புராண நாடகங்களில் வள்ளியாக ஆயிரம் மேடை கண்ட அபூர்வ நந்தினி

By பி.ஜோசப் ஜெரால்டு

திருச்சி: இயல், இசை, நாடகம் இவை மூன்​றும் சேர்ந்​தது​தான் முத்​தமிழ். இதில், நாடகக் கலை என்​பது தொலைக்​காட்​சிகளின் வரு​கைக்கு முன்பு மக்​களால் பெரிதும் ரசிக்​கப்​பட்​டது. 1980-​களுக்கு முன்பு ஒரு ஊரில் நாடகம் என்​றால், மாட்டு வண்டி கட்டி மக்​கள் சாரை சாரை​யாக சென்று இரவு முழு​வதும் நாடகத்தை ரசித்​து​விட்​டு, திரும்​பு​வார்​கள்.

தற்​போது, நாடகங்​களுக்கு மவுசு குறைந்​தா​லும், பல்​வேறு கிராமக் கோயில்​களில் இன்​றள​வும் புராண நாடகங்​களை நடத்தி வரு​கின்​றனர். இதற்​காகவே, ஒவ்​வொரு ஊர்​களி​லும் நாடக மேடை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அதில், வள்ளி திரு​மணம், அரிச்​சந்​தி​ரா, பவளக்​கொடி, வீர​பாண்​டிய கட்​டபொம்​மன், பொன்​னர் சங்​கர், பாண்டி மீனா உள்​ளிட்ட நாடகங்​கள் இடம் பெறும்.

நாடகக் கலைகள் நலிந்து வரு​வ​தாக​வும், நாடகத்​தில் வள்​ளி, தெய்​வானை, பார்​வதி போன்ற பாத்​திரங்​களில் நடிக்க முன்​பு​போல பெண்​கள் முன் வரு​வ​தில்லை என்று நாடகக் கம்​பெனி​யினர் ஆதங்​கம் தெரிவிக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், மணப்​பாறை பகு​தி​யைச் சேர்ந்த நந்​தினி(22) என்ற இளம்​பெண் நாடகக் கலை​யில் ரசிக்க வைக்​கிறார். சாதாரண கிராமப்​புற மைக்​கு​களில் தன்​னுடைய கணீர் குரலாலும், அழகு நடை தமிழாலும் தனக்​கென ஒரு ரசிகர் பட்​டாளத்தை உரு​வாக்​கி​யுள்​ளார். குறிப்​பாக, வள்ளி திரு​மணம் புராண நாடகத்​தில் வள்​ளி​யாக வலம்​வந்​து,ஆடல் பாடலுடன் அசர வைக்​கிறார்.

திருச்சி மாவட்​டம் மணப்​பாறை அருகே அமையபுரம் கிராமத்​தைச் சேர்ந்​த குமரசங்​கன்- அன்​னக்​கிளி தம்​ப​தி​யின் மகளான இவர், 16 வயது முதல் நாடகங்​களில் நடித்து வரு​கிறார். இது​வரை சுமார் 1,000 நாடகங்​களில் நடித்​துள்​ளார். இதுகுறித்து நந்​தினி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய​தாவது: பொருளா​தார ரீதி​யாக மிக​வும் பின்​தங்​கிய குடும்​பத்​தில் இருந்து தான் வந்​துள்​ளேன். திருச்சி சேவா சங்​கம் பள்ளியில் படிக்​கும்​போது, முதன்​முதலில் மேடை​யில் பாடல் பாடினேன். மேலும், தமிழ் மொழி மீது மிகுந்த பற்​றும், நல்ல குரல் வளமும் இருப்​ப​தாக ஆசிரியர்​கள் ஊக்​கப்​படுத்தி பரிசுகளை வழங்​கினர்.

16 வயதில் எங்​களது கிராமத்​தில் உள்ள கோயில் கலை​யரங்​கில் நடை​பெற்ற வள்ளி திரு​மணம் நாடகத்​தில் வள்​ளி​யாக நடித்து எனது முதல் அரங்​கேற்​றத்தை செய்​தேன். அப்​போது எனது பெற்​றோர் மற்​றும் கிராமத்​தினர் மிகுந்த உற்​சாகம் கொடுத்​தனர். அதன் பிறகு எனது குரு​நாதர் பெரு​மாள் ராஜ் அளித்த ஊக்​கத்​தால், தொடர்ந்து பல்​வேறு ஊர்​களுக்​குச் சென்று வள்ளி திரு​மணம் நாடகத்​தில் வள்​ளி​யாக நடித்து வரு​கிறேன். திருச்​சி, புதுக்​கோட்​டை, சிவகங்​கை, மதுரை, திருநெல்​வேலி, ராம​நாத​புரம், கரூர், சென்னை என பல்​வேறு மாவட்​டங்​களில் 7 ஆண்​டு​களில் கிட்​டத்​தட்ட 1,000 நாடகங்​களில் நடித்​துள்​ளேன். தற்​போது திருச்சி கலைக்​ கா​விரி நுண் கலை கல்​லூரி​யில் பரதக் கலை பயின்று வரு​கிறேன்.

கடந்த காலங்​களில் புராண கதைகளை மக்​கள் வெகு​வாக விரும்பி இரவு முழு​வதும் பார்த்து ரசிப்​பார்​கள். ஆனால், தற்​போது பல நாடகங்​களில் ஆபாச​மான பேச்​சுகள் இருந்​தா​லும், நாங்​கள் அது​போல இல்​லாமல் நாகரீக​மான வார்த்​தைகளை மட்​டுமே பயன்​படுத்தி பயணிக்​கிறோம். பெண் என்​ப​தால் சில கிராமங்​களில் சில​ரால் பல தொந்​தர​வு​கள் ஏற்​பட்​டாலும், அதை​யும் கடந்​து​தான் செல்ல வேண்​டி​யுள்​ளது. கிராமங்​களில் நாடகம் முடிந்த பின், வள்​ளி​யாக நடிக்​கும் என்னை பெண்​கள் பலர் மகள் போல பாவித்து பாராட்​டு​வது, எனக்கு மிகுந்த உற்​சாகத்தை அளிக்​கும்.

தற்​போது இந்த நாடகக் கலைத் துறை​யில் பெண்​கள் மிக​வும் குறைந்து விட்​டனர். இந்​தக் கலையை காப்​பாற்ற பெண்​கள் முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இன்று உலக நாடக கலை தினம். நாடகக்​கலை பரிணாம வளர்ச்சி பெற்று சினிமா உள்​ளிட்ட அடுத்​தக்​கட்​டத்​துக்கு சென்​றாலும், கிராமத்​தில் நடக்​கும் நாடகத்​துக்கு தனி ரசிகர் பட்​டாளம் இன்​றள​வும் இருந்து வரு​கின்​றனர். இளம் வயதிலேயே ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மேடைகளில் களம் கண்ட இந்த நந்​தினி போல, இன்​னும்​ பல நந்​தினிகள்​ உரு​வாக வேண்​டும்​ என்​ப​தே இந்​தக்​ கலை​யை வளர்ப்​பவர்​களின்​ எதிர்​பார்​ப்​பாக உள்​ளது | இன்று உலக நாடகக் கலை தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

மேலும்