19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு நெட்டிசன் நோட்ஸில்....
பொறியாளர் கண்ணன்
வாழ்த்துக்கள் இளம் இந்திய அணிக்கும், இந்தியப் பெருஞ்சுவருக்கும் (டிராவிட்)
சாட் பூட் த்ரீ
டன்டனக்கா ஏ டனக்கு னக்கா
U -19 அதிகமுறை சாம்பியன் என்ற சாதனை புரிந்தது ட்ராவிட் படை
வம்பு 2.0
கங்காரு அணியை
பிரியாணி செய்தது
இந்திய அணி!
பட்டாசு
வயதிற்குரிய வேகமும், வயதை மீறிய நிதானமும் கொண்டதாக இந்தியஅணி வல்லமையுடன் கோப்பையை வெல்கிறது.
தாந்தோனி
ட்ராவிட் சக்தே இந்தியா மொமண்ட்... அவர் விளையாண்டப்ப கப் வாங்க முடியுல...ஆனா அவர் தயார் பண்ற டீம் கப் வாங்குது...
திருட்டுகுமரன்
'இந்த சுவர் இன்னும் எத்தன டீம காவு வாங்க போகுதோ' #RahulDravid
தீக்குச்சி
சுவரு சுவர்தான் டா. #U19CWC
நைனா
காலைல மேட்ச் பார்க்கும் போது என்னாங்கடா ஆஸ்திரேலிய U19ல பேட்டிங் பன்றவன் பூராபயலும் பாண்டிங், கிளார்க் மாதிரி ஆடுரானேன்னு பார்த்தா இப்ப நம்ப பசங்க சச்சின் கங்குலி போல பயமே இல்லாம ஆடி அசத்திட்டானுக #U19worldchampionIndia
Sa.Na. Kannan
மன்ஜோத் கல்ராவின் பேட்டிங்கில் கங்குலியின் வசீகரம் தென்படுகிறது. அதிரடியாகவும் ஆட வருகிறது. வருங்காலத்தில் ஷிகர் தவனின் இடத்தைப் பிடிக்க அவருடைய ஊரிலிருந்தே ஒருவர் தயாராகி வருகிறார்
Viki
டீம் ஜெய்க்கும் போது கோச்சர்க்கு க்ரெடிட் கிடைக்குறது, கேரி கிரிஸ்டன்'க்கு அப்புறம் ட்ராவிட்க்கு தான் நடக்குது
நாதஸ்
இந்த வெற்றி இந்தியப் பெருஞ்சுவர் டிராவிட்டின் உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம்
அஜய்
Champions Trophy கோட்ட விட்டோம்.. பசங்க புடிச்சுட்டாங்க.. அடுத்த 2019 world Cup தட்டி தூக்கணும்
Sharjil
திராவிட் நினைத்ததை சாதித்தார் #INDvAUS #U19CWC #U19CWCFinal
Nino
அண்டர் 19 ஜெயிச்சாச்சு, நம்ம அடுத்த டார்கட் 2019.. ஜெய் ஹோ. #CWCU19 #INDvAUS
Arun Virat
ஸ்ட்ரைக் ரேட் 99 வச்சி பைனல்ல செஞ்சூரி அடிக்கிறதெல்லாம் வேற லெவல்
Rascal Talks™
இன்னைக்கு ட்ராவிட்ட பாக்கும் போது .. இறுதி சுற்று மேடி ,
டங்கல் அமிர் கான் ,
சுல்தான் சல்மான் கான் எல்லாம் என் கண்ணு முன்னாள வந்து போரானுங்க , ஏன்னு தெர்ல
ganesan_anb
Rahul Dravid ஒரு நல்ல மனுஷன். நல்ல கிரிக்கெட்டர். இளம் தலைமுறையை மிகச் சரியாக வழிநடத்தும் நல்ல பயிற்சியாளரும் கூட.
Dr.Rockstar AK™
Rahul Dravid... சென்ற இடமெல்லாம் சிறப்ப்ப்ப்பு... :)
புலி
இந்தியப்பெருஞ்சுவர் #டிராவிட் தலைமையிலான
u19 இந்திய அணி
ஆஸ்திரேலிய அணியை அலேக்காக அசால்ட் செய்து
தோல்வியே காணாமல்
கோப்பையை 4 ஆவது முறையாக வென்று சரித்திரம் படைத்தது
சூப்பர்ஸ்டார் ரசிகன்
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி வெற்றிக்கு வாழ்த்துக்கள்
இந்தியாவே கொண்டாடுகிறது. வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிகின்றன. ஏன் மற்ற விளையாட்டுகளை இதைப்போல் நாம் அங்கீகரிப்பதில்லை. ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை கூலி தொழிலாளியாகவே இன்னும் வாழ்கிறார்.
Vinoth
செடி முளைக்காததற்கு விதை தூங்குகிறது என்று ஆர்த்தம் இல்லை: அது தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறது என்று பொருள்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago