. அதுவும் முதல் பிறந்த நாள் . நான் இல்லேன்னா எப்படி? வாழ்க்கை முழுக்க ஒரு மாதிரியா இருக்குமே”ன்னு சொன்னாங்க. கஷ்டமான சூழ்நிலையிலேயும் பைய னோட பிறந்த நாள்தான் முக்கியம்னு முடிவெடுக்குறாங்களே; நாம் வேலை வேலைன்னு இதெல்லாம் செய்யவே இல்லையேன்னு தோணுச்சு. பைய னோட இருக்குறது எவ்வளவு முக் கியம்னு திரும்பத் திரும்ப அவங்க சொன்னப்ப, மண்டையில அடிச்ச மாதிரி இருந்தது. படத்தில் வருமே ஷாக் அது மாதிரி!

லைம் லைட்ல இருக்குற பிரபலங் கள் பலரும் வீட்டுல ஒரு நிகழ்ச்சி நடக்குதுன்னா, படப்பிடிப்பை நிறுத் திட்டுப் போகணும். அதுக்கான இடம் அவங்களுக்கு இருக்கு. ஆனா, 90 சதவீதம் பேர் அப்படி செய்ய றது இல்லை. வேலையே தெய்வம்னு இருக்காங்க. இது சினிமாவுல இருக் குறவங்களுக்கு மட்டும்னு இல்லை. அரசியல்வாதி, மருத்துவர்கள், போலீஸ்னு பலருக்கும் இந்த மாதிரி நடக்கவே செய்யுது.

நடிப்பு மட்டும்னு இருக்குற ஒரு சிலரால குழந்தைங்க, குடும்பம்னு கொஞ்ச நேரத்தை ஒதுக்க வாய்ப்பு அமையுது. சினிமா டெக்னீஷியன் களால அது நிச்சயமா முடியாது. எனக்குத் தெரிஞ்சு நிறைய சினிமாக்காரர்கள் தங்களோட குழந்தைங்க வளர்ந்ததை கிட்டக்க இருந்து பார்த்ததே இல்லை. ஏன், நானே அப்படித்தான். ஆனா, இப்போவெல்லாம் வீட்டுல நடக்குற முக்கியமான நிகழ்ச்சிகள்ல இருக்கணும்னு தோணுது. குறிப்பா பையன்களோட பிறந்த நாளப்ப கண்டிப்பா இருப் பேன். தீபாவளின்னா மூணு நாட்கள் அவங்கக் கூடவே இருப்பேன்.

சின்ன வயசுல பரதநாட்டியம் கத்துக்கிட்டது தொடங்கி நான் நடனத்தில் மட்டும்தான் பயிற்சி எடுத்திருக்கேன். இது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சதுதான். இருந்தாலும் நடிப்பும், டைரக்‌ஷனும் பண்ணிட்டிருக்கேன். எப்படி அது?

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்