தமிழகத்தில் அதிக முறை வென்ற எம்.பி.க்கள் யார், யார்? | எலெக்‌ஷன் ஃப்ளாஷ்பேக்

By நிவேதா தனிமொழி

தமிழகத்தில் இருந்து மக்களவைத் தேர்தலில் அதிக முறை வென்று எம்.பி ஆனவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? காங்கிரஸ் முதல் திமுக வரை லிஸ்ட் இதோ...

ப.சிதம்பரம்: தமிழகத்தில் மக்களவைக்கு அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ப.சிதம்பரம். இவர் சிவங்கங்கை தொகுதியிலிருந்து 1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வென்றவர் . இவர் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவங்கை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

எம்.அருணாச்சலம்: அதேபோல், தமிழகத்தில் ஒரே தொகுதியில் அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்னும் பெருமையைப் பெற்றவர் எம்.அருணாச்சலம். குறிப்பாக, தென்காசி தனித் தொகுதியிலிருந்து 1977, 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்னும் சிறப்பைப் பெற்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய தொகுதிகளிலிருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

திமுக சார்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சை தொகுதியிலிருந்து 6 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் திமுக சார்பிலும், எம்.ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பிலும், ஆர்.பிரபு காங்கிரஸ் சார்பிலும் தலா 5 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய பகுதி > எலெக்‌ஷன் ஃப்ளாஷ்பேக் | அண்ணாவை தமிழக முதல்வராக்கிய அந்த ராஜினாமா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்