அலஸ்ட்டர் பில்கிங்டன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பிரிட்டன் பொறியியலாளர்

பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொறியியலாளர், கண்டுபிடிப்பாளரான சர் அலஸ்ட்டர் பில்கிங்டன் (Sir Alastair Pilkington) பிறந்த தினம் இன்று (ஜனவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் (1920) பிறந்தார். தந்தை பொறியியலாளர். வியாபார மும் செய்தார். கல்வி கற்க லண்டன் சென்ற பில்கிங்டன், ஷெர்போன் பள்ளி மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் பயின்றார். 2-ம் உலகப்போரால் இவரது படிப்பு தடைபட்டது.

* ராணுவத்தில் சேர்ந்து போரில் பங்கேற்றார். ஜெர்மனியின் நாஜிப் படையினரால் பிடிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெர்மன் வீழ்ச்சி அடைந்து, விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் கல்லூரி சென்று இயந்திர அறிவியலில் பொறியியல் படிப்பை முடித்தார்.

* கண்ணாடி உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலராக வேலையில் சேர்ந்தார். ஜன்னல்கள், வாகனங்களுக்குத் தேவை யான கண்ணாடிகளைத் தாங்களே உருவாக்கிய பிரத்யேக வழி முறையில் அந்த நிறுவனம் உற்பத்தி செய்தது. இதற்கு அதிக செலவானது.

* குறைந்த செலவில் இதற்கு மாற்று வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதே ஆராய்ச்சியில் பில்கிங்டனும் தன் சகா கென்னத் பிக்கர்ஸ்டாஃப் என்பவருடன் இணைந்து தடிமனான கண்ணாடியை உற்பத்தி செய்து, மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.

* ஆராய்ச்சியைத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே, இதை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த கருத்தளவிலான யோசனை கொண்டிருந்தார். ஆனால், அதை நடைமுறையில் சாத்தியமாக்கப் பல ஆண்டுகள் பிடித்தன. அதிக செலவு, நேர விரயம் ஆனது. ஆனாலும் இவர் மீது நம்பிக்கை கொண்டிருந்த அந்நிறுவனம் இவருக்கு முழு ஆதரவு வழங்கியது.

* 7 ஆண்டுகள் பாடுபட்டு, உருகிய கண்ணாடியை உருகிய உலோகத்தின் மீது மிதக்க விட்டு உருவாக்கப்படும் மிதப்புக் கண்ணாடிகளைக் (Float Glass) கண்டறிந்து மேம்படுத்தினார். தகரம், ஈயம், பிற கலப்பு உலோகங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம் என்பதையும் கண்டறிந்தார்.

* இவர் உருவாக்கிய முறை விலை மலிவான, தரமான கண்ணாடிகளைத் தயாரிக்க வழிவகுத்தது. இவரது இந்த அற்புதக் கண்டுபிடிப்பு இவரது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணி நிறுவனமாக உயர்த்தியது. இந்நிறுவனம் மிதப்புக் கண்ணாடி வழிமுறைக்கான உரிமமும் பெற்றது.

* ஜப்பான், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. இது ‘பில்கிங்டன் வழிமுறை’ என்றும் குறிப்பிடப்பட்டது. தொழில்நுட்ப இயக்குநர் பதவியில் இருந்து இணை தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டார். வயதான மற்றும் பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிர்வாகிகள், பணியாளர்கள் சொந்தமாக வியாபாரம் செய்ய உதவினார்.

* வர்த்தக ரீதியில் கண்ணாடிகள் (Plate Glass) தயாரிக்கவும் வழிவகுத்தார். கண்ணாடித் தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை இவரது கண்டுபிடிப்பு ஏற்படுத்தியது. இன்று வரை கட்டிடத் தொழில் உட்பட பல்வேறு துறைகளிலும் கண்ணாடி முக்கிய பங்கு வகிப்பதற்கு இவரது கண்டுபிடிப்புதான் அடிப்படையாக உள்ளது.

* ராயல் சொசைட்டி ஃபெலோவாக 1960-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973-ல் சர் பட்டம் பெற்றார். மேலும் பல அமைப்புகளிடம் இருந்து பரிசுகள், பதக்கங்கள் பெற்றார். கண்ணாடித் தொழில் துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட சர் அலஸ்ட்டர் பில்கிங்டன் 75-வது வயதில் (1995) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்