சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 | 17-ம் தேதி இறுதிப்போட்டி

By செய்திப்பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்-சீசன் 3’. குழந்தைகளின் இசை திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சியான இது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டி வரும் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் நிஷாந்த் கவின்,கனிஷ்கர் ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டைட்டிலுடன் ரூ.10 லட்சம் பரிசு தொகை கிடைக்கும். இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் இலவச டிக்கெட்டுகளை சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்