வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்
இங்கிலாந்தைச் சேர்ந்த அமெரிக்க அறிவியல் அறிஞர் ஹெர்பர்ட் சார்லஸ் பிரவுன் (Herbert Charles Brown) பிறந்த தினம் இன்று (மே 22). அவரைப் பற்றி அரிய முத்துகள் பத்து:
* லண்டனில் உக்ரேனைச் சேர்ந்த யூதர் குடும்பத்தில் பிறந்தார் (1912). இவரது குடும்பம் சிகாகோவில் குடியேறியது. ஹாவன் பள்ளியில் பயின்றார். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு கிரேன் ஜூனியர் கல்லூரியிலும், ரைட்டர் ஜூனியர் கல்லூரியிலும் பயின்றார். சிறு வயது முதலே அறிவியலில் குறிப்பாக, வேதியியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
* 1926-ல் தந்தையின் மரணத்தால் இவரது படிப்பு தடைபட்டது. படிப்பை நிறுத்திவிட்டு அப்பாவின் கடையில் வேலை பார்த்தார். வியாபாரத்தில் ஆர்வம் இல்லாத இவர் படிப்பதில் தனது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டார். தன் மகனின் படிப்பு ஆர்வத்தை உணர்ந்த அம்மா, மகனை மீண்டும் படிக்க அனுப்பிவிட்டு தானே வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார்.
 எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்ந்த இவர், வேதியியலில் உள்ள ஆர்வத்தால் அதிலேயே சேர்ந்து பயின்றார். ஆய்வுக்கூடத்தில் பகுதி நேரம் பணியாற்றி, தனது படிப்புக்கான செலவைத் தானே பார்த்துக்கொண்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1936-ல் பி.எஸ். பட்டம் பெற்றார்.
* பணியில் சேர நினைத்த இவரிடம் பிரபல கரிம வேதியியல் அறிஞரும் இவரது ஆசிரியருமான ஜூலியஸ் வேதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு கூறினார். எனவே படிப்பைத் தொடர்ந்தார். முதுகலைப் பட்டம் பெற்ற பின் 1938-ல் ஆல்டிஹைட்ஸ் மற்றும் கீடோன்களுடன் டிபோரேன் எதிர்வினை குறித்து ஆராய்ந்து வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
* பிறகு ஹைட்ரோ கார்பன் சேர்மங்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ‘தி ஹைட்ரைட்ஸ் ஆஃப் போரான் அண்ட் சிலிக்கான்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. இதில் ஆர்வம் கொண்ட இவர், ஆர்கோபோரான் வேதியியலில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
* சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், பின்னர் வெய்ன் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும், பெர்டூ பல்கலைக்கழகத்தில் அசோசியேட் பேராசிரியராகவும் அதையடுத்து கனிம வேதியியலில் பேராசிரியராகவும் நியமனம் பெற்றார். தொடர்ந்து ஆர்கனோபோரான்கள் ஆய்வுகளை மேற்கொண்டார்.
* சோடியம் போரோஹைட்ரைடை உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்தார். இவர் கண்டறிந்த இந்த முறை போரான்கள், போரான் சேர்மங்கள் மற்றும் ஹைட்ரஜன் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. சமச்சீரற்ற தூய எனான்டியோமெர்கள் (asymmetric pure enantiomers) தயாரிப்பதற்கான முதல் பொது முறையைக் கண்டறியவும் இவரது கண்டுபிடிப்பு வழிகோலியது.
* இந்தக் கண்டுபிடிப்பு மூலம் பெரும் அளவில் சோடியம் போரோ ஹைட்ரைட், லித்தியம் மற்றும் அலுமினியம் ஹைட்ரேட் ஆகியவை தயாரிக்கவும் முடிந்தது. இவரது போரோன் ஆராய்ச்சிகளுக்காக ஜெர் மனியைச் சேர்ந்த வேதியியலாளர் ஜியார்ஜ் விட்டிக்குடன் இணைந்து 1979-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* அந்தச் சமயத்தில் ஹைட்ரோபோரான்கள் குறித்து யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்பதால், இவற்றின் பயன்பாடு பற்றியும் தெரிந்திருக்கவில்லை. தனது அணியினருடன் இணைந்து இதில் மேலும் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோபோரான் எதிர்வினையால் ஆர்கனோபோரான்கள் உருவாவதை எடுத்துக்காட்டினார். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.
* 1969-ல் இவருக்கு அறிவியலுக்கான தேசியப் பதக்கம் வழங்கப்பட் டது. சர்வதேச அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் கவுரவ உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதி வரை அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவரும், வேதியியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஹெர்பர்ட் சார்லஸ் பிரவுன் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 92-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
21 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago