நெட்டிசன் நோட்ஸ்: உலக புத்தக தினம்; கைவிடாத ஒரே நண்பன்

By இந்து குணசேகர்

 புத்தக தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

அம்மனூர் ரூபன்

‏கடந்த காலங்களை கண் முன் நிறுத்துபவை காகிதங்களே!

அசுரன்

‏#உலகபுத்தகதினம் புத்தகம் இல்லை எனில் கிறுக்கன் ஆகியிருப்பேன்...

மிஸ்டர்.டவுசர்பாண்டி

‏ஓருவனை திருத்தம் செய்வது என்றால்  எழுத்துகளால்  மட்டுமே முடியும்

Athisayam Athish

‏புத்தகம் ஒரு ஈடுஇணையற்ற சிற்பி!

உன் அகத்திற்கு புது திசையினை தரும்

உன் இலக்கிற்கு உத்வேகத்தை தரும்

உன்னை மெல்ல செதுக்கி பட்டைதீட்டி உலகிற்கு உன் அறிவினை ஒளியாய் தரும்!

ARUN KANDHASAMY

‏#உலகபுத்தகதினம். ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி புத்தகத்திற்கு மட்டுமே உண்டு.

கௌதம்ராம்

‏#உலகபுத்தகதினம்

ஆனந்த விகடன் கூட முழுசா படிக்க முடியல

மொபைல் போன் ஆக்கிரமிப்பு செய்கிறது

படிக்கனும் இனிவரும் காலங்களிலாவது

ஆப்பாயிலிசம்

‏ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்சிங்.

புத்தகங்களைப் படிப்போம்..! பரிசளிப்போம்!!

Narayani

‏புத்தகம் மட்டும் இல்லைனா ... என்னவா இருந்திருப்பமோ தெரியல. டிவி,வீடியோ,பிடிச்ச புத்தகங்கள்ல இருந்து தேர்ந்தெடுக்கச் சொன்னா, என் வாக்கு புத்தகத்துக்கே. #உலகபுத்தகதினம்.

Kondalraj Ramamoorthy

‏தனிமையில் இனிமையும், இனிமையில் சிந்தனையும் ஊட்டி, உன் வாழ்வில் உன் இதயத்தில் புதைந்து கிடக்கும் உயிரில்லா உணர்வுகளை வெளிக்கொணர்ந்து ஒளி வீசுவது #புத்தகம் #உலகபுத்தகதினம்

யாரோ   இவள்

என்னை தனிமையில் இருந்து காப்பாற்றியவன் !

துரோகம் செய்யாத நம்பகமான  நண்பன்..!  #புத்தகம்

கிறுக்கன்   

‏ஓதல் இல்லையெனில்

பல நூற்றாண்டு முன் நடந்த மோதலும் தெரிய வாய்ப்பில்லை .....

சிமிழன்

‏மனிதர்களை விட புத்தகங்களை அதிகமாக நேசியுங்கள். உங்களின் எல்லா சூழ்நிலைக்கும் ஆறுதலும், புத்துணர்ச்சியும், எப்பொழுதும் உங்களைக் காயப்படுத்தாததும் அவை மட்டுமே.

திவாகரன்

‏கண்ணாடியில் முகப் பொலிவைத் தேடாது புத்தகங்களில் அகப் பொலிவைத் தேடத் தொடங்கும் நொடியில் ஒருவன் அறிவு சார்ந்த தேடலின் பயணத்தைத் தொடங்குகிறான்!

தமிழ்தலைமகன்

‏தனிமையில் நான் கொண்டாடும் காதலி "புத்தகம்"

இளவரசி M.E..,   

‏சில புத்தகங்களைச் சுவைப்போம்… சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

Chandru MayaS

‏உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்...!

- டெஸ்கார்டஸ்.

அன்புடன் கதிர் ✍

‏நாளும் நல்லதை கற்றுக்கொடுக்கும் பொக்கிஷம் புத்தகங்கள் !!!

#உலகபுத்தகதினம்

வெளிச்சம்

‏தேடித்தேடி படித்தலின் போதை தெளியாமலிருப்பவர்கள் வரம் பெற்றவர்கள்.

லதா கார்த்திகேசு

‏படுகுழிகளில் இருந்து  மீட்கும் பாலம்

Marina

‏இந்தியாவின் உண்மையான வரலாறு தெரியவேண்டுமெனில் அம்பேத்கர் & பெரியார் புத்தகங்களைப் படித்தால் தான் முடியும்.

கிருனிகா

‏படிக்க முடிந்தவைகள் எல்லாமே

#புத்தகங்கள் அல்ல, படித்தவற்றை வாழ்வியலில் புகுத்திக்கொள்ள முடிந்திருப்பது அவசியம்... 

B.uma maheshwari   

‏நம் மனசாட்சியை அடிக்கடி

விழித்திருக்க வைப்பது ஒரு நல்ல புத்தகத்தின்

பங்கு அதிகம் #WorldBookDay

CSK UK♔

‏போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…!

Journalist AK

‏எந்த காலகட்டத்திலும்  நம்மைக்  கைவிடாத ஒரே நண்பன்,

" புத்தகம் "

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..

‏ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணையப் பக்கம்.

கும்புடுறேன் சாமி

இந்த இணையதளம்லாம் வந்த பிறகு புத்தம் படிக்கும் பழக்கம் எல்லாம் குறைந்து விட்டது மறுபடியும் தொடங்க வேண்டும்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்