இதுதான் நான் 80: ‘செய்யும் தொழிலே தெய்வம்!’

By பிரபுதேவா

‘எங்கேயும் காதல்’ படத்தில் ஒரு காதல் காட்சி. பெரும்பாலும் ஹீரோதான் ஹீரோயினைப் பார்த்ததும் காதலில் விழுவாங்க. ஆனா, இதில் ஹன்சிகா முதன்முதலா ரவியைப் பார்த் ததும் காதலில் விழுந்துடுவாங்க. இதை பிரான்ஸில் எடுத்தோம். அதுவும் ஹீரோயின் நேரடியா பார்க் காம, கண்ணாடி வழியா ஹீரோவைப் பார்க்கிற மாதிரியான காட்சி அது.

நேரடியா ஹீரோவைப் பார்க்கிற மாதிரி இருந்தா, அது யூஸுவலான காட்சியா போயிருக்கும். அதான் கண்ணாடி வழியா பார்க்கிற மாதிரி வெச்சோம். அதுவும் நிலையா ஓரிடத்தில் இருக்கிற கண்ணாடியில்லை. யாரோ ரெண்டு பேர் தூக்கிட்டுப் போற கண்ணாடியில் ஹீரோவைப் பார்க்கிற மாதிரி.

கண்ணாடியில் தெரிஞ்ச ஹீரோவைத் திரும்பி பார்க்காம, மூவ் பண்ற கண்ணாடிக்கிட்டே போய் ஹீரோயின் பார்ப்பாங்க. கண்ணாடி அந்த இடத்தைவிட்டு மூவ் ஆனதால அந்தப் பிரதிபலிப்பு இருக்காது. இதனால் தன்னை மறந்து ஹீரோவை அவங்க தேடுறாங்கன்னு படம் பார்க்கிற மக்களுக்கும் அந்த இடத்தில் புரியும்.

ஹீரோயினுக்கு ஹீரோ ஏஞ்சல் மாதிரி. அதனால் இந்த காதல் காட்சிக்கு வெள்ளை டிரெஸ்தான் பொருத்தமா இருக்கும்னு யோசிச்சி, ஹீரோவுக்கு அப்படியே வைத்தோம். என் படங்களில் ஒவ்வொரு காட்சிக்கான காஸ்டி யூம்ஸை இப்படித்தான் திட்டமிட்டு வைப்பேன்.

என் படங்கள் எப்பவுமே ரோலர் கோஸ்டர் மாதிரி. அந்த ரேஸ் எப்படி வெரைட்டியான அனுபவமா இருக்குமோ, அந்த மாதிரிதான் என் படங்களிலும் ஜாலியான நிறைய விஷயங்கள் இருக்கணும்னு மெனக்கெடுவேன். டைரக்‌ஷன் செய்யும்போது என் படங்களில் பெரும்பாலும் டெக்னீஷியன் ரிப்பீட் ஆவதே இல்லை. கேமரா மேன், மியூசிக் டைரக்டர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் இப்படி பெரும்பாலான டெக்னீஷியன்கள் ஒவ்வொரு படத்துக்கும் மாறுவாங்க.

புதிய புதிய நபர்களோடு சேர்ந்து வேலை பார்ப்பதை நான் ரொம்பவும் எதிர்பார்ப்பேன். சில டெக்னீஷி யன்களோட சேர்ந்து வேலை பார்க்கும்போது ரெண்டு, மூணு படங்கள் இடைவேளை விட்டு மீண்டும் சேர்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலையும் உருவாகியிருக்கு. ஹிந்தியில படம் பண்ணும் போது என்னோட ஐந்து படங்களுக்கு சிராஜ்னு ஒரு ரைட்டர்தான் வேலை பார்த்தார். அவரும் இப்போ மாறிட்டார்.

அதே மாதிரி ஒரு படம் பண்ணும்போது ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன் இப்படி எல்லாருக்குமே காட்சி எனக்கு எப்படி வேணும்னு நடிச்சுக் காட்டிடுவேன். படத்தோட 15 வது ஸீன்ல ‘இந்த இடத்துல இப்படி நடிக்கட்டுமா?’ன்னு ஒரு கேரக்டர் பண்றவங்க கேட்டால், ‘நல்லா இருக்கும். ஆனா, இதுக்கு அப்புறம் வரப் போற 41-வது ஸீன்ல இப்படி பண்ணப் போறோம். அதனாலதான் இப்படி பண்ணணும்!’’ன்னு சொல்வேன். அவங்களும் புரிஞ்சிப்பாங்க.

இதை எழுதும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. ஒரு படப்பிடிப்பில் அதில் நடிக்கிற ஹீரோயினிடம், ‘இந்த இடத்தில் இப்படி நடிங்க?’ன்னு நான் நடிச்சு காட்டினேன். அதுக்கு அவங்க, ‘என்ன சார் எல்லாமே நீங்களே சொல்லிக் கொடுக்குறீங்க? ஏன் இப்படி நடிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. ‘நீங்க நடிக்கிறது சரியா இருந்தா ஓ.கேதான்’னு சொன்னேன். ‘சரி சார்’ன்னு நடிச்சு காட்டுனாங்க. நல்லாதான் இருந்தது. அதையே நானும் நடிச்சு காட்டினேன். கடைசியில் அவங்களே, ‘நீங்க பண்ணியதுதான் நல்லாயிருக்கு சார்!’ன்னு சிரிச்சிட்டே, ‘என் மூளைக்கு வேலையே இல்லை’ன்னு சொல்லி, நான் சொன்ன மாதிரி தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்க.

ஆறேழு வருஷங்களுக்கு அப்புறம் தமிழில் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’படம் டைரக்‌ஷன் பண்ணப் போறேன். அப்பாடா.. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கணும். இன்னும் அந்த ஆர்வம் அப்படியே இருக்கு. தீபாவளின்னா எவ்வளவு ஜாலியா இருப்போம். ஆனா, அன்றைக்கே ஸ்கூல்ல பரீட்சையும் இருந்தா எந்த மாதிரி ஒரு மனநிலையில் இருப்போம். அப்படித்தான் இப்போ எனக்கு ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’வேலையிலயும் இருக்கு.

ஒரு படத்துல ஹீரோவாக இருக்கும்போது ஸ்பாட்ல இயக்குநருக்கு என்ன தேவையோ அதை மட்டும் பண்ணிக்கொடுத்துட்டுப் போய்டுவோம். அதுவே டைரக்டரை ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’னு சொல்வாங்க. டைரக்‌ஷன்ல இருக்கும்போது கேப்டன் ஆஃப் தி ஷிப்பாவும், ‘ஸ்பாட் பாய்’ பையனாவும் நானேதான் இருப்பேன். உதாரணமா, ஸ்பாட்ல ஹீரோயின் ஸ்லிப்பர் போட்டிருப்பாங்க.

ஷாட் ரெடின்னதும் அந்த ஸ்லிப்பரை கழற்றிவிட்டுட்டு ஸ்பாட்டுக்கு வருவாங்க. உடனே அந்த ஸ்லிப்பரை வேற யாராவது வந்து எடுத்துட்டா ஓ.கே! இல்லேன்னா, யாரையும் எதிர்பார்க்காம நானே அந்த ஸ்லிப்பரை எடுத்து வெளியே வைத்துவிட்டு ஷாட்டுக்கு ரெடியாவேன். ‘செய்யும் தொழிலே தெய்வம்!’ங்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச வரி.

ஹீரோவாகி டைரக்‌ஷன் பண்றது வேற. நேரடியா டைரக்‌ஷனுக்குள்ள வர்றது வேற. ஹீரோவா இருக்கும்போது அனுபவிக்கிற எல்லா விஷயங்களையும் டைரக்‌ஷன் பண்ணும்போது விட்டுடணும். குறிப்பா, டைரக் ஷன்ல இருக்கும் போது நாமதான் ஸ்பாட்டுக்கு முதல் ஆளா வரணும்கிறது தொடங்கி நிறைய பொறுப்பு இருக்கு. ஏற்கெனவே நான் கொரியோகிராஃபி பண்ற டெக்னீஷியனா இருந்ததால அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே மாதிரி ஸ்பாட்ல நாம கோபப்படலாம். ஆனா, ஆர்டிஸ்ட் கோபப்பட்டுட்டா அது காட்சியில் பிரதிபலிக்கும். அதனாலயே அவங்களை டென்ஷன் ஆகாமப் பார்த்துப்பேன்.

டைரக்‌ஷன்ல இருக்கும்போது பெருசா நான் டிரெஸிங்ல எல்லாம் கவனம் செலுத்துறதே இல்லை. ஏதோ ஒண்ணு, அந்த நேரத்துக்கு கண்ணுல படுறதை எடுத்துப் போட்டுக்கிட்டு போய்டுவேன். ஹீரோ மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டுக்கணும்னு தோணவே தோணாது. டிரெஸிங் பத்தி பேசும்போது இங்கே இன்னொரு ஜாலியான விஷயம் நினைவுக்கு வருது.

சின்ன வயசுல எல்லாம் எனக்கு லுங்கி, வேட்டி கட்டிக்கிற பழக்கமே இல்லை. ஒருமுறை எங்க கிராமத்துக்கு போறப்ப, பக்கத்து ஊர்ல இருந்த உறவினர் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்தோம். அன்றைக்கு ராத்திரி அங்கேயே தங்குற மாதிரி ஒரு சூழல் உருவாச்சு. நான் ஷார்ட்ஸ் போட்டுட்டுத் தூங்கப் போனேன். உறவினர் வீட்டிலிருந்தவங்க அதைப் பார்த்துட்டு, ‘பிரபு இது என்ன பழக்கம் தூங்குறப்ப ஷார்ட்ஸ்? லுங்கி கட்டிக்கோ’ன்னு கொடுத்தாங்க.

நானும் அதை கட்டிட்டுத் தூங்கிட்டேன். அதிகாலையில உடம்பு ஜில்லுன்னு குளிர ஆரம்பிச்சுது. என்னடா இது இவ்ளோ குளிருதேன்னு எழுந்திருக்கிறேன்... லுங்கி இடுப்புலயே இல்லை. அது எங்கேன்னும் தெரியலை. நல்லவேளை யாரும் பார்க்கலைன்னு பொறுமையா எழுந்து அந்த லுங்கியைத் தேடி எடுத்துக் கட்டிக்கிட்டேன். இப்பவும் கல்யாண ஸீன்ல வேட்டிக் கட்டிக்கணும்னு சொல்வாங்க. முன்னாடியே அதுக்கு ஒரு பெல்ட் வேணும், ஒரு ஷார்ட்ஸ் வேணும்னு சொல்லிடுவேன்.

நான் நடிகனாகி அப்புறம்தான் டைரக்ட ரானேன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, நான் முதன்முதலா டைரக்‌ஷன் பண்ண வரும்போது சில பேர் என்ன சொன்னாங்க தெரியுமா? அதைத்தான் அடுத்து சொல்லப்போறேன்.

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்