இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த ரஷ்யப் படைப்பாளியான விக்டர் பெட்ரோவிச் பரேனின் (Viktor Petrovich Burenin) பிறந்த தினம் இன்று (மார்ச் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் (1841) பிறந்தார். தந்தை உட்பட குடும்பத்தில் பலரும் கட்டிடக்கலை நிபுணர்கள். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, குடும்ப பாரம்பரிய வழக்கப்படி, இவரும் மாஸ்கோ பேலஸ் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் கட்டிடக்கலைப் படிப்பில் சேர்ந்தார்.
* அப்போது, இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஐவான் புஷ்கின், கேப்ரியல் பாடென்கோ உள்ளிட்ட பலருடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ‘சபாத் ஆன் பால்ட் மவுன்டன்’ என்ற நகைச்சுவைக் கட்டுரை இவரது முதல் படைப்பு. தொடர்ந்து பல கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
* ஜெனிவாவில் இருந்து வெளிவரும் ‘தி வேர்டு ஆஃப் தி அண்டர்கிரவுண்ட்’ இதழுக்காக, உலகப் புகழ்பெற்ற பார்பியரின் கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து பல பிரபல இதழ்களுக்காக தாமஸ் ஹுட், விக்டர் ஹ்யூகோ, பைரன் உள்ளிட்டோரின் கவிதைகளை மொழிபெயர்த்தார்.
* ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்று பல மாதங்கள் தங்கினார். அங்குள்ள இலக்கியவாதிகளைச் சந்தித்தார். அதுமுதல், இலக்கியமே இவரது உலகம் என்றானது. அதன்பிறகு, ஆண்டுதோறும் அந்த நாடுகளுக்குச் சென்று இலக்கியவாதிகளைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். ரஷ்ய இலக்கிய அமைப்புகளோடும் நெருக்கமான தொடர்பில் இருந்தார்.
* பல பிரபல கவிஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர்களுக்கு வரலாற்று புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தருவது உள்ளிட்ட பல உதவிகளையும் செய்து வந்தார். ‘விளாடிமிர் மானுமென்டோவ்’ உள்ளிட்ட புனைப்பெயர்களில் பல இதழ்களில் நகைச்சுவை, நையாண்டிக் கவிதைகள் எழுதினார்.
* செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1863-ல் குடியேறினார். அதற்குப் பிறகுதான் தொழில்முறை எழுத்தாளரானார். அரசியல், சமூகம், பிரஷ்ய ராணுவவாதம், மருத்துவக் கல்வி, மகளிர் கல்வி, மக்களின் வாழ்க்கைமுறை, வரலாறு குறித்து கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகளை எழுதினார்.
* அலெக்ஸே சுவோரின் என்ற பிரபல பத்திரிகையாளர் நடத்திவந்த ‘நோவோயி வ்ரெம்யா’ என்ற பிரபல இதழில் இணைந்தார். அதில் இவரது கட்டுரைகள் வெளிவந்தன. இலக்கிய, அரசியல் நையாண்டி விமர்சனங்கள் எழுதி பிரபலமானார். பல சர்ச்சைகளைக் கிளப்பி எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
* இவரது நாவல்கள் வர்த்தகரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இவரது நாவல்கள் எளிய நடையுடன், இயல்பான நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஷேக்ஸ்பியர், நிக்கோலே மாக்கியவிலி, அலெக்ஸாண்டர் டூமாஸ், கார்ல் குட்சோவ் உள்ளிட்டோரின் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். பல மொழிபெயர்ப்பு நாடகங்களையும் படைத்தார்.
* நாடக குழுவினருடன் இணைந்து நாடகக் கலை வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். நண்பருடன் இணைந்து ‘லிட்ரரி அண்ட் ஆர்ட்ஸ் சொசைட்டி தியேட்டர்’ என்ற நாடக அரங்கைத் தொடங்கினார். கலை, இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டார். ‘அசல் படைப்பாளி’ என்று பாராட்டப்பட்டார்.
* நாடக விமர்சகர், அரசியல் விமர்சகர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர், நையாண்டிக் கவிஞர், கட்டுரையாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட ரஷ்யப் படைப்பாளியான விக்டர் பெட்ரோவிச் பரேனின் 85-வது வயதில் (1926) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
16 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago