நெட்டிசன் நோட்ஸ்: நீட் கெடுபிடி விவகாரம்- ஒன்றை கவனித்தீர்களா?

By க.சே.ரமணி பிரபா தேவி

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான 'நீட்' தேர்வில் கடைபிடிக்கப்பட்ட கெடுபிடிகள் குறித்து இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் ஒரு மையத்தில் 'நீட்' தேர்வு எழுத வந்த ஒரு மாணவியின் ஆடையை கழட்டச் சொன்ன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த நெட்டிசன் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Murali Kumar

நீட் தேர்வு, வேணுமா? வேணாமான்னு பேசிட்டிருந்த நம்மை, வெற்றிகரமா தேர்வை நடத்தி முடித்தையே மறந்து அதை நடத்தின முறை கேவலம்ன்னு பேச வச்சாம்பாருங்க... அது மேட்டர்.

மக்களின் பொதுபுத்தியையே கூரிய ஆயுதமாக்கி அவர்களின் மீதே தாக்குதல் தொடுக்கிறது, இந்த அரசு. மக்களுக்கு இது புரியாத வரை இது தொடரலாம், இப்போதைக்கு எதையும் எதிர்த்து போராடுவதைவிட, புரிந்துகொள்வதும், புரியச்செய்வதுமே தேவையாயிருக்கிறது.

தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

சீரியஸா புரியவே இல்ல.

கம்மல்...மூக்குத்தி....இதில் எல்லாம் பிட் பேப்பர் இல்ல, மைக்ரோ போன் வெச்சிட்டு வருவாங்களா...? மூணுல ஒருபதில் தேர்ந்தெடுத்து எழுதறதில எப்படி பிட் அடிப்பாங்க..

சிவ சிவா

நீட் தேர்வில் நடந்த மனித உரிமை மீறலை பற்றி தமிழக ஆளும்கட்சி வாயை திறக்கவில்லை என்பதைக் கவனித்தீரா...?

Thirupathi

நீட் தேர்வு..... அசுத்தம்.

பிரகாசம் லிங்கன்

ஒரு சிறிய மூக்குத்தியிலும், கம்மலிலும் எலக்ட்ரானிக் 'சிப்' வைத்து 'நீட்' தேர்வையே பாதிக்கச் செய்யும்போது, பெரிய வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதே 'சிப்' வைத்து தேர்தல் முறைகேடு செய்யமுடியாதா?

Rajkumar Asathapovathuyaru

இப்படி மாணவ மாணவிகளை கேவலமாக அவமானப்படுத்த எப்படி மனசு வந்தது? நீட் தேர்வு இப்படித்தான் நடக்கும் என்று அதன் விதிமுறைகளை ஏன் நீங்கள் முறையாக மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை..?

பூ ரான்

நீட் தேர்வு - சமய எதேச்சதிகாரம்

நீட் தேர்வு கெடுபிடிகள் - அரச வக்கிரம்.

Mannar Mannan

மக்களுக்கு மானம், மரியாதை இருக்கிறதா என்று அரசு வைக்கும் எத்தனையோ தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்று...

Natesanramasubramanyan Natesan

தோடை கழற்று, முழுக்கையை அரைக்கை சட்டையாக கிழி, கர்சீப் கொண்டு வராதே என மன உளைச்சல் ஏற்படுத்தியது முறையல்ல. அபத்தமான சட்ட திட்டங்களை வகுத்த யாருக்கும் மாணவர்கள் மன உளைச்சல் பற்றிய புரிதல் இல்லை. யாரோ சில மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை வைத்து அனைவரையும் குற்றவாளிகள் போல நடத்துவது சரியல்ல.

Paraneetharan K

நீட் தேர்வில் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை அவமானங்களை தமிழக அரசியல் மற்றும் சமூக இயக்க தலைவர்கள் கண்டிக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு சென்றுவிட்டார். தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லிக்கு சென்று பூங்கோத்து கொடுத்து மோடியை சந்திக்கிறார்.

Sylvia Nithia Kumari

எந்தவொரு நுழைவுத்தேர்வோ போட்டி தேர்வுகளோ என் மகனை அழைத்துசெல்கையில் நாகரீகமான உடையிலும் முக்கியமாக நல்லமனநிலையிலும் அழைத்துசெல்வேன்.

நீட் நெருக்கடி புகைப்படங்களை பார்க்கும் பொழுது அழுகையும் ஆத்திரமும் வருகிறது..

வெங்கடேஷ் ஆறுமுகம்

ஏம்ப்பா அதான் கரெக்ட்டான காஸ்ட்யூமில் நீட் எக்ஸாமுக்கு வந்துட்டிங்க, எக்ஸாம் ஹாலுக்கு போங்கன்னு சொன்னா ஏன் முடியாதுங்குறிங்க?

சார் நாங்க கேம்பஸ்ல இருக்க டிரைனேஜ் க்ளீன் பண்ண வந்தவங்க சார்.

Puthiya Parithi

”ஏம் ப்ரோ நாம பண்ற எல்லா கண்றாவியையும் பொறுத்துக்கிட்டு இந்த தமிழனுங்க நீட் எக்சாம்ல பாஸ் ஆகி டாக்டர் படிக்க வந்துட்டா என்ன பண்றது?”

”உங்களுக்கு சரவணன் நினைவிருக்கா ப்ரோ?”

”எந்த சரவணன் ?”

”எய்ம்ஸ் சரவணன்”

Siva Shanmugam

நீட் தேர்வினை மிக நீட்டாக அனைவரும் பாராட்டும் வகையில் நடத்திய மத்திய அரசுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய தமிழக அரசுக்கும் தமிழக மக்களின் நெஞ்சம் நிறைந்த நன்றியினை வரும் தேர்தலில் காணிக்கையாக்கி நன்றி செலுத்துவோம்.

Kanimozhi Karunanidhi

மாணவர்களை இவ்வாறு அவமானப்படுத்துவது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மனித உரிமை மீறல். தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டுள்ள இந்த சூழலில் இவர்கள் எந்த காலத்தில் வாழ்கிறார்கள்? முறைகேடுகள் தடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நிகழ்ந்தவை யாவும் அபத்தமானவை.

இவ்வளவு கெடுபிடிகளைத் தாண்டி அவர்கள் எந்த மனநிலையில் இந்த தேர்வை எதிர்கொண்டிருப்பார்கள்? கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட பிறகு அவர்களால் எப்படி முழு கவனத்தையும் செலுத்தி தேர்வு எழுதியிருக்க முடியும்?

Pitchaimuthu Sudhagar

தோடு போடாதே, மூக்குத்தி போடாதே, வளையல் போடாதே, .... ஷூ போடாதே... துப்பட்டா போடாதே.. நீங்க பரிட்சை நடத்துறீங்களா இல்ல பூஜை நடத்துறீங்களா?

Raj Siva

ஆதாமும் ஏவாவும் 'நீட்' தேர்வுக்குக்குப் போயிருந்தால் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காதோ...

வாசுகி பாஸ்கர்

பூணூல் தவிர அனைத்தும் கழட்டப்பட்டது நீட் தேர்வில்.

H Umar Farook

நீட் தேர்வு கெடுபிடிகளுக்கு காரணமே

ரஜினியும் கமலும் தான் !

.

.

.

.

வசூல் ராஜா எம் பி பி எஸ்ல கமலும், எந்திரன்ல ஐஸ்வர்யாக்கு பிட் அடிக்க உதவிய ரஜினியும் மருத்துவ தேர்வில் பண்ணிய முறைகேடுகள் இப்போ மாணவ மாணவியரை வாட்ச் கட்டாதே, தோடு போடாதே என சொல்ல வைத்திருக்கு !

Venpura Saravanan

கொஞ்சம் பெரிய சைஸ் மளிகைக் கடையில்கூட கண்காணிப்பு கேமரா வைப்பது சாத்தியமாகும் காலத்தில் ஒரு மெகா 'நீட்'டமான எக்ஸாம் ஹாலில் கேமரா பொருத்த முடியவில்லையா?

Ramya

விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்டதும், நீட் தேர்வுக்கு சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட வைத்ததும் தான் டிஜிட்டல் இந்தியாவின் சாதனைகளா?

ட்விட்டர் தாத்தா‏ @PeriyaStar

நீட்டே வேணாம்னு சொன்னவங்கள, பர்தா, பூணூல், ப்ரா, தோடு, மூக்குத்தினு எப்படி டைவர்ட் பண்ணி பேச வச்சோம் பாத்தியா!

Shan Karuppusamy

நீட் தேர்வு விதிமுறைகளையும் தேர்வு மைய முகவரியையும் சரியாகப் படிக்காமல் ஏக அக்கப்போர். விதிமுறைகளின் சரி, தவறு குறித்த விவாதம் விண்ணப்பங்கள் வாங்கிய அன்றே வந்திருக்க வேண்டும். ஒரே பெயரில் பள்ளிகள் இருப்பது குறித்த குழப்பங்கள் ஓரிரு நாட்கள் முன்பாகவே தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நம் தலையாய பிரச்னை ஐஐடியோ நீட்டோ அல்ல. பன்னிரண்டு ஆண்டுகள் முறையான கல்வி பயின்ற பிறகும் ஒரு விண்ணப்பத்தைப் படித்து கேள்விகள் கேட்டுப் பரிந்துகொள்ள முடியாத மாணவர்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பதுதான். அதுதான் பாடத்திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE