பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 76. 'நவீன ஐன்ஸ்டீன்' என்ற அறிவியல் உலகில் அழைக்கப்படும் ஸ்டீபன் ஹாக்கங்கின் மறைவு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
Raajaachandrasekar
அவரின் ஆழமான ஒரு சிந்தனை நினைவில் வந்து போகிறது.
"எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல; என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்."
பழந்தமிழன்
"Stephen Hawking"
வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங்
மய்யம்
Stephen Hawking என்பது பெயரல்ல இயற்பியல் சித்தாந்தம்
மஞ்சள் நிலா
எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம்,
அங்கு எப்போதும்..உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்!!
ஆனந்த்
என் வாழ்க்கையில் உங்கள் வரவு....ஒரு மிருத்தியுஞ்சய பயணம்... யாராலும் வெல்ல முடியாத காலத்தை வென்று ....அதை முன்னும் பின்னும் அமைத்தவர் தாங்கள்.. ஆதியும் அந்தமும் முற்றும் அற்றுப்போன பிரபஞ்சமே உங்கள் சிந்தையில் ஒரு காற்புள்ளி...
Hameed Udeen
#ஸ்டீபன்_ஹாக்கிங்
நீங்கள் போயிருக்கலாம், ஆனால் நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்து நேசிக்கப்படுவீர்கள்.
முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்
கட்டை விரல் காயத்தை காரணம் காட்டி முயற்சியை தள்ளிப் போடுகிறோம்.
ஆனால் Stephen Hawking கிற்கு கழுத்துக்கு கீழ் எந்த உறுப்பும் இயங்காது.
அந்த ஒரு காரணம்தான்..
மத்தபடி அவரோட அறிவியல் அறிவைப்பற்றி 0.0001% கூட தெரியாது....
annanNadarajan
ஒரு உன்னத அறிவியலாளரை இந்த உலகம் இழந்துள்ளது.
இயற்பியலின் இதிகாசத்தை புரட்டிப்போட்டுவிட்டு
நம்மிடையே நிரப்ப சாத்தியமே இல்லாத வெற்றிடத்தை விட்டு சென்றுவிட்டீர்!!
உமது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்!!
குழந்தை அருண்
இந்தத் தலைமுறைக்கான விஞ்ஞானியே..
பவித்ரன் தமிழன்
நகராத தன் உடல் மூலம் உலகையே அளவெடுத்த வித்தகர் Stephen Hawking மறைந்தார்...
பூ.கொ. சரவணன்
நவீன இயற்பியலின் மகத்தான ஆளுமையாக விளங்கியவர் ஸ்டீபன் ஹாகிங். இரண்டாண்டில் மரணம் என இறுதி நாள் குறிக்கப்பட்டதை மீறி பிரபஞ்சம், கருந்துளை, வெளி, காலம் பற்றிய நம் புரிதலை மேம்படுத்திய பெருவாழ்வு அவருடையது. ஐன்ஸ்டீனின் பிறந்தநாளன்றே அவர் காலமானது கவித்துவமான அஞ்சலி.
Mukil Thangam
அண்டம் உருவான கட்டுக்கதைகளின் விடை..
விடாமுயற்சிக்காரன், அறிவியலாளன்
ஸ்டீபன் ஹாக்கிங்
Rathna Senthil Kumar
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர், மக்களுக்காக சிந்தித்த மாமனிதர்.... நியூட்டன்...ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அந்த இடத்தை இட்டு நிரப்பியவர்...தசைச்சிதைவு நோய் பாதிப்பை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல் இயங்கிக்கொண்டே இருந்தவர்.... " A Brief History Of TIME " உள்ளிட்ட பல புத்தகங்கள் மூலம் இப்பேரண்டத்தை மக்களுக்கு உணர்த்திய ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள்....
Shanmuga Vasanthan
"மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை"
ஸ்டீபன் ஹாக்கிங்
Eniyan Ramamoorthy
அய்யா ஆத்திக அடிப்படைவாதிகளே வாழ்நாளில் ஒருமுறையேனும் அறிவியலாய் யோசித்து நாத்திகமென்னும் அன்பைத் தெரிந்து கொள்ள இவரை வாசியுங்கள். உங்கள் வான சாஸ்திரம் அத்தனையும் தவிடுபொடியாகும்.
அறிவியல் உலகம் இருக்கும் வரை நீங்கள் இருப்பீங்க தலைவா... உங்களுக்கு எதுக்கு இரங்கல் செய்தி.
Ramasubramanian Subbiah
அயின்ஸ்டின் தனது 'சார்புக் கொள்கையை' வெளியிட்ட போது, ' மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு நியூட்டனின் தரத்தில் ஒரு இயற்பியலாளர்' என்றார்கள்.
அந்த அயின்ஸ்டினுக்கு நிகராக வைத்து பேசப்பட்டவர் இயற்பியலாளர், ஸ்டிஃபன் ஹாக்கின்ஸ்.
நலங்கிள்ளி
ஸ்டீஃபன் ஆக்கிங் - நானாக அவருடன் ஏற்படுத்திக் கொண்ட அறிவியல் நட்பு என்றும் தொடரும். நான் யாருடனும் ஒளிப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அவர் நான் வியக்கும் மனிதராக இருக்க வேண்டும் எனக் கருதுபவன். நான் அப்படி சந்தித்து ஒளிப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவர்களுள் ஆக்கிங்கும் ஒருவர். யார் நிதியுதவி பெற்றேனும் லண்டன் சென்று அவருடன் ஒரு நிமிடம் பேச வாய்ப்பு கிடைக்குமா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லை. ஸ்டீஃபன் ஆக்கிங் என்னை விட்டு, நம்மை விட்டு பிரிந்து விட்டார்
Anbe Selva
மனித குலத்தின் இணையற்ற அறிவாளி / ஆராய்ச்சியாளர் / கடவுள் மறுப்பாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்.
Janakan Sivagnanam
இயற்பியல் அறிவியலாளர் Stephen Hawking காலமானார்.
மனித இனத் தொடர்ச்சிக்காக தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தவர்.
வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் பல எச்சரிக்கைகளை சொல்லிவந்தவர் இன்று தன் கிரகம் விட்டு வேற்றுக்கிரகம் சென்றார்.
Srimani Murugan
நாற்காலியில் அமர்ந்தே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்..! #stephenhawking
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago