தங்கம் வாங்கும்போது எடைக்கருவியை சரிபாருங்கள்!

By கி.பார்த்திபன்

வணிக நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகளை நுகர்வோர் எளிய முறையில் கண்டறிவதற்கான வழிமுறை, தங்க நகைக் கடையில் எந்த விதமான எடைக்கற்கள் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை தொழிலாளர் துறையினர் விளக்குகின்றனர்.

# விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை நுகர்வோர் எளிய வழியில் கண்டறிய வழி உண்டா?

வணிக நிறுவனங்களில் பொருள் வாங்கும்போது, அளவீடு செய்ய பயன்படுத்தப்படும் எடைக்கற்களை நுகர்வோர் திருப்பி பார்க்கலாம். எடைக்கற்களின் பின்புறம் கிரைண்டிங் (துளை) செய்திருந்தால் எடை அளவில் குறைவு ஏற்படும். தங்க நகைக்கடையில் பயன்படுத்தப்படும் மின்னணு எடைக் கருவியில் ரிமோட் மூலம் எடை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும்.

அந்த கருவியை பரிசோதிக்கும் வகையில் மாதிரி எடைக்கற்களில் எடை போட்டு சரிபார்க்க வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் 30 வினாடிகளில் ஐந்து லிட்டர் வீதம்தான் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. வேகமாக பெட்ரோல் நிரப்புவதற்கு அனுமதிக்க கூடாது. கூம்பு, ஊற்றல் அளவைகளில் உள்பக்கம் ஷீட் வைத்திருப்பர். அங்கும் மாதிரி அளவையில் ஊற்றி காண்பிக்க சொல்லலாம்.

# நகைக்கடையில் எந்த விதமான எடைக்கற்கள் பயன்படுத்த வேண்டும்?

எடைக்கற்களில் பொன் எடைக்கற்கள், பித்தளை எடைக்கற்கள், இரும்பு எடைக்கற்கள் என மூன்று வகை உள்ளது. அவை ஏ, பி, சி என தரம் பிரிக்கப்படுகிறது. தங்க நகைக்கடையில் பொன் எடைக்கற்கள் பயன்படுத்த வேண்டும்.

பித்தளை, இரும்பு எடைக் கற்கள் அனைத்து விதமான வணிக நிறுவனங்களிலும் பயன்படுத்தலாம். பொன் எடைக் கற்களிலும், எடையளவு கணக்கிட்டு தொழிலாளர் முத்திரை ஆய்வாளர் மட்டத்தில் முத்திரையிட வேண்டும். இயற்பியல் தராசு போன்ற அறிவியல் சாதன எடையளவுக் கருவிகள் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவதில்லை.

# பொட்டலப் பொருட்களில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?

பொட்டலப் பொருட்களை பொறுத்தவரை, என்ன பொருள், எவ்வளவு எடை அல்லது எண்ணிக்கை, திரவப் பொருட்களாக இருந்தால் லிட்டர் என்பது போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

அதுபோல் பொருள் தயாரிப்பு தேதி, எவ்வளவு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும், அதிகபட்ச விலை போன்ற விவரங்கள் பொட்டலப் பொருளின் மீது குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறை பின்பற்றாதது தொழிலாளர் துறையினர் ஆய்வின்போது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்.

# விற்பனை தொடர்பான குறைபாடுகளை எங்கு புகார் செய்யலாம்?

எடையளவில் மாறுபாடு, பொட்டலப் பொருட்களில் உற்பத்தி தேதி குறிப்பிடாமல் இருத்தல் போன்ற நுகர்வோர் சம்பந்தப்பட்ட புகார்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். தவிர, சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்