நெட்டிசன் நோட்ஸ்: ஏர்செல் - பதினைந்து வருட நட்பு முடிவுக்கு வரும் போல

By இந்து குணசேகர்

ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்

ஆல்தோட்டபூபதி‏

பண பிரச்சனைல செல்போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு போனவனை பார்த்திருக்கோம், ஒரு நெட்வர்க் கம்பெனியே ஸ்விட்ச் ஆப் ஆனதை இப்ப தான் பார்க்கிறோம் #Aircel

கௌதம்ராம்

‏என் பொள்ளாச்சி நண்பன்

அவன்,அப்பா ,அம்மா,மாமா,தம்பி

ஊருக்காரங்க முக்கால்வாசி பேரு

ஏர்செல் தானாம்

குடும்பத்தையே தவிக்க விட்டுட்டானுக

 

 

ரங்கூஸ்கி 2.0

‏மொதமொத அன்லிமிடெட்ங்கற கான்செப்ட்ட கொண்டு வந்தது யாரு நம்மபய  #Aircel தானே #RIP_Aircel  ;

 

 

சரவ் விழிப

‏நானெல்லாம் கடைசி வரைக்கும்

#aircel ல தான்

இருப்பேன் .....

தலைவன் திருப்பி வரும்போது என்னை spl ல கவணிப்பான். ..

 

 

மரியான் 

‏என்னை விட்டு சொல்லாதே

என் சிம்மே

வேண்டும்

உன் நெட்வொர்க் ஒன்றே.....

 

 

இடும்பாவனம் கார்த்தி

‏மதம்கூட உடனடியாக மாறிவிட முடிகிறது. நெட்வொர்க் மாறத்தான் ஒருவாரம் தேவைப்படுகிறது.

ஏர்செல் பரிதாபங்கள்.!

 

RETHINAVEL PANDIYAN

‏பண பிரச்சனையால செல்போனை "ஸ்விட்ச்ஆப்" பண்ணிட்டு போனவனை பார்த்திருக்கோம்,

ஒரு நெட்வர்க் கம்பெனியே "ஸ்விட்ச் ஆப்" ஆனதை இப்ப தான் பார்க்கிறோம்....

   

 

ரங்கூஸ்கி 2.0

‏இவனுங்க கூட 448 போடு 399 போடுனு டார்சர் பண்ணுவானுங்க ..ஆனா நம்ம #Aircel ஒரு வருசத்துக்கு ஒத்த பைசா பேலன்ஸ் இல்லைனா கூட  பேச வெச்சானுங்க #RIP_Aircel

எழில்   பாரதி

‏ஏர்செல்க்கு உடம்பு சரியில்லையாம்..   சீக்கிரம்  சரி ஆகிடுமாம்..

 

Antony Raj

‏முதல் காதலைப் போலவே முதல் செல் நெட்வொர்க்கும்...

Karthick

‏#Aircel அம்பானி அவர்களே. இந்த ஏர் செல் அபலைகளை காப்பாற்றுங்கள். ரட்சியுங்கள்

மேதகு சீமராஜா™

‏வாடிக்கையாளர்தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்

ஆனா, ஒரு நெட் வொர்க்கே தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது

அலெக்ஸ்™  

நியாபகம் வருதே நியாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே     

 

 

Seemaraja

‏முதன்முதலாக

மொபைல்போன்

வாங்கி அதில

சிம் வாங்கி போட்டு

பேசினது #Aircel network தான்!

இன்னிக்கு இழுத்து மூடப் போறாங்களாம்!!

நாம இப்ப அந்த network ல

இல்லேனாலும் வருத்தமாகத்தான்

இருக்கு!!

 

Senthilraja R‏

2 ஆயிரம் கால் பண்ணாங்க எங்க நிறுவனத்துக்கு மாறுங்கனு.. நான் 12 வருஷமா யூஸ் பண்றேன் மாற மட்டேனு செண்டிமெண்டா சொன்னேன்.. இப்போ அனுபவிக்கிறேன்..      #ஏர்செல்  #aircel @Aircel

சுப்ரமணி முருகன்

‏பதினைந்து வருட நட்பு

முடிவுக்கு வரும் போல

Hunt          

‏இன்னுமா #Aircel யூஸ் பன்றன்னு கேப்பாங்க! 

அப்போ புரியல இப்போ புரியுது! 

யுவி

‏பழையன கழிதலும் புது என புகுதலும் அதுதானேடா போகி!.

"ஏர்செல்" சிம்க்கு

 

Selva Prasad

‏எப்பயாச்சும் not reachable-னா பரவால்ல

எப்பவுமே not reachable-ல இருந்தா

எப்படிடா பொழப்பு நடத்தறது???

 

 

Kumar@MGM

‏அடேய் #Aircel திரும்ப வருவியா இல்லை அப்படியே போய்டுவியா   

ரூபன்

‏அவனுங்க இழுத்து மூடிட்டு போய்ட்டா அங்க வேலை பாக்குறவங்க நிலை தான் பரிதாபம் #AircelBlackOut

Joe Selva....

‏இன்னைக்கு ஏர்செல் ஏற்பட்ட நிலைமை தான் வருங்காலத்தில் ஏர்டெல் வோடாபோன் வரலாம் ஜியோ அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்திவிட்டது #AircelBlackOut

 

 

Johnny Ram

‏ஏர்செல் யூஸ் பண்றவங்கலாம்தான் டைனோசர் காலத்துலேயே அழிஞ்சிட்டாங்களேப்பா!

ஆனா ஒரு காலத்துல நல்லா வாழ்ந்த மனுசன்யா.

பட்டுக்கோட்டையான்   

‏எங்கூர்ல ஏர்செல் டவர் வச்சானுங்க அப்ப ஒரு மாசம் ஏர்செல் டூ ஏர்செல் ஃபிரீ.

எதுத்த வீட்டுக்கு கூட ஃபோன் பண்ணி தான் போசிப்போம்.

அந்த பாவம் தான் இப்ப

 

 

AK ராஜ்   

‏ஏர்செல் யூஸ் பண்ணுன கடைசி தலைமுறை நாம தான்

ப்ரோ Wild Yak 

‏#Aircel #AircelBlackOut தமிழக நிறுவனம் ஏர்செல் கடைய காலி செய்யுது. தாங்கள் இத்தனை வருடம் அளித்த சேவைக்கு, வாடிக்கையாளராகிய நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜியோக்காரன் இதத்தான் எதிர்பார்த்தான்.

 

நான் உன் நண்பன்

‏எப்பயும் டவர்தான் தொடர்பு எல்லைய விட்டு வெளியவே இருக்கும்.

இப்ப கம்பெனியே     

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்