இதுதான் நான் 69: மேகம் நம்ம கூடவே இருக்கும்!

By பிரபுதேவா

உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச இடங்கள்ல ஒரு இடம் ஊட்டி. ஒரு பாட்டு அங்கே ஷூட் பண்ணப் போறோம்னா, அந்த வேலையைத் தொடங்குறதுக்கு முன் னாலேர்ந்தே சந்தோஷமாயிடுவேன். படக் குழுவோட சேர்ந்து அங்கே போற அந்தப் புராசஸே ஒரு ஜாலி அனுபவம்! செட்டுல ஒரு பாட்டு எடுக்குறோம்னா, அதில் பயங்கர டான்ஸ் இருக்கும். அதுவே ஊட்டியிலன்னா பிளசன்ட்டா இருக்கும். சிம்பிள், சந்தோஷம், கிரேஸ்ஃபுல்னு கண்ணுக்குக் குளிர்ச்சி யான இடம் ஊட்டி!

படத்தோட டைரக்டர், கேமராமேன், ஹீரோ, ஹீரோயின், டான்சர்ஸ், ஆர்ட் டைரக்டர்னு எல்லாரும் ஒண்ணா ரயில் ஏறி, சென்னையிலேர்ந்து கிளம்பிப் போற அந்தப் பயணமே ஒரு ஜாலிதான். ரயில் கோயம்புத்தூர் போற வரைக்கும் ஒண்ணாவே உட்கார்ந்து பேசுறது, வீட்லேர்ந்து கொண்டுவந்த சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிடுறதுன்னு மகிழ்ச்சியா இருக்கும்.

ஒரு பாட்டு ஷூட்டிங்னா குறைஞ் சது மூணு, நாலு நாட்கள் அங்கேதான் இருப்போம். அந்த நாட்கள் எப்படி போகுதுன்னே தெரியாது. ஒரே நேரத் தில் பக்கத்து பக்கத்துல ரஜினி சார், விஜயகாந்த் சார், நாகார்ஜுனா சார்னு நிறைய ஹீரோக்களோட பாட்டுங்க ஷூட் நடந்துட்டிருக்கும். சரியா கணக்குத் தெரியலை. எப்படியும் அந்த இடத்துல சுமாரா ஆயிரம் பாட்டுங்களுக்கு மேல ஷூட்டிங் நடந்திருக்கும்.

நாம் ஷூட் பண்ணின இதே இடத்துல, போன முறையும் ஒரு பாட்டு எடுத் திருக்கோமேன்னு டான்ஸ் மாஸ்டர், கேமராமேன், டைரக்டர் இவங்க யாருக் குமே தோணாது. ஏன்னா, அந்த இடம் அப்படி! ஆனா, இப்போவெல்லாம் படம் பார்க்குறவங்க, ‘‘இந்த இடத்தை வேறொரு பாட்டுல பார்த்திருக் கேனே?’’ன்னு கேள்வி கேட்குறாங்க. ‘தேவி’ படத்தில் காட்டிய வீட்டை நல்லா சேஞ்ச் பண்ணிட்டு ‘போகன்’படத்துக்கு ஷூட் பண்ணோம். உடனே அதை, ‘‘இது தேவி படத்துல வந்த வீடாச்சே!’’ன்னு கேட்டாங்க. அப்போ எல்லாம் இந்த இடம் பார்த்த இடமாச்சேன்னு யாரும் சீரியஸா எடுத்துக்கிட்டதே இல்லை.

ஒவ்வொரு முறையும் மூணு, நாலு நாட்கள்ல பாட்டோட ஷூட்டிங் முடிச்சுட்டு ஊட்டியிலேர்ருந்து திரும்பும் போது சனி, ஞாயிறு லீவுல இருந்துட்டு, திரும்பவும் திங்கள்கிழமை ஸ்கூலுக்குப் போறப்ப எப்படி ஒரு ஃபீலிங் இருக்கும். அதே மாதிரிதான். ஊட்டி மலையிலேர்ந்து கீழே இறங் குறப்ப கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சூடாகிட்டே இருக்கும். அப்போவெல் லாம் ‘என்னடா இது’ன்னு மலையி லேர்ந்து கீழே இறங்க பிடிக்கவே பிடிக்காது. திரும்ப பத்து நாட்கள்ல அதே இடத்துக்கு ஷூட்டிங் வருவோம். இருந்தாலும் அந்த டைம்ல அந்த இடத்தை விட்டு போக வேண்டாம்னு தோணும். கடல் பார்த்துட்டே இருந்தா போர் அடிக்காதுல்ல. அங்கே இருக்கும் போதும் அந்த மாதிரி ஒரு உணர்வுதான்.

அப்பாவோடு அசிஸ்டென்டா இருந் ததுலேர்ந்து இப்போ வரைக்கும் ஊட்டி ஷூட்டிங்னா அவ்வளவு இஷ்டம். அங்கேதான் நான் முதன்முதலா ஹோம் மேட் சாக்லேட் சாப்பிட்டேன். சீதா பழம் மாதிரி ராமர் பழம் அங்கே கிடைக்கும். அதில் விதைகளே இருக்காது. அதனா லயே எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். குளிர்ல பயங்கரமா பசிக்கும். எப்பவும் சாப்பிட்டுட்டே இருக்கணும்னு தோணும்.

ஹீரோ, ஹீரோயின்கூட டென்ஷன் இல்லாம இருப்பாங்க. டான்சர்ஸும் சந்தோஷமா, ஜாலியா இருப்பாங்க. ஷூட்டிங் எடுக்கும்போது இருக்குற சந்தோஷம் நடிக்கும்போதும் அவங்க முகத்துல தெரியும்.

தியேட்டர்ல பாட்டை பார்க்குறவங்களுக்கும் அந்த சந் தோஷம் கொஞ்சம்கூட குறையாம இருக்கும். ஊட்டியில் இருக்கிற ஹோட் டல்கள் அப்போ ரொம்ப சிம்புளா இருக் கும். இப்போ நிறைய கட்டிடங்கள் வந் தாச்சு. அங்கே உள்ள பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன், ரேஸ் கோர்ஸ், ஸ்கூல்மந்த், பேய்மந்த்னு சில இடங்கள்ல தொடர்ந்து ஷூட் பண்ணுவோம்.

இப்போ எல்லாம் பாட்டுங்க ஹிட் ஆவதே பெரிய விஷயம். ஆனா, அப்போ படத்துக்கு பாட்டுங்க ஒரு ரிலீஃப்பா இருந்துச்சு. எடுக்குற ஐந்து பாட்டுங்களும் ஹிட் ஆகும். நிறையப் பேருக்கு லக்கி. ஊட்டியில ஷூட் பண்ணின 90 சதவீத பாட்டுங்க ஹிட்தான். அதே மாதிரி என்னோட இன்னொரு லக்கியான விஷயம், சினிமாவுக்கு வந்து நான் முதல் சம்பளம் வாங்கினதும் ஊட்டியிலதான்.

ஷூட்டிங் முடிஞ்சதும் டான்சர்ஸ் எல்லாரும் வெளியில போவாங்க. எனக்கும் அவங்களோட போகணும்னு ஆசையா இருக்கும். ஆனா, நான் போக முடியாது. கூட அப்பா இருப்பார். பயந்துட்டு போக மாட்டேன். அந்த நேரத்துல இவ்வளவு சேனல்களும் கிடையாது. ராத்திரி முழுக்க ‘எப்படா விடியும்? ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகலாம்’னு இருப்பேன். அடுத்த நாள் காலையில சீக்கிரமே எழுந்து கிளம்பிடுவேன்.

காபி, டீ சாப்பிடுற பழக் கம் இல்லை. அதனால டக் டக்னு குளிச் சிட்டு ரெடியாகி உட்கார்ந்துடுவேன். அப்பா, ‘கார் வந்துடுச்சான்னு பார்டா?’ன்னு சொல்வார். ஒவ்வொரு முறையும் கீழே வந்து கார் இருக்கான்னு பார்த்துட்டு ஓடிப்போய் சொல்வேன். ரிசப்ஷனுக்கு போன் செஞ்சு கேட்க லாம்கிற விஷயம் எல்லாம் அந்த வயசுல தெரியாது. கார் வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்துட்டா அப்படி ஒரு ஜாலியா இருக்கும்.

அதே மாதிரி ஊட்டிக்குப் போறோம்னா அங்கே பயன்படுத்திக்க ரெண்டு கோட் வச்சிருந்தேன். அந்த வயசுல எல்லார் முன்னாடியும் அதை போட்டுக்கிறதை ஸ்டைலா நினைச்சுப் பேன். அதுக்காகவே அங்கே போகணும் னும் தோணும். அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சு அதைப் பார்க்குறப்ப வேடிக்கையா இருந்தது.

தலைமுடி கலையாது, வியர்வை வராது, எப்பவும் ப்ரிஜ்ல வச்ச காய்கறி, பழங்கள் மாதிரி எல்லாரும் ஃப்ரெஷ்ஷா இருப்போம். மேகம் நம்ம கூடவே இருக்கும். அப்பப்போ மழை வந்து ஷூட்டிங் போக முடியாது. அந்த டைம்ல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து கதைப் பேசுவோம். படத்தோட தயாரிப் பாளர் கூட, ‘‘என்னடா இப்படி ஷூட்டிங் பண்ண முடியலையே?’’ன்னு நினைக்க மாட்டார். அவரும் சேர்ந்து ஜாலியா பேசிட்டிருப்பார். இப்படி ஊட்டி கொடுக்கிற சந்தோஷமே தனிதான்.

கோயம்புத்தூர்ல இருந்து ஊட்டிக்கு கார்ல போகுற மூணு மணி நேரமும், நான் கண்ணை மூடிப்பேன். மலை மேல சுத்தி சுத்தி கார் ஏறும்போது லைட்டா தலை சுத்த ஆரம்பிச்சுடும். அந்த மூணு மணி நேரமும் எப்படா போகும்னு இருக்கும். கார்ல போகும்போதே அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ‘‘வந்தாச்சா.. வந்தாச்சா’’ ன்னு கேட்டுட்டே இருப்பேன். மலைக்கு மேலப் போய் தங்குற ஹோட்டலைப் பார்த்தாதான் நிம்மதியே வரும்.

அதனால சென்னையில இருக்குற ஏவி.எம்., வாஹினி ஸ்டுடியோக்களுக்கு எங்க வீட்டுலேர்ந்து போறதுக்கு வழி ஒரு வருஷம் கழிச்சுதான் எனக்குத் தெரிஞ் சுது. ஊட்டிக்கு போறப்ப கண்ணை மூடினதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? அடுத்த வாரம் சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்