அருவி திரைப்படத்தில் குட்டி அருவியாக நடித்துள்ள பிரணிதா நடிகர் சூர்யாவை சந்தித்து வாழ்த்துகள் பெற்ற வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இதில், குழந்தை நட்சத்திரத்தின் திறமையை நடிகர் சூர்யா சக நண்பனைப்போல பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
பன்னாட்டு நிறுவனங்கள் நம்மீது திணித்துள்ள நுகர்வுக்கலாச்சாரத்தை மட்டுமல்ல, ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட தீங்கை புரிந்துகொள்ளாத சொந்தக் குடும்பம், அவரைச் சுற்றிலுமுள்ள மனிதர்கள், மீடியாக்களின் அட்ராசிட்டி என அனைவரின் பாசாங்குத்தனங்களையும் தோலுரித்துக்காட்டிய படம் அருவி. இப்படத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட அருவியாக வந்து மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகவே பலரது பாராட்டைப் பெற்றிருந்தார் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த நடிகை அதிதி பாலன்.
இப்படத்தில் குட்டி அருவியாக நடித்து பார்வையாளர் மனதைக் கொள்ளைகொண்டவர் குழந்தை நட்சத்திரம் பிரணிதா.
''கொகோ கொக்கோகோ
குன்னாட்டி கொழகட்ட கொழுக்கட்ட
குட்டி குட்டி கொழுக்கட்ட
கொடுத்து கொடுத்து தின்னாக்கா..
இனிக்கும் வாழ்க்கை கொழுக்கட்ட
குட்டி கொழுக்கட்ட வளந்தாச்சி..
சீனி சக்கர இனிப்பாச்சு...
சிட்டுக்குருவி குடும்பத்துல
கொட்டும் அருவி கலந்தாச்சு...''
என்று அருவி, படத்தில் வரும் முதல் பாடலுக்கான காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் வந்து சில்லென்ற இளங்காற்றாய் பூமியின் குளிர்ச்சியை உணரவைக்கும்.
பிற்காலத்தில் சமூகத்தின் வெப்பம் தாளமுடியாமல் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட பெண்ணின் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியும் அழகுமிக்கதாய் இருந்தது என்பதை பார்வையாளரை உணரும்படி செய்திருப்பார் பிரணிதா. பிரணீதாவின் இக்காட்சிகள், மீதியுள்ள படம்முழுவதும் உள்ளீடாய் இருந்துகொண்டு நம்மனதை பிசைந்துகொண்டே இருக்கும்.
நடிகர் சூர்யா தனது பிஸியான அலுவல்களுக்கிடையிலும் பிரணிதாவை சந்திக்க அனுமதி வழங்கினார். சூர்யாவை சந்தித்தபோது பிரணிதா சூர்யா நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலை உயிர்ப்போடு பாடிக் காட்டினார். அவரது திறமையை வியந்து பாராட்டிய சூர்யா ஆனால் எப்போதும் கற்பதை மட்டும் நிறுத்தவேண்டாம் எனக் கூறினார்.
இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago