லோக்கல்பாடி வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே ஆலோசனைகளும் தீவிரமாக நடந்துவருகின்றன. இதையொட்டி பிரத்தியேகமாக எக்ஸ்க்ளூஸிவ் ஸ்பெஷல் சிறப்பு ரவுண்ட்-அப் கவர் ஸ்டோரிக்காக பொய்யூர் டைம்ஸின் நிருபர்கள் குழு தமிழகம் முழுவதும் ஹெலிகாப்டரில் சுற்றி, அலசி ஆராய்ந்து பிரத்தியேகத் தகவல்களை திரட்டிக்கொண்டு நமது அலுவலகம் திரும்பியிருக்கிறார்கள்.
இதில், தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் தங்களது சகாக்களுடன் ரகசியமாக என்ன பேசினார்கள் என்பதை ஆதாரபூர்வமாக சொல்வார்கள் என்று பார்த்தால்.. ‘ஹெலிகாப்டர் சத்தத்தில் எதுவும் காதில் விழவில்லை’ என்று சொல்கிறார்கள் நிருபர்கள். அதனால், ஓரளவுக்கு அரைகுறையாக காதில் விழுந்ததை நசுக்கி, தட்டி, நெம்பி, எப்படியோ ஒரு கவர் ஸ்டோரியாக தேற்றிவிட்டார்கள். இனி லோக்கல்பாடி ரவுண்ட்-அப்.
(பின்கூட்டியே இன்னொரு முன்குறிப்பு: எந்த தலைவரின், எந்த கட்சித் தொண்டரின் பேச்சு என்பதும் ஹெலிகாப்டர் சத்தத்தில் மிஸ்ஸிங். அதையும் கனிவுகூர்ந்து யூகித்துப் படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.)
‘‘மூணு சீட்டு.. மூணு சீட்டு.. வர்றியா, வர்றியா? நின்னா ஜெயிக்கிறது கன்ஃபார்ம்.. கன்ஃபார்ம். நிக்குறோம்.. அப்புடியே அள்ளுறோம். மூணு சீட்டு. வர்றியா, வர்றியா?’’
‘‘போன தேர்தல் அக்கவுன்ட்ட செட்டில் பண்றதுக்குள்ள பெண்டு நிமுந்துபோச்சு. அதுக்குள்ள இன்னொரு தேர்தலா, நோ சான்ஸ் டாடீ!’’
‘‘தொண்ணுத்தெட்டு.. மன்னிக்கவும்.. தொன்றுதொட்டு ஜனநாயகம் வளர்க்கும் கட்சி இது. யாராவது போட்டி போடுகிறீர்களா தம்பின்னு கேட்டா, அனைவரும் தெறித்து ஓடுகிறார்கள். அதற்காகத்தான்.. அவகாசம் பத்தவில்லை. விதிமீறல், அது இதுன்னு ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி ஜனநாயக ரீதியாக ஜகா வாங்கிவிட்டோம். இருக்கவே இருக்கு அசெம்பிளி. அப்ப பாத்துக்கலாம். வீடு போ போங்குது. சீயெம் சேர் வா வாங்குது’’
‘‘ஃபேஸ்புக், புள்ளையார் சதுர்த்தி.. எந்த ரூட்டுல போனாலும் கேட் போடுறாரே..’’
‘‘2016-ம் ஆண்டில் நம்ம ஸ்மாலய்யா முதல்வராகப் போகிறார். அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டிலே வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலிலே நமது வெற்றி உறுதியாகிவிட்டது..’’
‘‘தொலைநோக்குப் பார்வையில நம்ம ஐயாவுக்கு நெகரு ஐயாதான். பாரு.. 2011.. 2011ன்னுட்டிருந்தாரு. டக்குனு டபுள் ஜம்ப் அடிச்சு 2016ன்னு போய்ட்டே இருக்காரு பாரு. அவரோட அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு.’’
பர்த்டே முடிஞ்சிடிச்சுல்ல.. போதும் எழுந்து வாங்க. தொண்டர்கள் என்னமோ கேக்குறாங்க.. ‘‘ஊருக்கு ஊரு நாம வாய்கிழியப் பேசி, நம்ம ஆதரவோடதான பீயெம் ஆனாரு. இப்போ லோக்கல்பாடி பிரச்சாரத்துக்கு வரச்சொல்லுங்க’’ன்றாங்க தொண்டர்கள். வந்து பதில் சொல்லுங்க.
‘‘இதேபோலத்தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலே தான்சானியாவிலும் எத்தியோப்பியாவிலும் அக்கிரமக்காரர்களும் அராஜகக்காரர்களும் ஏதேச்சதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள்.
நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். வெட்கத்தையும் வேதனையையும் துக்கத்தையும் துயரத்தையும் சோகத்தையும் தாங்கிக்கொள்ளக்கூடியவர்கள் மட்டும் எங்கள் பக்கம் இருங்கள்.’’
‘‘தோத்துப் போய்டுவோம்றத எவ்ளோ ரைமிங்கா சொல்றாரு பாரு’’
‘‘தேர்தல் வந்துட்டா போதும்.. நம்மாளுங்க உடனே சண்டை போட்டுக்கிட்டு வேட்டிய கிழிச்சுக்க ஆரம்பிச்சுடுறாங்க. அந்த கிரிக்கெட் கிளப்புக்காரங்க எவ்ளோ தைரியமாச் சொன்னாங்க.. ‘‘மது அருந்தும் இடம் இது. இங்கு வேட்டி கட்டியிருந்தால் அவிழ்ந்து அநாகரிகமாகிவிடக் கூடாதேன்னுதான் பேன்ட் போடச் சொல்லியிருக்கோம்’’னாங்க. அவங்க பாணியில, நாமளும் பேன்ட்டுக்கு மாறியிருக்கலாம்.’’
‘‘லோக்கல் பாடி எலெக் ஷன்ல அமெரிக்க ஃபண்ட் குரோர்கணக்குல வந்து இறங்குது. ஒபாமாவே டேரக்டா சப்ளை பண்றார். ஜார்ஜ் வாஷிங்டன் படம் போட்ட டாலர் கரன்சிய ஒயிட்ஹவுஸ்ல சேர் போட்டு உக்காந்துண்டு ஒபாமாவும் மிஷெல்லும் எண்ணிண்டிருக்கா. அதுக்கான சிடி ஆதாரம் எங்கிட்டே இருக்கு. இதுசம்பந்தமா இன்டர்நேஷனல் கோர்ட்டுல பப்ளிக் இன்டரஸ்ட் லிட்டிகேஷனல் ஃபைல் பண்ணப் போறேன்..’’
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago