பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கான 206 - ஐ சேஸிங் செய்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
ட்விட்டர் தாத்தா
இன்னைக்கு மேட்ச்க்கு அப்புறமும் தோனிக்கு ஹேட்டர்ஸ் இருந்தானா ஒண்ணு மென்டலா இருப்பான். இல்ல மன நோயாளியா இருப்பான்.
SK Boopathi
#CSK " இப்படை தோற்பின் எப்படை வெல்லும் "
CSK Rajesh
தோனி டு ஹேட்டர்ஸ்: கண்ணா துண்டு ஒரு தடவ தான் தவறும்..
வாழ்ந்து கெட்டவன்
நீங்கள் தோனியை தூற்றிக்கொண்டே இருங்கள், நாங்கள் போற்றிக்கொண்டே இருப்போம்
MadhankumaR
கடைசிவரை சாதாரணமாக இருந்து தோற்க இருந்த ஆட்டத்தை அசாதரணமாக ஆடி அணியை ஜெயிக்க வைத்த அந்த ஒற்றை நம்பிக்கையின் பேர்தான் #தல
கதிர்மொழிவர்மர்
அண்ணா சிரிக்கெட்ல finishing னா என்ன அண்ணா..!!
இன்னைக்கு நடந்த மேட்ச்ல தோனி விளையாடுனத பாருமா..!!
Dinesh
ராஜஸ்தான் மேட்ச்ல அவுட் ஆனவுடனே அப்படியே முதுக பிடிச்சுட்டு போடா அப்பத்தான் நம்புவாங்கன்னு கேலி கிண்டல்கள் வேற..நேத்து அடிச்ச சிக்ஸ்லாம் forearm and back uh bend பண்ணி அடிச்சது. 'அந்த' haters க்கு அவனோட கேம் மூலமாகவே பதில் சொல்லிட்டான்.
veera
தோனி சிக்ஸ் அடிச்சே பழகிட்டாரு, நாங்களும் அத ரசிக்க பழகிட்டோம். வயசாகிருச்சி முடிகொட்டிருச்சின்னு உங்களால என்ன சொல்லமுடியுமோ சொல்லிட்டு போங்கடா ஹேட்டர்ஸ்!!
CSK கயல்விழி
காலர தூக்கிவிட்டு கெத்தா சொல்வோம் நாங்க #தோனி ஃபேன்னு #Whistlepodu
Mohan
ஆயிரம் பேர் சிக்ஸ் அடிச்சாலும் #தோனி அடிக்கும் போது வர சந்தோஷமே தனி..
SKP KARUNA
என்னங்கடா? வோர்ல்ட் கப் விக்கெட் கீப்பர் ஸ்லாட்டுக்கு சோடி போட்டா பாத்தீங்க! சோடி... தல நின்னா ஸ்டெம்பிங்.. நடந்தா பவுண்டரி., உத்துப் பார்த்தாலே சிக்ஸர்லே... சின்னப்பசங்களா...
Loner
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தோனி.
ஆல்தோட்டபூபதி
இன்னமும் கொஞ்சம் வித்தை இருக்கு, மெதுவா கத்துத்தரேன், சரியா தம்பி கோலி.
CSK இம்ச
இந்த ஐபிஎல் சீசனோட ஒட்டுமொத்த கவனத்தையும் தோனி தன் பக்கம் திருப்பிட்டார்.
Hasan Kalifa
ஆர்சிபி என்னும் பெயர் வைத்த ஒருவன் 200 ரன்கள் அடித்தாலும் தோற்பான்,100 ரன்கள் அடிக்க வேண்டும் என்றாலும் தோற்பான். #RCBvCSK
வெற்றி!!!
ஜெயிக்குறதுக்கு முன்னாடி ஆடுறதும் ஜெயிச்சதுக்கு அப்புறம் கொண்டாடுறதும் இவர் வாழ்க்கைலயே கிடையாது...
cѕӄ яαɢuℓ
ஜெயிச்ச அப்றம் மூஞ்சில ஒரு துளி expression இல்ல.... CAPTAIN COOL பார் ஏ ரீசன்
dhinesh
ராயுடு சென்னையில ஆடுறான்னு நாம சந்தோஷப்படறதை விட மும்பையில ஆடலன்னு #Rohit அழுவறதுதான் அதிகமா இருக்கும்
Thillaiyampalam Tharaneetharan
ராயுடு இன்னுமொரு ரோஹித் சர்மா.
இத்துபோக இருந்தவொன்றை கண்ணாடிப் பேழையில் வைத்து அழகு பார்ப்பதற்கு சமமானது.
நிதிஸ் ராணாவின் வரவால் மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பில்லை என்றிருந்தவருக்கு டோனி ஆரம்ப வீரராக்கி உயிர் கொடுத்திருக்கிறார்.
ஜோக்கர்...
நேற்று இரவு 11 மணிக்கு ஆரம்பித்த "டோனி" புயல் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற இடங்களில் கடுமையாக வீசி வருகிறது..
கரையை கடக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம்..
ஆகவே ஹேட்டேர்ஸ் யாரும் சமூக வலைதளங்களில் உலாவ வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ் கிறுக்கு
தோனி சிக்ஸூக்கு தன்னை மறந்து ஸ்டேடியத்துல ஆர்சிபி ஃபேன்ஸூம் கை தட்றானுவ..
இது தோனிக்கு மட்டுமே சாத்தியம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago