மைக்கேல் ஃபாரடே 10

By பூ.கொ.சரவணன்

‘மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடேவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு மைக்கேல் ஃபாரடே பிறக்காமல் போயிருந்தால் ஒருவேளை நாம் நிரந்தரமாக இருண்ட காலத்திலேயே இருந்திருக்கக்கூடும். ஆம், இவரது முயற்சிகளின் தொடர்ச்சியாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது.

• தந்தை ஜேம்ஸ் ஃபாரடேவுக்கு கொல்லர் பணி. தெற்கு லண்டனில் பிறந்த மைக்கேலின் இளமைக் காலம் வறுமை நிறைந்தது. ஒரே ஒரு பிரெட் பாக்கெட்டை வைத்து வாரம் முழுக்க சமாளிப்பாராம்.

• மைக்கேல் முதலில் கற்றுக்கொண்ட தொழில் புத்தக பைண்டிங். அதுவே அவருக்கு புத்தகங்கள் மீதான ஈர்ப்பை உருவாக்கியது. புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியின் எழுத்துகளைப் படித்ததால் ஆர்வம் விஞ்ஞானத்தின் பக்கம் திரும்பியது.

• டேவியின் கூட்டங்களில் அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்ட மைக், அதை அவருக்கே எழுதி அனுப்பினார். அசந்துபோன டேவி, மைக்கேலை தனது மாணவனாக சேர்த்துக்கொண்டார். ‘எவ்வளவோ கண்டுபிடித்திருக்கிறேன். ஆனாலும், என் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு மைக்கேல் ஃபாரடே’ என்பார் டேவி.

• காந்தவியல் – மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. உலகின் முதல் மின்சார டைனமோ அவராலேயே உருவாக்கப்பட்டது.

• மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். உலோகங்களை பிரித்தெடுக்கும் மின்பகுப்பு முறையை செம்மைப்படுத்தியவர்.

• கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர், மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர்) உருவாக்கினார்.

• நல்ல எழுத்தாளர். அறிவியலை எளிய மனிதனுக்கும் புரிகிற வகையில் எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது ‘மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு’ புத்தகம் சிறந்த எடுத்துக்காட்டு.

• ‘ஃபாரடே விளைவு’ இன்றைக்கு மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்கப் பயன்படுகிறது. வாயுக்களை முதன்முதலில் திரவமாக மாற்றி சாதித்தவரும் ஃபாரடேதான்!

• உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படுகிறார். பல ஆண்டுகள் ஓயாமல் ஆய்வு செய்ததில், 6 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அறிவியல் அவரை ஆக்கிரமித்தது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்