தேர்தல் கமிஷன் கண்ணில் விளக் கெண்ணைய் விட்டு துணை ராணுவம், பார்வையாளர், அது இது லொட்டு லொசுக்கென்று ஏற்பாடு செய்தும் எண்பத்தொன்பது கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு வாரி வழங்கியதில் கடுப்பான தேர்தல் ஆணையம், தேர்தல் ரத்து என்று நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்டது.
எப்படியும் தேர்தல் நடத்தித்தான் ஆக வேண்டும். அதனால் தேர்தல் கமிஷனுக்கு சில டிப்ஸ்:
l ஓட்டுக்கு துட்டு என்பது தமிழ் சினிமா வில் காட்டும் கேன்சர் மாதிரி. அதை ஒழிக்க மருந்தெல்லாம் கிடையாது. வேட்பாளர் ஓட்டுக்குப் பணம் தரும்போது நீங்க பேசாம அவங்களைக் கையும் களவுமாப் பிடிச்சு தந்தா, வேட்பாளர் எவ்வளவு பணம் தர இருந்தாரோ அதைவிட ரெண்டு மடங்கு பணம் தேர்தல் ஆணையம் தரும் என்று சொல்லலாம்.
l இன்னொரு ஐடியா. எல்லா அரசியல் கட்சியையும் கூப்பிட்டு ‘‘எப்படியும் நீங்க ஓட்டுக்குப் பணம் கொடுக்கத்தான் போறீங்க. நாங்களே அதை விநியோகம் பண்ணிட றோம். வாக்காளர்கிட்டே ‘இந்தக் கட்சி ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபா தந்துருக்கு’ என்று பூத் சிலிப் மாதிரி பணம் சிலிப் எழுதித் தந்துடுறோம்” என்று சொல்லலாம்.
l இது அடுத்த யோசனை. பேசாம ஒரு வார்டுக்கு 10 பேரை தேர்ந்தெடுத்து இவங்க மட்டும் ஓட்டு போட்டா போதும்னு சொல்லி ருங்க. அப்போ அந்த 10 பேருக்கு மட்டும் தான் பணம் பட்டுவாடா நடக்கும். ‘கோடிக் கணக்கில் பணம் பட்டுவாடா’ என்ற பிளாஷ் நியூஸ் வராது.
அப்புறம் அதிகாரிகள் மேல ஏதாவது ஒரு கட்சி புகார் பண்ணா, உடனே அந்த அதிகாரியை தேர்தல் ஆணையம் மாத் திடுது. அதில் என்ன உள்குத்து விஷயம் நடக்குது தெரியுமா? சில அதிகாரிகள் மாற்றல் உத்தரவு கேட்டு மேல் அதிகாரிக் கிட்ட என்ன மல்லுக்கட்டினாலும் மாற்றல் தரவே மாட்டாங்க.
மால் வெட்டினால்தான் மாற்றல் கிடைக்கும். மாற்றல் விரும்புற அதிகாரிங்க, இந்த மாதிரி தேர்தல் சமயத்தில் எதிர்க் கட்சியினரிடம் போய், ‘‘அய்யா எங்க வீட்டுல 13 ஓட்டு இருக்கு. சல்லி பைசா ஓட்டுக்காக நீங்க எங்களுக்குத் தர வேணாம். உங்களுக்குதான் எங்க ஓட்டு. தேர்தல் கமிஷன்ல நான் ஆளும் கட்சியோட ஆளுன்னு போட்டுக் குடுத் துடுங்க. அவங்க என்னை மாத்தி விட்டுரு வாங்க”ன்னு டீல் பேசி மாற்றல் உத்தரவை கச்சிதமா வாங்குகிறவர்களும் உண்டு.
டி.டி.வி. தினகரனுக்கு யோசனை
இந்த இடைத்தேர்தல் விஷயத்தில் நீங்க படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கு. இந்த விஷயத்தில் உங்களுக்கு சர்வீஸ் கம்மி. முக்கியமா, செலவு பண்ணப் பண்ண அதை அப்படியே டைரியில் எழுதி மாட்டுறதெல்லாம் ரொம்ப எல்.கே.ஜி.தனம். உங்க ஆளுங்களுக்குச் சொல்லுங்க.
இனிமே யாருக்கு, எதுக்கு, எவ்வளவுனு செலவு கணக்கெல்லாம் மனசுக்குள்ளேயே போட்டு வெச்சுக்கணும். இதற்காக இடைத் தேர்தல் சமயத்தில் வல்லாரை லேகியம், வல்லாரை சாதம், கூட்டு, பொரியல் என எல்லாமே வல்லாரை அயிட்டமா உள்ளே தள்ளி, ஞாபக சக்தியைப் பெருக்கி வெச்சுக்கணும்.
தேர்தல் முடிஞ்சதும், எல்லா செலவையும் சிலேட்டில் எழுதிக் காட்டச் சொல்லுங்க. நீங்க பார்த்து ரைட் போட்டதும். உடனே எச்சை தொட்டு அழிச்சிடச் சொல்லுங்க.
அதே மாதிரி, ஒத்தாசைக்கு யாரை வெச்சுக்கறது என்பதிலும் கவனம் தேவை. இல்லாட்டி, வடிவேலு காமெடியில் வர்ற மாதிரி, டெல்லி தேர்தல் கமிஷன் ஆபீஸுல தொடங்கி, நம்ம வீடு வரைக்கும் மிளகாய்த் தூள் போட்டுட்டே வந்துடுவாங்க அந்தப் புத்திசாலிங்க.
கடைசியா, போலிஸு நம்ம கவட்டைக்கு நடுவுலதானே வந்து நிக்குது!
ஸ்டாலினுக்கு புத்திமதி
தேர்தல் தேதி அறிவிச்சதும் நீங்க விமானம் புடிச்சு தேர்தல் ஆணையத்துக்கு போய் 100 ரூபா பத்திர பேப்பர்ல ‘தேர் தல் நிச்சயம் நடத்துவோம். எந்தச் சூழ்நிலையிலும் தள்ளி வைக்க மாட்டோம்’ அப்படின்னு ஆணையர் முதல் அட்டெண்டர் வரை எல்லோரையும் உறுதிமொழி பத்திரம் எழுதி கையெழுத் துப்போட்டு தரச் சொல்லுங்க.
“பீரோவில் இருந்த அயர்ன் பண்ண பேன்ட் சட்டை எல்லாம் போட்டு பிரச்சாரத் துக்கு போய் வேஸ்ட் பண்ணிட்டீங்க. யார் துவைக்கிறது”னு அண்ணிக்கிட்ட டோஸ் வாங்கிறதை தவிர்க்கலாம். இனிமேலாவது சூதானமா இருங்க செயல் தலைவரே.
வை.கோ-வுக்கு
மற்றவர்களைவிட கருணாநிதி காலடி யில் அமர்ந்து அரசியல் பாடம் படிச்சவர் நீங்க. தினகரன் வேட்பாளர் என்று அறிவிச்சதுமே ‘இந்த தேர்தல் நடக்காது’ என்று உங்கள் அரசியல் அறிவு மணி அடிக்க மறந்துபோனது ஏன்?
மார்க்சிஸ்ட் வேட்பாளர்கிட்டே ‘நல்லா நில்லுங்க. எங்க ஆதரவு உங்களுக்குதான். நானும் திருமாவும் பிரச்சாரத்துக்கு வர்றோம்னு சொல்லியிருந்தா, மக்கள் நலக்கூட்டணியில் விரிசல் பிளவுன்னு பேச்சு வந்ததை நீங்கள் தவிர்த்திருக்கலாமே.
மு.க.அழகிரியிடம்…
இடைத்தேர்தல் பார்மூலாவின் பிதாமகனான மு.க.அழகிரிடம் “நீங்கதான் எந்தக் கட்சியிலும் இல்லியே. உங்க திருமங்கலம் பார்மூலாவை பொதுவுடமை பண்ணக்கூடாதா?” என்று கேட்டதற்கு, பெருந்தன்மையாக இந்த பார்மூலாவை உலகுக்கு அர்ப்பணித்துவிட்டு அவர் சொன்னார்:
“என் பார்மூலாவில் பணப் பட்டுவாடா எல்லாம் சம்பந்தப்பட்ட தொகுதியிலேயே இருக்காதுங்க. தொகுதிக்கு வெளியே வாக்காளர் சொந்தபந்தங்களிடம் பணம், பண்டம், ரீ-சார்ஜ், புடவை, ரயில் டிக்கெட். பஸ் டிக்கெட் என்று இருக்கும். ஓரு வாக்காளரின் மனைவி பிரசவத்துக்காக மதுராந்தகத்தில் இருந் தாங்க. அவங்களுக்கு மசக்கை காரணமாக வடுமாங்காய், வத்த குழம்பு சப்ளை செய்யுங்க. என் ஓட்டை நான் உங்களுக்குப் போடறேன். என் மனைவி ஓட்டை நீங்களே போட்டுக்கலாம் என்றார் அந்த வாக்காளர்.
இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருந்தது. இன்னொரு வாக்காளர் ‘தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் எங்கள் பாட்டிக்கு லட்சுமி எழுதிய நாலு நாவல், தாத்தாவுக்கு சாண்டில்யன் எழுதிய ‘கடல்புறா’, கல்கியோட ‘பொன்னியின் செல்வன்’ அத்தனை பாகமும் போய் சேர்ந்திட்டா, எங்கள் குடும்பத்திலிருக்கிற ஏழு ஓட்டும் உங்களுக்குதான்’ என்றார். மச்சினிக்கு சுடிதார், மாமியாருக்கு பட்டுப் புடவை என இந்த பார்மூலாவில் பல அயிட்டங்கள் இருக்கு” என்று சொல்லி பெருமூச்சுவிட்டவர், “என் பலம் உங்களுக்கு தெரியுது தெரியவேண்டியவங் களுக்கு தெரியலையே” என்று ஆதங்கப்பட்டார்.
எண்ணங்களைப் பகிர: jasonja993@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago