இன்று பிறந்​தநாள்: உத்​தம்​சிங்​கின் உயிர்த் தியாகம்

By Guest Author

ஆயிரக்​கணக்கான பேர் சுட்டுக் கொல்​லப்​பட்ட ஜாலியன்​வாலா பாக் படுகொலைக்கு காரணமான பஞ்சாப் மாகாண ஆளுநர் மைக்​கேல் ஓட்வியரை 21 ஆண்டுகள் காத்​திருந்து, அவரது சொந்த நாட்​டிலேயே சுட்டுக் கொன்ற மாவீரன்​தான் உத்தம்​சிங்.

பஞ்சாப் மாநிலம் சாங்​ரூர் மாவட்​டத்​தில் உள்ள சுனம் என்ற ஊரில் கடந்த 1899 டிசம்பர் 26-ம் தேதி பிறந்​தார் உத்தம்​சிங். 7 வயதில் தாய் - தந்தையரை இழந்​தார். ஆதரவற்​றோர் இல்லத்​தில் அண்ணனுடன் வளர்ந்​தார். தனது 18 வயதில் ஒரே அண்ணனை​யும் இழந்​தார். பிறகு, அமிர்​தசரஸில் உள்ள ஜாலியன்​ வாலா பாக் அருகே பெட்​டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

1917-ல் ஆங்கிலேயர்​களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க நீதிபதி சிட்னி ரவுலட் தலைமை​யில் குழு அமைக்​கப்​பட்​டது. அந்த குழு பரிந்​துரை அடிப்​படை​யில், 1919 மார்ச் 18-ம் தேதி ரவுலட் சட்டம் இயற்​றப்​பட்​டது. இச்சட்​டத்​தின்​கீழ் எந்த ஒரு இந்தி​யரை​யும், எந்த காரண​மும் இல்லாமல் கைது செய்து, விசாரணை நடத்​தாமல் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடி​யும்.

இதற்கு நாடு முழு​வதும் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. பஞ்சாப் மாகாணம் அமிர்​தசரஸ் நகரின் ஜாலியன்​வாலா பாக் பகுதி​யில் 1919 ஏப்ரல் 13-ம் தேதி அறுவடை திருநாளாம் பைசாகி நாளில் கண்டன கூட்டம் நடைபெற்​றது. சுமார் 20 ஆயிரம் பேர் கூடி​யிருந்த அந்த இடத்​தில், அனைவருக்​கும் குடிநீர் கொடுத்​தார் உத்தம்​சிங்.

பழி தீர்க்க சபதம்: ஜாலியன்​வாலா பாக்​கில் நாலாபக்​க​மும் வீடு​களின் பின்புற சுவர்கள் இருந்தன. உள்ளே செல்ல 5 மிகக்​குறுகிய சந்துகள். ஒரேயொரு பெரிய சந்து. அதன் வழியே ஒரே நேரத்​தில் 6 பேர் நுழைய​லாம். இதன் வழியாக ஜெனரல் டயர் நுழைந்து, மண் மேடை மீது ஏறி, 10 நிமிடத்​துக்​குள் 1,650 ரவுண்​டுகள் சுட்​டான். இதில் ஏராள​மானோர் உயிரிழந்​தனர். பிணங்​களுக்கு அடியில் கிடந்த 20 வயது உத்தம்​சிங், சிரமப்​பட்டு எழுந்து நின்று கதறி அழுதான். “என் மக்கள் இறப்​புக்கு பழிதீர்ப்​பேன்” என சபதம் ஏற்றான்.

துப்​பாக்​கிச் சூட்​டில் 1,800 பேர் உயிரிழந்​ததாக அமிர்​தசரஸ் மருத்​துவமனை தலைமை மருத்​துவர் சுமித் தெரி​வித்​தார். ஆனால், வெறும் 369 பேர் மட்டுமே தனது துப்​பாக்​கிச் சூட்​டில் இறந்​ததாக ஜெனரல் டயர் அறிக்கை அனுப்​பினார். இந்த துப்​பாக்​கிச் சூட்டுக்கு முன்​அனுமதி தராத பஞ்சாப் மாகாண ஆளுநர் மைக்​கேல் ஓட்வியர், அந்த அறிக்கை​யில் Ratified (ஏற்​கப்​பட்​டது) என்ற ஒரு வார்த்​தையை எழுதி, பின்னேற்பு வழங்கிய பாவத்தை செய்​தார்.

மக்கள் கொதித்​தெழுந்​தனர். ஆனால், ஹண்டர் விசாரணை குழு யாரை​யும் தண்டிக்க​வில்லை. ஜெனரல் டயர் இங்கிலாந்​துக்கு பணி மாறுதல் செய்​யப்​பட்​டார் அவ்வளவு​தான். 1919-ல் பணிக்​காலம் முடிந்​த​தால் மைக்​கேல் ஓட்வியர், ஆளுநர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்​டதோடு சரி. இந்த கொடுமைகளை பொறுக்காத உத்தம்​சிங், அவர்களை பழிதீர்க்க 1933-ல் இங்கிலாந்து சென்​றார். 1937-ம் ஆண்டு முதல் லண்டன் ஷெப்​பர்ட் புஷ் குருத்​வாரா​வில் இருந்து செயல்​பட்​டார். இடைப்​பட்ட காலத்​தில் பக்கவாத நோயால் ஜெனரல் டயர் காலமானார். அதனால் மைக்​கேல் ஓட்வியரை பழிதீர்க்க காத்​திருந்​தார் உத்தம்​சிங்.

1940 மார்ச் 13-ம் தேதி லண்டன் மாநகர், காக்ஸ்டன் ஹாலில் மைக்​கேல் ஓட்வியரின் நிகழ்ச்சி நடைபெற்​றது. கோட், சூட், வேறொரு​வரின் அடையாள அட்டை, துப்​பாக்கி​யுடன் அங்கு வந்த உத்தம்​சிங், 4-வது வரிசை​யில் காத்​திருந்​தார். மைக்​கேல் ஓட்வியர் பேசி முடித்​ததும், மக்கள் கலையத் தொடங்​கினர். உத்தம்​சிங் கையில் ரிவால்​வருடன் அவரை நெருங்​கினார். தன்னிடம் கைகுலுக்க வருவதாக நினைத்​தார் மைக்​கேல். கொஞ்​ச​மும் தாமதிக்​காமல் மைக்​கேலை சுட்டு வீழ்த்​தினார் உத்தம்​சிங்.

‘தோட்​டாக்கள் மைக்​கேல் ஓட்வியரின் விலா எலும்​புகளை துளைத்து இதயத்​தின் வலதுபக்​கமாக வெளி​யேறியது’ என ‘THE PATIENT ASSASSIN’ (A True Tale of Massacre, Revenge and the Raj) என்ற நூலில் அனிதா ஆனந்த் எழுதி​யுள்​ளார்.

தூக்கு தண்டனை: உத்தம்​சிங் ஓடி ஒளிய​வில்லை. உண்மையை ஒப்புக்​கொண்​டார். சிறை​யில் 41 நாட்கள் உண்ணா​விரதம் இருந்​தார். அவரது வாயில் உணவு திணிக்​கப்​பட்​டது. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்​கப்​பட்​டது. இந்த தீர்ப்பை கேட்​டதும் மகிழ்ச்​சி​யடைந்​தார். இந்திய மண்ணில் தனது உடல் புதைக்​கப்பட வேண்​டும் என கோரிக்கை வைத்​தார். 1940 ஜூலை 31-ம் தேதி லண்டனின் பென்டோ சிறைச்​சாலை​யில் தூக்​கி​லிடப்​பட்​டார். அங்​கேயே அவரது பு​கழுடல் புதைக்​கப்​பட்​டது. இந்​திய மண்​ணில் தன் உடல் புதைக்​கப்பட வேண்​டும் என்ற அவரது ஆசை 1947-ல் இந்​திய அரசின் நட​வடிக்கை​யால் நிறைவேறியது. இந்​திய சுதந்திர வரலாற்றில் உத்​தம்​சிங்​கின்​ உ​யிர்​த்​தி​யாகம்​ ஈடு இணையற்​றது.

கட்டுரையாளர்: முனைவர் எம்.எஸ். முத்​துசாமி, முன்​னாள் காவல்​துறை தலைவர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

14 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்