ஞானபீட விருது பெற்ற இந்தி கவிஞர்
விருது பெற்ற இந்தி கவிஞரும், எழுத்தாளருமான நரேஷ் மேத்தா (Naresh Mehta) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஞானபீட மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் பகுதியில் (1922) பிறந்தார். தந்தை பதிவாளராகப் பணியாற்றினார். இவர் குழந்தையாக இருந்தபோதே தாய் மரணமடைந்தார். செல்வந்தரான தன் சித்தப்பா வீட்டில் 4 வயது முதல் வளர்ந்தார்.
* சிறுவயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் கற்றார். பல நூல்களைப் படித்தார். எழுதும் ஆர்வமும் சிறுவயதிலேயே துளிர்விட்டது. பள்ளித் தோழர்களுடன் இணைந்து பத்திரிகைகள் நடத்தி வந்தார்.
* பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, 18 வயதில் உஜ்ஜயின் சென்றார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார். வேதங்கள், சாஸ்திரங்கள், இலக்கியம் கற்றார். முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார். அலகாபாத் அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.
* இலக்கிய ஆர்வத்தால், முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். சமஸ்கிருதம் கலந்த கடிபோலி மொழியிலும், பின்னர் இந்தியிலும் எழுதினார். எளிய, சரளமான நடையில் எழுதினார். முதலில் ‘சாஹ்தா மன்’ என்ற கதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார்.
* இவரது கவிதைகள் ‘ராஷ்ட்ரபாரதி’, ‘நயீ கவிதா’, ‘ஆஜ்கல்’, ‘தூஸ்ரா சப்தாஹ்’ உள்ளிட்ட பிரபல இதழ்களில் வெளிவந்தன. இவரது கவிதையால் கவரப்பட்ட நரசிங்க கட் ராஜமாதா இவரை ‘நரேஷ்’ (ராஜா) என்று அழைத்தார். அதுமுதல் இவர் ‘நரேஷ் மேத்தா’ என்று அழைக்கப்பட்டார்.
* பயணம் மேற்கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர். டெல்லி, அலகாபாத், காசி, பிரயாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றார். மனிதநேயம், மனிதனின் சுதந்திரம், பெண் விடுதலை, பெண் கல்வி, வரதட்சணைக் கொடுமை, குழந்தைத் திருமணம், பலதார மணம், இயற்கை அழகு உள்ளிட்டவை இவரது படைப்புகளின் கருப்பொருளாக இருந்தன.
* பல கவிதைத் தொகுப்புகள், காவியங்களைப் படைத்தார். கவிதை, காவியங்கள் மூலம் பிரபலமடைந்தாலும், நாவல், கட்டுரை, கதை, நாடகம், ஓரங்க நாடகம், பயணக் கட்டுரை என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். இவரது பல நாடகங்கள் மிகப்பெறும் வெற்றி பெற்றன.
* இவரது கவிதைகளில் தேசிய உணர்வு ஆழமாகப் பிரதிபலித்தது. இந்தி கவிதையில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியவர். ‘சவுதா சன்சார்’ என்ற செய்தித்தாளை வெளியிட்டார். 1973-ல் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச அரசுகளின் சாகித்ய பரிஷத் உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகள் இவரைக் கவுவித்தன.
* சாரஸ்வத் சம்மான், ஷிகர் சம்மான், மங்கள் பிரசாத் புரஸ்கார் உள்ளிட்ட பல கவுரவங்கள், விருதுகளும் இவருக்குக் கிடைத்தன. உத்தரப் பிரதேச இலக்கிய அமைப்பு இவருக்கு கவுரவம் வாய்ந்த பாரத் பாரதி விருது வழங்கியது. இவரது ‘ஆரண்யா’ என்ற காவியத்துக்காக 1989-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
* இந்தி இலக்கியத்துக்கான இவரது பங்களிப்பை போற்றும் வகையில் 1992-ல், இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கப்பட்டது. இந்தி இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி நரேஷ் மேத்தா 78-வது வயதில் (2000) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago