அம்மா, அப்பா... செல்போனில் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள்- வீதிக்கு வந்து போராடிய 7 வயது மகன்

By க.சே.ரமணி பிரபா தேவி

வயது வித்தியாசம் இல்லாமல், ஏழை - பணக்காரர் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரின் நேரத்தையும் எடுத்துக் கொள்பவை ஸ்மார்ட் போன்கள். தொலைக்காட்சியின் இடத்தையும் அவையே ஆக்கிரமித்துவிட்டன.

குழந்தைகள் போனில் விளையாடிய காலம் போய், பெற்றோர்களும் போனில் நேரத்தைப் போக்கப் பழகிவிட்டார்கள்.

இன்றைய பெற்றோர்களில் பலர் வீட்டுக்கு வந்து குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடாமல், இணையத்தில் செலவிடுகிறார்கள். அவர்களின் குழந்தைகள் தனிமையை உணர்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 7 வயது எமில் ரஸ்டிகும் அப்படித்தான் உணர்ந்தான்.

ஆனால், மற்ற குழந்தைகளைப் போல சும்மா இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையை வீதிக்கு எடுத்து வந்தான். தன் பெற்றோரின் உதவியுடன் செல்போனுக்கு எதிராக பெற்றோர் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினான்.

'செல்போனில் விளையாடாதீர்கள். அதற்குப் பதிலாக என்னுடன் விளையாடுங்கள்!' என்பதுதான் பேரணியின் முழக்கம். செப்டம்பர் 8-ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 150 சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து எமிலுக்கு ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. ஜெர்மனி நாளேடுகளும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எமிலை ஹீரோ ஆக்கிவிட்டன. ஆனால் அவனுக்கு அது தேவையில்லை. எமிலுக்கும் எமில் மாதிரியான சிறுவர்களுக்கும் பெற்றோரின் அரவணைப்புதான் வேண்டும்..

கிடைக்குமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 hours ago

வலைஞர் பக்கம்

18 hours ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்