கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது, தோழர் என்று சொல்லி உங்களுக்கு அழைப்பு வந்தால் அதைத் துண்டியுங்கள் என்று கூறியிருந்தார். அது நெட்டிசன்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலையில், தோழர் என்ற வார்த்தை வைரலானது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Antony Selvaraj
இயக்கத் தோழர்களும், இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக 'தோழர்' என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா, ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். 'குடி அரசி'லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். - ஈ.வெ.ரா.
குடி அரசு - அறிக்கை - 13.11.1932.
Kalaingar Magesh
நான், 'சொல்லுங்க தோழர்'ன்னு யார்கிட்டையாவது பேச ஆரம்பிச்சாப் போதும், 'ம்க்கும்... உங்கப்பா இப்போதைக்குப் போன வெக்க மாட்டார்டா' என்பாள் என் துணைவி.
King Prabhu
தோழர்- பெயர்ச்சொல் அல்ல; வினைச்சொல்.
இது உங்களை உரிமைக்காக, சுயமரியாதைக்காக, அடக்குமுறைக்கு எதிராக போராடத் தூண்டும்.
இது உங்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மனிதநேயம் கொள்ளக் கற்றுத் தரும். சமத்துவத்தைப் போதிக்கும்.
ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை உரக்க சொல்வோம். தோழர் என..!
Srcitizen Srcitizen
'தோழர்' என்று சொல்லுவோம், கை கோத்துச் செல்லுவோம்!
Venkatesa Krishnan
'ஜி' என்பது போலி. தோழர் நமக்கு பாதுகாப்பு வேலி.
சுப்பிரமணிய பாரதி பகத் குமார்
ரஷ்யாவில் காம்ரேட் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை தோழர் என்று தோழர் ஜீவானந்தத்தால் மொழி பெயர்க்கப்பட்டது.
Shaik Habib
சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்: துடிப்பான போலீஸ் அதிகாரி. நேர்மையான அதிகாரிகள் லிஸ்ட்டிலும் வருவாரு. அவரையும் நாம விட்டு வைக்கவில்லை. அவர் சொல்லாத விசயத்தை சொன்னதாக பரப்புரை செய்து தோழர் தோழர் என்று பதிவுகள் போட்டோம். அவர் தான் கூறாத கருத்து என்று மறுத்துள்ளார். நாம் யாரை தாக்குகிறோம், அவர் எப்படிப்பட்டவர் என்று சிந்திப்பதே இல்லை.
D S Gauthaman
எங்க அப்பாவுக்கு செல்பேசியில் அழைப்பு வந்தால் பெரும்பாலும் அவங்க பேசும் முதல் இரண்டு வார்த்தைகள், 'சொல்லுங்க தோழர்!' என்பதாகவே இருக்கும்! தட், நான் தீவிரவாதியோட பையன் மொமெண்ட்!
ThiruMurugan Krishnamurthi
இன்று தமிழகம் கவுரமாக இருக்கிறது என்றால் காரணம் பெரியாரும் தோழர்களும். இவர்களுக்கு என்ன தெரியும்? கொஞ்சம் தமிழக வரலாற்றையும் படிக்கச் சொல்லுங்கள்.
கருப்பு கருணா
யாதும் ஊரே...
யாவரும் தோழர்..!
தோழர் பனிமலர்
"ஆகவே தோழர்களே உங்கள் புத்திக்கு சரி என்று பட்டதை தைரியமாக செய்யுங்கள். சிறிதுகூட அந்த பூச்சாண்டிகளுக்கு பயப்படாதீர்கள்"- 'தோழர்' பெரியார்.
sekarpalraj
கருப்பு சட்டை போட்டால், தோழர் என்று அழைத்தால், அரசைக் கண்டித்தால் தேச துரோகி. பரவால்ல நான் துரோகியாவே இருந்துட்டு போறேன்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago