பொருளாதாரம் முதல் அரசியல் வரை: முக்கிய நிகழ்வுகள் 2023 @ இந்தியா

By செய்திப்பிரிவு

# இணையச் செயலி வழியிலான பணப் பரிமாற்றத்துக்கான உரிமம் BharatPe செயலிக்கு வழங்கப்பட்டது. | # நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்தாவது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.| #பசுமைப் பத்திரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை செபி (SEBI) வெளியிட்டது. | # நாணயங்களை வெளியிடும் இயந்திரங்களை நிறுவுவதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி வைத்தது. | # பெங்களூருவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்தது.

# சூரிய சக்திக் கழகம் மினி ரத்னா அந்தஸ்தைப் பெற்றது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு லாபம் ஈட்டிய, ஒரு ஆண்டிலேனும் ரூ.30 கோடிக்கு மேல் வரிக்கு முந்தைய லாபம் ஈட்டிய மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது. | # 2023 அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

#நடப்புக் கணக்குகள் தொடர்பான விதிகளை முறையாகப் பின்பற்றாததற்காக சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ.84.5 லட்சம் அபராதம் விதித்தது. | # செயல்படா சொத்துகளாக வரையறுக்கப்பட்ட கடன்களை ஒரே தவணையில் அடைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. | # வருமான வரித் துறை வரி செலுத்துவோருக்கான AIS செயலியைத் தொடங்கியது.

# மத்திய ரிசர்வ் வங்கிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே உள்நாட்டு நாணயங்களில் வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் நிறைவேறியது. | # டால் ஏரியில் அமேசான் நிறுவனம் மிதக்கும் கடையைத் தொடங்கியது. | # கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை (Windfall Tax) இந்தியா அதிகரித்தது. வழக்கத்தைவிட அதிகமான லாபம் ஈட்டும் துறைகளுக்கு இந்த வரி விதிக்கப்படும். | # வெங்காய ஏற்றுமதி மீது 40% வரியை விதித்தது இந்திய அரசு.

குளிர்காலக் கூட்டத்தொடர் 2023: டிசம்பர் 4இல் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 21இல் முடிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய புகாரில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா டிசம்பர் 8 அன்று தகுதியிழப்பு செய்யப்பட்டார்.

2001 நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட டிசம்பர் 13ஆம் தேதி அன்று, பார்வையாளர் மாடத்திலிருந்து நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்த இருவர் வண்ணப் புகையை வீசினர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா மசோதாக்கள் எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், தடயவியல் சட்டம் ஆகிய காலனிய காலச் சட்டங்களுக்கு மாற்றாகப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது. ஆனால், புதிய சட்டங்களில் மிகச் சிறிய அளவிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.


தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா நிறைவேறியது. இதன் மூலம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மாற்றாகப் பிரதமர் பரிந்துரைக்கும் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெறுவர் என்னும் மாற்றம் அமலாகிறது.

# விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். | # கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். | # மதுரையில் சுற்றுலா ரயில்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பயணிகள் உயிரிழந்தனர்.

# திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பின்னர் 6 பேர் மீதான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்தது. | # மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் நகரமே வெள்ளக் காடானது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது.

கல்வி: # பிளஸ் 2 பொதுத் தேர்வில் திண்டுக் கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். | # தேசியக் கல்வி மைய தரவரிசைக் கட்டமைப்பின் (என்.ஐ.ஆர்.எஃப்.) தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது. | # விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பிரபஞ்சன் என்கிற மாணவர் நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.

# சென்னைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் ஆளுநர் நியமித்த யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர்கல்வித் துறை அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. | # தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங் கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் இனி ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும்.

காவிரி விவகாரம்: # டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டி.எம்.சி.
தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் உத்தரவிட்டார். ஆனால், அதை ஏற்க கர்நாடகம் மறுத்தது. | # தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது.

# காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. | # உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொது: # சென்னையில் முதன் முறையாக தமிழ்நாடு அரசு சார்பில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர். | # சென்னை வெள்ளப்பெருக்குப் பேரிடர் தணிப்பு - மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

# மதுரையில் ரூ. 206 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ திறக்கப்பட்டது. | # சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள், நிர்வாகத் திறன்களை மேம்படுத்த அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 500 பக்க அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. | # திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரியைத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது.

அரசியல்: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. | பண மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைதுசெய்தது.| அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. | செம்மண் குவாரி வழக்குத் தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. | சட்டவிரோத பணப்பரி மாற்ற வழக்கில் கைதாகி, காவேரி மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுப் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு அரசு வழங்கும் ‘தகைசால் தமிழர்’ விருதுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டார். | பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது. | தேமுதிகவின் புதிய பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமிக்க அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

புதிய நியமனங்கள்:

# ஜார்க்கண்ட் ஆளுநர் - சி.பி.ராதா கிருஷ்ணன்
# நாகாலாந்து ஆளுநர் - இல.கணேசன்
# நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி- பி.வி.ஆர். சுப்ரமணியம் ஐ.ஏ.எஸ்.
# தேசியத் தூய்மைப் பணி ஆணையத்தின் தலைவர் - ம.வெங்கடேசன்.
# தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் - குஷ்பு
# மதுரை எய்ம்ஸ் தலைவர் - உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியா
# தென் பிராந்திய சி.ஆர்.பி.எஃப். ஐ.ஜி.- சாரு சின்ஹா
# தலைமைக் கணக்குத் தணிக்கை யாளர் - எஸ்.எஸ்.துபே
# சித்தார்த்தா மொஹந்தி - எல்.ஐ.சி தலைமைச் செயல் அதிகாரி.
# யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவர் - மனோஜ் சோனி
# மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்-பிரவீன் குமார் ஸ்ரீவாஸ்தவா
# மத்திய சட்ட இணை அமைச்சர் - அர்ஜுன்ராம் மேக்வால்
# ‘ரா’ புதிய தலைவர் - ரவி சின்ஹா ஐபிஎஸ்.
# ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி- ஜெயா வர்மா
# இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் - நடிகர் ஆர்.மாதவன்
# இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் (FICCI) 2023-24ஆம் ஆண்டுக்கான தலைவராக அனிஷ் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்