திருச்செந்தூரில் மிகவும் பின்தங்கிய சமூகத்தில், ஏழ்மையான பொருளாதார சூழலில் கண்ணையா - இசக்கியம்மாள் மகனாக கடந்த 1954 ஜனவரி 26-ம் தேதி பிறந்தார் வீரசங்கிலி கண்ணையா தனபாலன் என்ற வீ.கே.டி.பாலன். திருச்செந்தூரில் தொடங்கிய அவரது பயணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி சென்னையில் நிறைவடைந்திருக்கிறது.
1986-ல் சென்னையில் விமான நிறுவனங்களுக்கான பயணச்சீட்டு முகமை நிறுவனத்தை தொடங்கினார். அதை தொடங்கியபோதும், அதற்கு முன்பும் அவர்பட்ட சிரமங்கள், எதிர்கொண்ட துரோகங்கள், அவமானங்கள் வேதனைக்குரியவை. பள்ளி படிப்பைக்கூட தாண்ட முடியாத கல்வியே அவருக்கு கிடைத்தது. அவர் கற்றதுகுறைவு. ஆனால் கற்பித்ததோ மிக அதிகம். கடந்த 35 ஆண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள், சமூகஅமைப்புகள் என பல்லாயிரக்கணக்கான மேடைகளுக்கு விரும்பி அழைக்கப்படுகிற ஆளுமையாக விளங்கினார். பல்வேறு அறிஞர்களின் பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், தன்னம்பிக்கையை விதைக்கும் கவிதைகளின் தனிப்பெருங்காதலனாக வாழ்ந்தார்.
தான் சந்தித்த அனைவரையும் பாகுபாடின்றி நேசித்தார். யாசகர்கள், திருநங்கைகள், ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள், விடுதலையான கைதிகள், எய்ட்ஸ் நோயாளிகள் போன்றவர்களையே எப்போதும் சுற்றிச் சுற்றி வந்தார். பிரபலங்களின் வணக்கத்துக்கு உரியவராக திகழ்ந்த அதே நேரத்தில், யாராலும் கவனிக்கப்படாத மக்களுடனும் இரண்டற கலந்து பழகினார். இதுபற்றி நான் ஒருமுறை கேட்டதற்கு அவர் சொன்னது: ‘‘முன்னது எனது தொழில். பின்னது எனது இயல்பு. வெறுத்து ஒதுக்கத்தக்கவர்கள் என்று இங்கு யாருமே இல்லை. அவர்களில் ஒருவனாக இருந்து உருவான நான் அவர்களை எப்படி வெறுக்க முடியும்!’’
பல ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கத்தாவில் அன்னை தெரசாவை சந்தித்த பிறகு,கொஞ்சநஞ்ச ஆடம்பரங்களையும் துறந்தார். ‘என்றும் நான் எளியோருக்கானவன்’ என்றே கடைசி வரை வாழ்ந்தவர். பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ என்ற தொடர் நிகழ்ச்சியில், சமூகத்தால் வனிக்கப்படாதவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து நேர்காணல் செய்தார். பிழைப்பு தேடி, ரயிலில் பயணச்சீட்டின்றி பயணித்து சென்னைக்கு வந்தவர். எழும்பூர் ரயில் நிலையத்தில் காவலர்கள் துரத்தியதால் தப்பிச் சென்று, அமெரிக்க தூதரக வாசலில் வரிசையில் நின்று ஒளிந்துகொண்டார். அதன் விளைவாக, மிகப்பெரிய பயணச்சீட்டு முகமையின் அதிபர் என உச்சம் தொட்டவர். பின்னாளில், விமான நிறுவனங்கள் அவரது பயணத்துக்கு ஒரு பைசாகூட பணம் வாங்காமல் அவரை சிறப்பித்தன.
» பவுர்ணமி, வார கடைசி நாட்களில் சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள்
» தமிழகத்தில் 10,000 போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வி துறை மறுப்பு
சுற்றுலா துறைக்கும், அவற்றின் புதிய வளர்ச்சிகளுக்கும் அவரது பங்களிப்புகள் மகத்தானவை. ஆதரவற்ற ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பண முடிப்புடன் ‘மதுரா மாமனிதர் விருது’ என்ற பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கினார். World Tamil News.com ‘தமிழ்க்குரல்’ என்ற பெயரில் முதன்முதலாக இணைய வானொலியை தொடங்கி நடத்தினார், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்ய வேண்டும், மலரட்டும் மண்ணில் மனித நேயம் என்பதை தனது இரு கோட்பாடுகளாகக் கொண்டு வாழ்ந்து காட்டினார். தமிழ் மண்ணில் அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிறைவு செய்ய முடியாது.
கவிஞர் ஜெயபாஸ்கரன்
தொடர்புக்கு Kaniyamudhan25@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago