நெட்டிசன் நோட்ஸ்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - தமிழக காவல்துறையின் வரலாற்றுத் தவறு

By இந்து குணசேகர்

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது  போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

தமிழன்டா

‏தூத்துக்குடியில் கலவர செய்திகளை ஒளிபரப்பும் சேனல்கள் அரசு கேபிளில் இருட்டடிப்பு இல்லை: ஜெயக்குமார்

ஆமா, இப்போதைக்கு கரண்ட்ட மட்டும்தான் கட் பண்ணி இருக்கோம்  

Prãdéép TRICHY

‏#SterliteProtest  ஆரோக்கியமா வாழதான்டா போராடுனாங்க

வாழவே முடியாத படி அநியாயமா நீங்களே கொன்னுட்டீங்களேடா ???

Mani Soman

‏#SterliteProtest மக்களைப் பாதுகாக்கதான் துப்பாக்கி. மக்களைக் கொல்வதற்கா ????

மயில்.மாசிலாமணி

மக்களை மதிக்காத மத்திய அரசும் மாநில அடிமை அரசும் விரைவில் வீழும்!!!

Narmadha

‏உரிமைக்குப் போரடிய மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நகழ்த்தியதே தவறு..!

இதில் விதிமுறை மீறி முட்டிக்குமேல் சுட்டது பயங்கரவாதம்..!

பகை வேறோடு அறுக்க காத்திருக்கும்.

Logesh_G

‏#SterliteProtest அங்க செத்த ஒவ்வொரு உயிருக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும்

Edwinraj A

‏#SterliteProtest  காசு போட்டு நடத்துற ஆலை முக்கியமா..

அங்க சுத்தி வாழ்ற ஜனங்களோட வாழ்வாதாரம் முக்கியமானு கூட யோசிக்க முடியாத பலவீனமான அரசு.

Kevin Raj

‏எம் மண்ணில் எது இருக்கணும் எது இருக்கக் கூடாதுனு எம் மக்கள் தான் முடிவு பண்ண வேண்டும்

தமிழன்பன்

‏மிகப்பெரிய அரசு வன்முறைக்கு சாட்சியமாக மாறி இருக்கிறது ஸ்டெர்லைட் போராட்டம், தமிழக காவல்துறையின் வரலாற்றுத் தவறு.

Mukesh 

‏உயிரை விட காப்பர் முக்கியமா?

Thalapathy Sam

‏#sterliteprotest மற்ற மாநிலங்களில் மக்கள் ஆலையை  அடித்து நொறுக்கிய போது உரிமத்தை ரத்து செய்து விட்டு ஆலையை மூடி விட்டது அந்தந்த மாநில அரசுகள். இங்குள்ள பாஜக பினாமி அரசுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை.

Confused தமிழன்

‏சொந்த நாட்டு மக்களை இப்படி சுட்டுக் கொல்றீங்க.. கேவலம் ஒரு நிறுவனம் மக்களை விட பெருசா போச்சு.

நாங்க செஞ்ச பாவம் இந்த தேசத்தில் பிறந்தது தான்.. அதை தவிர வேற எந்த தவறும் செய்யல...

ShootThaKuruvi

‏அரச பயங்கரவாதம், அரச வன்முறை எதற்கும் தீர்வல்ல. அதுவே அனைத்திற்கும் ஆரம்பப் புள்ளி. அமைதிப் போராட்டத்தை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரமாக்கி, எரியும் பிரச்சினையில் பெட்ரோலை ஊற்றியுள்ளது தமிழக காவல்துறை. பலி 6, இறந்தோர்க்கு அஞ்சலி 

செந்தமிழருவி.

‏#SterliteProtest தம் சொந்த மக்களையே கொல்லும் காவல்துறை இந்த உலகில் எங்குமே இருக்காது. இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ராசு   

‏இன்னும் எத்தணை உயிர் பலி

பொறுத்துக்கொள்ளக் காத்திருக்கிறதோ

தமிழ்நாடு

எப்போது அகலும் இந்த நரக ஆட்சி

SPARTAN™

‏ஆளத்தெரியாதவன் கையில்

ஆட்சி..!

வலிமை தெரியாதவன் கையில்

வாக்குரிமை..!

வாழ்க ஜனநாயகம்..!

JAGANKUMAR

‏#SterliteProtest -நிராயுத பாணியான மக்களைச் சுட காவல் துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார் ! அமைதி வழியில் போராடும் மக்களை வன்முறை பாதைக்கு மாற்றியது இந்த அரசும் காவல்துறையும் தான் .

yuvaraj lakshman

‏ஒரு தனியார் தொழிற்சாலையை பாதுகாக்க ஓட்டு போட்ட மக்களை சுட்டுக்கொல்வது ஏன்?

SPARTAN™

‏இது போன்றதொரு மக்களாட்சியை உலகில் எந்த மூலையிலும் காண முடியாது..

மக்களுக்கெதிரான ஆட்சியே மக்களாட்சி போல..

Marley_Vincent

‏உன் உரிமைக்காக குரல் கொடுத்தால் 'நீயும் கொல்லப்படலாம்' - #தூத்துக்குடி

Abdul nazar.S

‏போராட்டம் பண்ணுவது தேச துரோகமா?

ஒரு தனியார் கம்பெனியைக் காப்பாற்ற 8 உயிர்களா?

உங்களின் கையாலாகாத தனத்தை இப்படி அப்பாவி மக்களின் மீது காட்டுறீங்களே டா..

Vino

‏ஸ்டெர்லைட்ட எதிர்க்க தூத்துக்குடிகாரனா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அங்க இருந்து வர உப்ப சாப்பிட்டவனா இருந்தா போதும்

pandu

‏அடப்பாவிங்களா சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் அரசு தான் ஜனநாயக அரசா. இது தான் சுதந்திர இந்தியாவா???

Kumar Parameswaran

‏#SterliteProtest தேடப்படும் குற்றவாளி விழாவில் வந்து சிறப்பித்து செல்கிறான், அவனை பிடிக்க முடியவில்லை. தன் தலைமுறைக்காக போராடுபவனை சுட்டுக்கொல்லும் காவல்துறை.

உளவாளி

‏சமகாலத்தில் நடந்த மிகப்பெரும் துப்பாக்கிச் சூடு. ஒரு தொழிற்சாலையை மூடுவதற்காக இவ்வளவும் எடப்பாடி அரசின் அழியாத கறை.

Muzor Aha'i

‏புரட்சியாளர்களைப் புதைப்பதால் புரட்சிகள் என்றும் அழியாது.

wasim akram

‏சர்வாதிகார ஆட்சி என்ற பயம் தோன்ற ஆரம்பிக்கிறது...மக்களைக் கொன்று குவிக்கும் அரசாங்கம்...#sterliteprotest

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்