ஹேப்பி நியூ இயர்! - விண்வெளியில் நடக்கப் போகும் சாதனை கைகுலுக்கல்!

By த.வி.வெங்கடேஸ்வரன்

ஸ்பேடெக்ஸ் பரிசோதனையில் ஈடுபடும் SDX01 என்கிற துரத்து விண்​கல​மும் SDX02 என்கிற இலக்கு விண்கல​மும் PSLV-C60 ஏவூர்தி மூலம் நேற்று இரவு விண்​ணில் செலுத்​தப்​பட்​டுள்​ளது. விண்வெளி விண்கல இணைப்பு பரிசோதனைதான் ஸ்பேடெக்ஸ் (SpaDeX -Space Docking Experiment).

மிகமிக உயரே உள்ள கம்பத்​தில் கையால் பிடித்​தபடி ஊஞ்சல் ஆடும் சர்க்கஸ் வீரர் திடீர் என்று தன் கைப்​பிடியை விட்டு அந்தரத்​தில் பல்டி அடித்து மற்றொரு வீரரின் கையைப் பிடித்து மாறுவது போல விண்​வெளி​யில் இரண்டு விண்​கலங்​கள், ஒன்றை ஒன்று நெருங்கி இரண்டு ரயில் பெட்​டிகள் இணைவது போல இணையும் பரிசோதனை அடுத்த சில நாட்​களில் நடைபெற உள்ளது.

பல ரயில் பெட்​டிகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ரயில் வண்டி தொடரை ஏற்படுத்தி இரண்டு பெட்​டிகளுக்கு இடையே பாலம் போன்ற அமைப்பை உருவாக்கி, ஒரு பெட்​டியி​லிருந்து மறு பெட்​டிக்கு செல்ல நடைபாதை வாயில் இருக்​கும். இதேபோல விண்​வெளி​யில் இரண்டு விண்​கலங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து இரண்​டுக்​கும் நடுவே ஆட்கள் செல்​வதற்கான பாதை ஏற்படுத்து​வது​தான் விண்​வெளி விண்கல இணைப்பு. ரயில் பெட்​டியை இணைத்து பாதை ஏற்படுத்​தும்​போது கீழே விழுந்​து​விடாமல் இருக்க உறுதியான பலகை​யும், மழை வெயில் போன்ற​வற்றி​லிருந்து பாது​காக்க சுற்றி​லும் திரை​யும் போதும். ஆனால் விண்​வெளி​யில் இணைப்பு ஏற்படுத்​தும்​போது இரண்டு விண்​கலங்களில் இருந்​தும் காற்று வெளியேற முடி​யாத​படிக்கு சீல் செய்த இணைப்பை ஏற்படுத்த வேண்​டும்.

கப்பலை துறை​முகத்​தில் நிறுத்து​வதைப் போல, விண்​வெளிக்​குடிலில் ஒன்றுக்கு மேற்​பட்ட இணைப்பு தளங்கள் இருக்​கும். போயிங் ஸ்டார்​லைனர் விண்​கலத்​தில் விண்​வெளிக்கு சென்ற சுனிதா வில்​லி​யம்ஸ் தனது கலத்தை விண்​வெளிக்​குடிலின் நிறுத்து இணைப்பு தளத்​தோடு பிணைத்து அதன் வழியே குடிலுக்​குள் குடியேறினார். பூமிக்கு திரும்​பும்​போது இதேபோல இந்த இணைப்பு வழியே விண்​கலத்​தில் நுழைந்து, விண்கல இணைப்​பைப் பிரித்து, வரும் 2025 பிப்​ரவரி மாதம் பூமிக்கு திரும்​புவார்.

பேருந்​துகள், ரயில்​களில் ஆபத்துகால வாயில் உள்ளதுபோல மனித விண்​வெளி பயணத்​துக்கு விண்​கலங்​களில் இதுபோன்ற இணைப்பு தளம் அவசி​யம். ‘ககன்​யான்’ திட்​டத்​தின் மூலம் இந்தி​யர்களை விண்​வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ திட்​டத்​தின் ஒரு பகுதியாக இந்தப் பரிசோதனை மேற்​கொள்​ளப்​படு​கிறது. சுமார் 470 கி.மீ. உயரத்​தில் சில நொடி வித்​தி​யாசத்​தில் பூமியை சுற்ற ஏவப்​படும் துரத்து விண்​கலம்​SDX01 -க்கும் SDX02 இலக்கு விண்​கலத்​துக்​கும் இடையே பத்து நாட்​களில் சுமார் ஐம்பது கி.மீ. இடைவெளி ஏற்பட்டு​விடும். நெடுஞ்​சாலை​யில் நாம் நமது காரின் வேகத்​தைக் கூட்டி நமக்கு முன்னே போகும் நண்பரின்
காரை எட்டிப் பிடித்துவிட முடி​யும். ஆனால் பூமியைச் சுற்றி வரும் விண்​கலம் தனது வேகத்​தைக் கூட்​டி​னால் அதன் உயரம் கூடும்; வேகத்​தைக் குறைத்​துக்​கொண்​டால் உயரம் குறை​யும். எனவே துரத்து விண்​கலம் வேகம் எடுத்து முன்னேறினால் அதன் உயரம் கூடி வேறு பாதை​யில் செல்​லும். எனவே இரண்​டும் இணையும் நிகழ்வு சிக்கல் மிகுந்​தது.

ஐம்பது கிலோமீட்டர் இடைவெளியை முதலில் ஐந்து கி.மீ. இடைவெளி​யாகக் குறைப்​பார்​கள். துரத்து விண்​கலம் வேகம் எடுத்து முன்னேறும்; அதன் பாதை சற்றே உயரும். அந்த நிலையில் இரண்​டும் நெருங்​கும் நேரத்​தில் இலக்கு விண்கல ​மும் தன் வேகத்​தைக் கூட்டி தனது உயரத்தை கூட்​டிக்​கொள்​ளும். இதன் பிறகு இரண்டு விண்​கலத்​துக்​கும் இடையே ஐந்து கி.மீ. இடைவெளி இருக்​கும். மறுபடி மறுபடி துரத்து விண்​கலம் முன்னேறும்; உயரம் சற்றே கூடும். அதற்கு ஈடு செய்​யும் வகையில் இலக்கு விண்​கலம் தன் உயரத்​தைக் கூட்டி அதே பாதைக்கு வந்து சேரும். இந்த இரண்​டாம் கட்டத்​துக்கு பிறகு இரண்​டுக்​கும் இடையே இடைவெளி 1.5 கி.மீ. ஆகக் குறை​யும்.

இதேபோல இயக்​கிப் படிப்​படியாக 500 மீட்​டர், 225 மீ, 15 மீ, 3 மீ என அடுத்தடுத்து இடைவெளியைக் குறைப்​பார்​கள். சிறு உந்து ராக்​கெட்களை பயன்​படுத்தி இறுதி​யில் இரண்டு விண்​கலங்​களும் ஜாடிக்கு ஏற்ற மூடிபோல நேர்க்​கோட்​டில் வந்து சேரும். நொடிக்கு ஒரு செ.மீ. வேகத்​தில் இரண்​டும் ஒன்றுடன் ஒன்று மோதும். மோதும்​போது அதில் உள்ள இணைப்​பான்கள் இயங்கி ஒன்றுடன் ஒன்று பிணைந்து இணைந்து கொள்ளும். சோவியத் யூனியன் அக்டோபர் 30, 1967 அன்று, காஸ்​மோஸ் 186 விண்​கலத்தை விண்​வெளி​யில் காஸ்​மோஸ் 188 விண்​கலத்​தோடு இணைத்து முதல் ஆளில்லா விண்​வெளி விண்கல இணைப்பு சோதனையை மேற்​கொண்​டது.

பின்னர் விண்​வெளி வீரர்கள் தாங்கிய சோவியத் யூனியனின் சோயுஸ் 4 விண்​கலம் சோயுஸ் 5 விண்​கலத்​துடன் இணைந்து மனித விண்கல இணைப்பு சோதனையை 1969-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி நடத்​தி​யது. இதன் தொடர்ச்​சியாக பல்வேறு ஆளில்லா விண்​கலங்களை விண்​வெளிக்கு அனுப்பி ஒன்றுடன் ஒன்றை இணைத்து ரயில் வண்டி தொடர்போல உலகின் முதன் முதல் விண்​வெளி நிலை​யமான சல்யுட்டை ஏப்ரல் 19, 1971-ல் சோவியத் யூனியன் நிலை நிறுத்​தி​யது. இதில் மூன்று பேர் கொண்ட குழு​வினர் 24 நாள் விண்​வெளி​யில் பயணித்து சாதனை செய்​தனர்.

இதைத் தொடர்ந்து விரை​வில் அமெரிக்கா​வும், பின்னர், 2011-ல் சீனா​வும் வெற்றிகரமாக விண்​வெளி இணைப்பு சாதனைகளை நிகழ்த்​தின. நான்​காவது நாடாக இந்தியா இந்த முயற்​சியை மேற்​கொண்ட போதி​லும், இஸ்ரோ தயாரித்த புது​முறை இணைப்பு தொழில்​நுட்​பத்தை பரிசோதனை செய்யப் போகிறார்கள் என்பது​தான் சிறப்பு. சர்வதேச விண்​வெளி குடில் உட்பட மனிதர்களை ஏந்திச் செல்​லும் விண்​கலங்​களில் எல்லாம் இதுபோன்ற இணைப்​பான் வாசல் இருக்​கும். தற்போது உள்ள இணைப்​பான்கள் பெரும் எடை கொண்​டவை, பல மோட்​டர்கள் இயங்கிதான் பிணைப்பை உறுதிப்​படுத்​தும். எடை குறைவாக​வும் ஒரே ஒரு மோட்​டாரில் இயங்​கும்​படி​யும் புதிய வடிவ பிணைப்பு கொக்​கிகளை வடிவ​மைத்​தும் இஸ்ரோ புதிய தொழில்​நுட்​பத்தை தயாரித்​துள்ளது. இதை இந்தப் பரிசோதனை​யில் சோதனை செய்​வார்​கள். மேலும் இரண்டு கலங்கள் விண்​வெளி​யில் அடிமேல் அடி வைத்து ஒன்றை ஒன்று நெருங்க தேவையான செயற்கை நுண்​ணறிவு அல்காரிதம்களை இஸ்ரோ உருவாக்கி​யுள்​ளது. இதையும் சோதனை செய்​வார்​கள்.

இஸ்ரோ​வின் எதிர்கால கனவு​களான மனித விண்​வெளிப் பயணத்​துக்கான இந்தியா​வின் லட்சி​யங்​கள், நிலவில் தரையிறங்கி கல் மண் மாதிரிகளை சேகரித்து அங்​கிருந்து வேறு ஒரு ராக்​கெட்டை இயக்கி ​விண்​கலத்​தில் இந்த ​மா​திரிகளை பூமிக்கு ​திரும்ப எடுத்து​வரும் சந்​திர​யான்-4 ​திட்​டம், இந்தியா​வின் ​விண்​வெளி நிலை​யமான பாரதீய அந்​தரிக் ஷ் நிலைய கட்டு​மானம் ஆகிய​வற்றுக்கு ​விண்​வெளி ​விண்​கல இணைப்​பு தொழில்​ நுட்பம் அவசியமாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்