காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
ஜெஜெயலலிதா எனும்நான்
ஒரு நாட்டின் பிரதமரையே பின்புற சுவரை உடைத்து குறுக்கு வழி ஏற்படுத்தி காப்பாற்றி கொண்டுபோக வேண்டிய நிலைமையில் தமிழக ஆட்சியாளர்கள்
இதெல்லாம் நாளைக்கு எஸ்டிடி ல வரும்ல
Pa.Periyasamy
வரலாற்றில் இன்று.....12/04/2018
பாஜக கடைசி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து அசிங்கப்பட்ட நாள்
நாசர்
காலா ன்னா கருப்பு...
காலன்..கரிகாலன்..
சண்ட போட்டு காக்குறவன்..
கருப்பு Rebellionனுடைய வண்ணம்.
எங்க சால்ல வந்து பாரு....
அத்தனையும் கருப்பா தெரியும்....
udhay kumar
கருப்பு.. பெரியாரோட வண்ணம். இன்னைக்கு எங்க ஊருக்கு வந்து பார். எல்லா வண்ணமும் கருப்பா தான் தெரியும். #GoBackModi
Arunkumar
#GoBackModi தமிழர்கள் போராட்டம் நடத்துவதை தெரிஞ்சும் தெரியாமல் செல்லும் @narendramodi நீங்கள் இந்தியாவை ஒற்றுமையாக இருக்க செய்யும் செயல்கள் இது தானா. தமிழ்நாட்டை தனி நாடு போல் நடத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கனவிலும் நினைக்கவேண்டாம்.
அந்துவான்
சான்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு..
மோடிக்கு திரும்பும்
இடமெல்லாம் கருப்பு
HBD டீச்சர்
பாருங்க நான் வரேன்னதும் புது ரோடுலாம் போட்ருக்கானுங்க
அது ரோடு இல்ல கருப்பு கொடி
Jassimshams
தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற நினைக்கும் மத்திய அரசே.... நூறு ஆண்டுகள் அல்ல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி எமது மண்ணில் உனது தாமரை என்றுமே மலராது #GoBackModi
கொம்பன்
மோடி மைNட் வாய்ஸ்:
ரோடு மட்டும் கருப்பா இருந்தா போகலாம்
ஊரே கருப்பா இருந்தா எப்படி போகுறது
சண்டியர்
நாட்ல பெரிய பெரிய ரோடு போட்டா மட்டும் தலைவன் இல்ல..
அந்த ரோட்ல தைரியமா போற அளவு மக்கள் அன்பை வாங்கியிருப்பவனே தலைவன்..
கார்க்கிபவா
மறைஞ்சு மறைஞ்சு போறார் மோடி. உண்மையில் இது defence expo தான்
கரிசற் காட்டான்
நீ தரை வழி இல்லாமல் ஆகாய வழி வந்தாலும் சரி தண்ணிக்குள்ள வந்தாலும் அங்கயும் எதிர்ப்பு இருந்திருக்கும். ஏன்னா இது தமிழ்நாடு...
பிரபு
மோடிக்கு ஒரு விஷயம் புரிஞ்சி இருக்கும்.. தமிழ்நாட்டில் தாமரை மட்டும் அல்ல நாம விதைக்கிற புல் பூண்டு கூட முளைக்காது என்று !!!
தனி காட்டு ராஜா
ஒரு பிரதமர் வருகையை எதிர்த்து போராடிய முதல் மாநிலம், அதையும் உலகங்கள் அறிய செய்த பெருமை, தமிழுக்கும், தமிழனுக்கும் மட்டுமே சாரும்....
CH.Sekar, Ex.MLA.
ஒரு மாநிலத்தில் நுழைய அந்நாட்டின் பிரதமருக்கு இத்தனை எதிர்ப்பென்றால்
எத்தனை மோசமான ஆட்சி நாட்டில் நடக்கிறது!?
kaviyarasan
Ipl இடம் மாறி விட்டால் ! கருப்பு கொடி காட்டி விட்டால் ! தண்ணீர் கிடைத்து விடுமா? என்று கேட்கும் அறிவாளிகள் எல்லாம் மிஸ்டு கால் கொடுத்து நதிகளை இணைக்க முயற்சி செய்தவர்கள் தானே ....!!! #GoBackModi
ஜோன் தாஸ்
#GoBackModi எதிரிகளை கூட வரவேற்போம் ஆனாlல், துரோகிகளை...
Vivek Gananathan
நிறமே ஆயுதம்; உடையே கேடயம்.
இது கறுப்பர்நாடு!
Karthik Meka
இந்திய திருடர்களின் சிறந்த பொம்மையான #மோடியேதிரும்பிப்போ
stupid Common Man
கறுப்பு கொடியை கூட எதிர் கொள்ள மனமில்லாத அளவுக்கு ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் உள்ளார்..!
prem kanth
வெள்ளம் வந்தபோ காப்பாற்ற வரல. மீனவன சுட்டு கொன்ற போதும் வரல. குரங்கனி தீ பிடிச்சு எரிந்தபோதும் வரல. ஒகி புயலில் சிக்கியவன் பிணத்தை கூட கொண்டு வரல...
இளைய ராஜா
பிரதமர் வருகை. மீண்டும் தமிழர்களின் ஒற்றுமை, உணர்வை உலகறியச் செய்த மோடிக்கு நன்றி.
சிற்பன்
விண்ணிலும் எதிர்ப்பு மண்ணிலும் எதிர்ப்பு..
Riaz
என் விவசாயியை உங்கள பாக்க உங்க ஊருக்கு வந்தப்ப மதிக்காத பிரதமருக்கு தமிழ்நாட்ல என்னடா மரியாதை வேண்டி கிடக்குது! #GoBackModi
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago