எழுவர் விடுதலை கோப்பு தொடர்பாக 6 மாதங்கள் முடிந்தும் ஆளுநர் பதில் தெரிவிக்காத நிலையில், அநீதியே 28 ஆண்டுகள் போதாதா உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, ஆளுநர் இந்தப் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. மேலும், இதுகுறித்து வெளிப்படையான, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் இன்னும் கோப்பில் கையெழுத்திடாததைக் கண்டித்து அண்மையில் வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் விரைவிலேயே இருவரின் உண்ணாவிரதமும் முடித்துவைக்கப்பட்டது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டு வருகிறார். ஆளுநருக்குக் கோப்பு அனுப்பி இன்று (மார்ச் 9) ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சென்னை, புதுச்சேரி, சேலம், திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக #28YearsEnoughGovernor, #அநீதியே28ஆண்டுகள்போதாதா உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
அற்புதம் அம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநருக்கு விடுதலை கோப்பு அனுப்பி இன்றுடன் 6 மாதம் முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
Prabhakaran Kamaraj @reddevil2 என்னும் பதிவர், இதன் பிறகும் போராட உடம்பில் தெம்பும் இல்லை, வலிமையும் இல்லை ...இதான் கடைசி வாய்ப்பு என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Vennila Thayumanavan @vennithayus என்னும் நெட்டிசன், கடலெனத் திரள்வோம்! எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை! என்றும், Sonia Arunkumar @rajakumaari என்பவர் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை. ராஜீவ் கொலை குறித்து தனக்கு முன்பே தெரியாது என்று அவர் சொன்ன உயிரான வரிகளை பதிவு செய்ய தவறினேன் - தியாகராஜன், ஐ.பி.எஸ். என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவை முருகன் என்னும் பதிவர் எழுவரின் இளமை பருவம் சிறையிலேயே முடிந்துவிட்டது.. அவர்களின் முதுமையாவது அமைதியாக கடக்கட்டும் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Suthakaran @suthakaran1984 என்பவர், இப்போது இல்லையெனில் இனி எப்போது... ஒன்று கூடுவோம்... உரக்கச் சொல்லுவோம்...#28YearsEnoughGovernor என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago