இயக்குநர் ராஜுமுருகனின் முதல் படமான 'குக்கூ' பாராட்டுகளைப் பெற்ற நிலையில், இரண்டாவது படமான 'ஜோக்கர்' எப்படி இருக்கிறது? இணைய ரசிகர்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
"எந்த ஸ்டேஷனாலயாவது ஆடிகாரையோ, பீ.எம்.டபிள்யு. காரையோ பிடிச்சி வச்சிருக்காங்களா?" - ஜோக்கர்
இயக்குநர் ராஜுமுருகன், மக்களைப் பற்றிப் பேசவில்லை. மக்களை நோக்கி பேசி இருக்கிறார். எல்லோரும் ஜோக்கர் ஆகாமல் இருக்க ஜோக்கர் திரைப்படம் பாருங்கள்.
இந்த வெஷத்தையெல்லாம் தடை பண்ணச்சொல்லி ஆர்டர் போட்டேனே அரசாணை இன்னும் வரலையோ? #கோக்கோகோலா, பெப்சி #ஜோக்கர்
இந்த படம் ரொம்ப சிம்பிள். இனிமேலாவது வாய தொறந்து அரசியல் பேசு; அரசை கேள்வி கேள் என்று சொல்கிறது படம்.
கருவில் இருந்து கல்லறை வரை ஊழல் என்பது போய் கழிவறையிலும் ஊழல் என்று பார்வையை விரிவுபடுத்தியுள்ளார் இயக்குநர் ராஜு.
சீரழிக்கும் தமிழ் படங்களில் சிந்திக்க வைக்கும் ஒரு படம் ஜோக்கர்.
நிஜத்தில் போராடு; உதவிக்கு இணையத்தை வைத்துக்கொள். நான் கத்துகிட்டது - ஜோக்கர் படம் மூலமாக...
இந்த சமூகத்திற்காக போராடும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம். ஐயாம் த ஜோக்கர்.
எப்போதும்போல் வெள்ளியன்று வெளியாகும் படம் போல இல்லாமல் வேறு ஒரு சிந்தனையோடு இருக்கிறது! #ஜோக்கர்
இந்நாட்டு மக்களின் கதை #ஜோக்கர்
நாடும், அரசியலும் இவ்வளவு அலங்கோலமாகப் போனதற்கு நானும் ஓர் காரணம் என்ற உண்மையை, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உணர்த்தும்.
ஜோக்கர் - போராளிகளுக்கு ஒரு பூஸ்டர்.
உலக சினிமா என்பது ‘டெக்னாலஜி’யை அப்டேட் செய்துகொள்ளும் படங்கள் அல்ல... உள்ளூர் சாமான்யனின் பிரச்சனையை உலகறியச் செய்ய யதார்த்தமாக முயற்சிப்பவையே என்பது எனது புரிதல். அதுபோன்றதொரு சிறு முயற்சியே ஜோக்கர்!
நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா...? #ஜோக்கர்
படம் பாக்குறப்ப யாரோ பளார் பளார்னு அறையற மாதிரி இருக்கும். யாருன்னு பாத்தா வசனங்கள்தான். #ஜோக்கர்
Satheesh Kumar
ஜோக்கர் படத்துல ஜோக்கர் என்பது யாரை குறிக்குதுன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா?
உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா... அது எங்க தப்பில்ல- ஜோக்கர்
ராஜு முருகனின் வட்டியும் முதலும் பாணியில் சொல்வதென்றால்... "இந்த கீர்த்தனாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு''.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago