தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நேற்று மாலை 6. 10 மணியளவில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Senthilvasan
கலைஞர் இல்லாத தமிழக அரசியலை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை.... அவரது சாதனைகளை முறியடிக்க இனி எவரும் தமிழகத்தில் உதிக்க இயலாது
Sathyan KM
நீ நினைத்ததையெல்லாம் நிஜமாக்கிய தம்பி தடைகளை தகர்த்தெறிந்து உன் பக்கத்தில் இளைப்பாற வருகிறான் அண்ணா..
கபிலன்
அப்பன் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தால் போதும். பாதுகாப்பாக உணரும் மக்களைப் போல.. உணர்ந்திருந்தோம்.
கலைஞர்
வாழும்போதும் எந்த போராட்டத்திலும் தோல்வி இல்லை, இறப்பினும் எனக்கு தோல்வி இல்லை என்று நிருப்பித்துவிட்டார்
Babu Vmk
அவர் தேசியத் தலைவராக தன்னை நினைத்துக் கொள்ளவில்லை... ஆனால், இன்று இந்தியாவே அவரை தேசியத் தலைவராக உயர்த்தியுள்ளது.
Shiva Narayanan
வீட்டிலிருந்து அம்மா பேசினார், இன்னமும் அப்பா டிவி முன்பு அமர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறார் என்றார். கலைஞரிடம் சோறு வாங்கித் தின்றதில்லை, ஆனால், சோற்றுக்கான விதை அவர் போட்டது.
ஒரு முறை எம்ஜியார்தான் உனக்குப் பிடிக்குமே, எதற்கு கருணாநிதியை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய்' என்றதற்கு, நம்ம குடும்பமே அந்தாளுக்கு கடன் பட்டுருக்கோம்டா, என்றது இன்னமும் நினைவில் இருக்கிறது. காரணமெல்லாம் நானே புரிந்துக் கொண்டேன்.
எம்ஜியாரின் நடிப்பை மட்டுமே பார்த்து அவரை ரசிக்க வேண்டுமென்று, எதுவோ உந்தித் தள்ளியிருக்கிறது அவருக்கு. பின்பொருமுறை கேட்டதற்கு, நம்ம குடும்ப கட்சி திமுக என்றார்.
ஒரு எம்ஜியார் ரசிகராக இதை அவரிடம் எதிர்ப் பார்க்கவேயில்லை. எம்ஜியரை ரசிப்பதற்காக வைத்திருக்கிறார் போலும்.
இரண்டு வாரத்திற்கு முன்தான் அப்பாவிடம்,
அடுத்த ஆட்சியில் யாருக்கு ஓட்டு போடுவ? என்றேன்.
வேற யாருக்கு, கலைஞருக்குத்தான், என்றார் அப்பா.
அது வார்த்தையல்ல, ஒரு நான்கு தசாப்த காலத்தின் நம்பிக்கை.
Murugesa Pandian Natarajan
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள குடவாயில் கீரத்தனார் இயற்றிய முல்லையும் பூத்தியோ என்ற பாடலில் பொதிந்துள்ள சோகம் அளவற்றது. கலைஞரின் அகாலமான செய்தியைக் கேட்டபோது எனக்கு அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது. முல்லையும் பூத்தியோ என்று புலவன் பாடிய வரிகள் இன்றைக்கும் பொருந்துகிறது. கலைஞரின் வாழ்க்கை, தமிழரின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். போய் வாருங்கள் தலைவரே என உணர்ச்சி ததும்பிடச் சொலவதைத்தவிர வேறு சொற்கள் எதுவும் இல்லை. கலங்கிடும் மனதுடன் இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆன்மை தோன்ற ஆடவர்க்கு ஈந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ
ஒல்லையூர் நாட்டே
Andrew Sesuraj
கடவுளை வணங்கியவர்களை விட கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் கலைஞரும் நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள்.
Aloor Sha Navas
தமிழ் மணக்கும் திசை எல்லாம்
தேடினேன் உன்னை..
சான்றோர்கள் அவையெல்லாம்
அலையவிட்டேன் கண்ணை..
எங்களை தவிக்கவிட்டு
சென்றாயே தலைவா..
Dharmik Lee
ஒரே மாலையில் இரண்டு சூரியன் மறைந்த நாள், இன்று..!
Nellai Bharathi
உயிரெழுத்தை
இழந்து தவிக்கிறது
தமிழ் மொழி
அகர முதல்வன்
வரலாற்றின் களமுனையில்
தமிழின் மீது படிந்திருந்த
இருளை
உனது குரலும் விரட்டியது.
தமிழின் செழுமையை
உன் எழுத்தும் கூட்டியது.
சென்று வருக!
Lakshmi Saravanakumar
தமிழ் உள்ள வரை உங்கள் பெயரும் சாதனைகளும் நிலைத்திருக்கும். போய்வாருங்கள் ஐயா.
Mari Selvaraj
நினைவில் நிலைத்த குரல் நீ
நினைவில் நிலைத்த மொழி நீ
நினைவில் நிலைத்த கலை நீ
நினைவில் நிலைத்த உழைப்பு நீ
நினைவில் நிலைத்த அரசியல் நீ
நினைவில் நிலைத்த சின்னம் நீ
நினைவில் நிலைத்த கொடி நீ
நினைவில் நிலைத்த வரலாறு நீ
நினைவில் நிலைத்த வெற்றி நீ
நினைவில் நிலைத்த தோல்வி நீ
நினைவில் நிலைத்த பாவம் நீ
நினைவில் நிலைத்த ஏமாற்றமும் நீ
நினைவில் நிலைத்த வருத்தமும் நீ
நினைவில் நிலைத்த வாழ்க்கையும் நீ
பெருந்துயரிலும் சிரிக்க தெரிந்தவரே
அமைதிகொள்ளட்டும் உங்கள் ஆன்மா
சென்று வாருங்கள் கலைஞரே!
Thiruppur Krishnan
சொலல் வல்லர், சோர்விலார்!
கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்யக்கூடும் என்றிருந்த தருணம். பத்திரிகை நிருபராக அவரைச் சந்தித்தேன்.
அவர் மேடையில் பேசிவிட்டு இறங்கி காரில் ஏறியபோது அவரை நோக்கிச் சென்றேன். எப்போதும் பத்திரிகை நிருபர்களை மதிப்பவர் அவர். கண்களாலேயே என்ன என்று கேட்டார்.
மதுவிலக்குக் கொள்கையில் மாற்றமுண்டா? என்று கேட்டேன். இப்போதைக்கு மாற்றமில்லை! என்றார். அப்படியானால் விரைவில் மாற்றம் வருமா? என்று கேட்டேன்.
காரில் ஏறியவாறே இப் - போதைக்கு மாற்றமில்லை! என்றார். அடுத்த கேள்விக்கு இடமளிக்காமல் கார் விரைந்துவிட்டது!
Mohan Chellaswamy
அழியாச் சுடர்
நாம் மிகவும் நேசிப்பவர் இறந்துவிடவில்லை, நம்மோடுதான் இருந்துகொண்டிருக்கிறார் என்று நம்பினால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கனவுகளை சுடராய் ஏற்று அதன் பாதையில் தொடர்வதுதான்.
Pon Vimala
தன் சிந்தனையால்
எழுத்தால், கருத்தால்...
செந்தமிழைப் பல இதயங்களில் இனிமையாய் எளிமையாய் விதைத்ததில்...
கலைஞர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!
நன்றி கலைஞனே!
Bala Bharathi
இந்தியாவின் இன்னொரு
இமயம்!
தமிழகத்தின் மற்றொரு சூரியன்.
டாக்டர்.கலைஞர் அவர்களின் மறைவு
ஆழ்ந்த வேதனை.
வீரவணக்கம்.வீரவணக்கம்!
Kaalabairavan Arumugam
ஒரு சகாப்தம் விடை பெறுகிறது. ஆழ்ந்த இரங்கல்கள் தலைவரே.
RaguC
எப்படி இறந்தார் என்பதறியாமல் போனவர்களுகிடையே இப்படி இறக்க வேண்டும் என வெறி கொள்ள வைத்தவன் தலைவன்.
கொங்குநாடன்
ஆழமாக பார்த்ததில் ஒன்றை உணர முடிந்தது. தான் பிறந்த சாதியின்பாலும் /மதத்தின் பெயரிலும் பற்றுக்கொண்டு, சமூகநீதியின் அடிப்படை அறிவற்றவர் மட்டுமே கலைஞரின் மறைவுக்கு வருந்தாதவர் எனக் கொள்ளலாம்.
நித்யா
கோபாலபுரம் இல்லத்திலிருந்து கிளம்பினார் தலைவர்;
அரை நூற்றாண்டு கால அரசியல் மையம் "கோபாலபுர இல்லம்" ஓய்வெடுத்துவிட்டது.
சகோ
தமிழை படித்து,
தமிழில் வளர்ந்து,
தமிழை வளர்த்து,
தமிழாய் தகனமாகும்
செந்தமிழ் தலைவரே
கலைஞர்....!
GokulRaj
அண்ணா இறந்தார் - முடிந்தது என்றார்கள். பெரியார் எங்களை பிரிந்தார்; இதோடு அவ்வளவுதான் என்றார்கள். கலைஞர் இப்போது நம்மோடு இல்லை; அறிவில்லாமல் இதோடு ஒழிந்தது என்று மகிழ்கிறார்கள்.
திராவிடம் ஒரு வலுவான கருத்தாக்கம். தலைவனை அது மீண்டும் மீண்டும் கண்டுகொள்ளும்.
SNantham
நீ விழுவது #விதையாய்...!
இடம் எதுவானாலும் அங்கே #மரமாய் எழுவாய்...!
திரு
தமிழ் தாயின் தலைமகனும்... சமூகநீதியின் கடைசி தலைவனும் மறைந்தான்.... சென்று வா தலைவா... இழப்பு உனக்கல்ல தமிழகத்திற்கே...
பெண்களுக்கு சொத்துரிமை, கிராமப்புற மாணவர் இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உள் ஒதுக்கீடு என இந்தியாவின் எந்த அரசியல்வாதியும் யோசிக்கக்கூட முடியாத சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தியவர்... And its going to End today...
Arunkumar sankaravel
கலைஞரின் மறைவையொட்டி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு நாட்டின் அனைத்து மாநிலத்திலும் அரசு துக்கம் அனுஷ்டிப்பது இதுவே முதல்முறையாம்.
karthikeyan
ஓய்வறியா சூரியன் ஓயிந்து போனது ...
ஓய்வறியா பேனாவின் மை வற்றிப் போனது ...
ஓய்வறியா கர்ஜித்த தமிழனுகான குரல் காற்றில் கலந்து போனது ...
கார்க்கிபவா
என் தலைமுறை கண்ட ஒரே நியாயமான தலைவனுக்கு நன்றிகள். நிகழ்காலம் தராத நன்மதிப்பை வரலாறு கொடுக்கட்டும்!
லதா சம்பத்குமார்
தேசிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவில் 26 மாநிலங்கள் அரசு விடுமுறை அறிவிப்பு!!
Dr. கலைஞர்.
பெரியாரிடம் இவ்வளவு தமிழார்வம் இருந்ததான்னு தெரியாது.
அண்ணாவிடம் இவ்வளவு ராஜதந்திரம் இருந்ததான்னு தெரியாது.
எம்ஜிஆரிடம் இவ்வளவு தொலைநோக்குப் பார்வை இருந்ததான்னு தெரியாது.
ஜெயாவிடம் இவ்வளவு சமூகநீதி இருந்ததான்னு தெரியாது.
ஆனா கலைஞர்கிட்ட எல்லாமே இருந்தது
SKP KARUNA
திராவிடத் திருவிளக்கு ஓய்வுபெற்றது.
கலைஞரின் ஓய்வறியா உழைப்பிலிருந்து சிறு கனலை எடுத்து நம் உள்ளத்தில் பொருத்திக் கொள்வோம். அடுத்தத்தடுத்தத் தலைமுறைப் பிள்ளைகளின் நெஞ்சினில் அதை ஏற்றி வைப்போம். தகப்பனின் கனவுகளைத் தூக்கிச் சுமக்க வேண்டிய பொறுப்பும்,கடமையும் பிள்ளைகளுக்கு உண்டு.
நாட்டுப்புறத்தான்
சூரியனின் இறுதி துயிலுக்காக...
நீ ஓய்வெடுக்கச்சென்று விட்டாலும், நீ செய்துச்சென்ற சமூக நீதிகள் இவ்வுலகம் உள்ளவரை உம்மக்களைக் காத்துக்கொண்டிருக்கும்...
Mohamed Rafik
கலைஞர் - காமராஜர்
கலைஞர் - எம்.ஜி.ஆர்
கலைஞர் - ஜெயலலிதா
கலைஞர் - எவனுக்கும் தகுதியில்லை என்று சென்று விட்டார்..
rajeshwaran
என் ஆறடி நிலம் கூட
நீ தந்ததாக இருக்க கூடாது,
நான் போராடி வென்றதாக இருக்க வேண்டும்!!!
*கலைஞர் கெத்து!!!*
Mohamed Rafik
கலைஞர் - காமராஜர்
கலைஞர் - எம்.ஜி.ஆர்
கலைஞர் - ஜெயலலிதா
கலைஞர் - எவனுக்கும் தகுதியில்லை என்று சென்று விட்டார்..
rip சூரியானே
ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்
ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
AMEER HAMSA
கலைஞர்
-------------
சரித்திரம் சரிந்து விட்டது
சகாப்தம் முடிந்து விட்டது
தமிழ் தாய்
செய்வதறி யாது
தமிழ் மண்ணில்
தவிர்த்து
நிற்கின்றாள்....
jagadeesh jk
#Karunanithi ஏழைகளுக்கு அதிகாரம் தந்ததால் அதிகம் எதிர்ப்புகளையும் சந்தித்தவர்
Balaraman
சோகம், பெருமை, மகிழ்ச்சி கலந்த ஒரு விளக்க முடியாத மனநிலைல இருக்கேன்... அப்பப்ப என்ன அறியாம கண்ணீர் வருது... கலைஞர் உடல் மட்டுமே நம்மை விட்டு பிரிந்தது... தமிழ் வெல்லும்
ஜகதீஸ்
போராட்டத்தில் தொடங்கி
போராட்டத்தில் முடித்துக்கொண்டார்
இந்த மகத்தான கலைஞர்
The Rockstar AK™
கலைஞர் Bio Pic எடுக்கறப்ப இப்டி ஒரு மரண மாஸான கிளைமேக்ஸ் தேவைப்படும் தான்..
யாழ்... :)
இந்த மாதிரியான ஒரு வழியனுப்புதல் யாருக்குமே கிடைக்காது..... பெருவாழ்வு....
Rk suresh
வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்
-முத்துவேல் கருணாநிதி
T V A SARKAR
கருணாநிதி அவரின் இறுதி இட ஒதுக்கீடு போராட்டத்தையும் வென்றார் !
எழுதி வைங்கடா
கில்லி
வாழும் போது கலைஞர்.. சாகும் போதும் கலைஞர்.. இன்னும் 1000 ஆண்டு ஆனாலும் கலைஞர்..
Pancy
JJ : ஏய் கருணாநிதி....
MK : அந்த அம்மையார் அவர்கள்...
J.JAMAL MOHAMED
மறையாத சூரியன்
வற்றாத ஜீவ நதி
கலைஞர்!
கலைஞர் உடன் பிறப்புகள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 hours ago
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago