Bigg Boss 7 Analysis: சொதப்பிய பூகம்பம் டாஸ்க்... வெளியேறப்போவது யார்?

By டெக்ஸ்டர்

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நடத்திய மூன்று பூகம்பங்கள் டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளன. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடாததால் ஏற்கெனவே அறிவித்தபடி, வெளியேறிய போட்டியாளர்களில் இருந்து சிலர் உள்ளே வர, இங்கிருக்கும் போட்டியாளர்கள் சிலர் வெளியேற உள்ளனர்.

54ஆம் நாள் எபிசோடில், விஷ்ணுவுக்கு ஒரு மார்னிங் டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ். வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது. யாரை வைத்து இதை செய்தால் உண்மையிலேயே வீட்டில் பூகம்பம் வெடிக்கும் என்று நன்கு தெரிந்து இந்த டாஸ்க் விஷ்ணுவிடம் கொடுக்கப்பட்டது. வார இறுதி நெருங்கிக் கொண்டிருப்பதால் எப்போதும் வம்புக்கு இழுக்கும் மோடில் இருக்கும் அவர், இந்த முறை மிக ஜாலியாக எல்லாருக்கும் பேர் வைத்துக் கொண்டிருந்தார்.

முதலில் மாயாவுக்கு அவர் வைத்த பெயர் வைக்கோல்போர். எளிதாக தீப்பிடித்து மற்ற இடங்களுக்கும் பரவி விடுவதால் அந்த பெயர். இது பொருத்தமான பெயர்தான் என்றாலும், மாயா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. டாஸ்க் முடியும் வரையில் ‘உர்ர்ர்’ என்றே இருந்தார். பூர்ணிமாவுக்கு ‘சைதை தமிழரசி’, அக்‌ஷயாவுக்கு பருத்தி மூட்டை, விசித்ராவுக்கு தண்ணீர் லாரி என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர்களை கொடுத்தார். மற்ற அனைவரும் இதனை ஜாலியாகவே எடுத்துக் கொண்டனர். அர்ச்சனாவுக்கு தொட்டாற்சிணுங்கி என்ற பெயர் வைத்தார். பிக்பாஸ் எதிர்பார்த்த அந்த சண்டையை அர்ச்சனாதான் தொடங்கி வைத்தார். தான் எத்தனையோ வேலைகள் செய்திருந்தாலும், ஏன் இன்னும் தான் அழுததையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று விஷ்ணுவிடம் வாக்குவாதம் செய்தார். போன வாரம் கூல் சுரேஷும் இதையே செய்ததில் அவருக்கு இருந்த வருத்தம், இப்போது கோபமாக மாறியிருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

அடுத்த வார கேப்டனுக்கான போட்டியில், மற்ற போட்டியாளர்களின் அதிக வாக்குகளை பெற்ற ஜோவிகா, நிக்சன், விஷ்ணு மூவரும் களமிறங்கினார்கள். இதில் CAPTAIN என்ற எழுத்துகளை அதற்கான அச்சில் முதலில் பொருத்துபவர்களே அடுத்த வார கேப்டன். இதில் நிக்சன் வெற்றிபெற்று கேப்டன் ஆனார். கேப்டன்சி டாஸ்க்கில் தோற்ற ஜோவிகா, தொடர் தோல்விகளால் துவண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.

பூகம்பம் டாஸ்க்கில் யாருடைய கதை அதிக அதிர்ச்சிகரமாக இருந்தது என்று தேர்வு செய்து ஸ்டார் வழங்குமாறு பிக்பாஸ் கூறியதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் ப்ராவோவின் கதைக்கு வாக்களித்தனர். ப்ராவோவின் கதையும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுதான் என்றாலும், விசித்ராவின் கதைக்கும் அதிக வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். ஆனால் மாயா தவிர்த்து வேறு யாரும் அதனை குறிப்பிடவில்லை. ஓரளவு முகம் தெரிந்த விசித்ராவுக்கே அந்த காலகட்டத்தில் நேரடியான பாலியல் சீண்டல்கள் இருந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து அவருடைய குரல் வெளிவருவது முக்கியமானது.

அடுத்து ஒரு அட்வர்டைஸ்மெண்ட் டாஸ்க்கின்போது, வழக்கம்போல மணிக்கும் மாயாவுக்கும் முட்டிக் கொண்டது. விளையாட்டுத்தனமான ‘நீங்கள் எல்லாம் ஒரு ஜட்ஜா?’ என்று மாயா மணியை பார்த்து கேட்க, பதிலுக்கு அவர் இவரை பார்த்து, ‘நீங்கள்லாம் ஒரு பெர்ஃபார்மரா?” என்று கேட்டதால், மாயா போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கோபித்துக் கொண்டார். தான் கூறுவதை மட்டும் விளையாட்டு என்று வாதிடும் மாயா, தன்னை பதிலுக்கு கிண்டல் செய்வதை சீரியஸாக எடுத்துக் கொண்டது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.

இந்த பூகம்ப டாஸ்க்குகளில் ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்த டாஸ்க்குகளே சுவாரஸ்யமற்றவைகளாக இருந்த நிலையில், அதில் போட்டியாளர்களின் ஈடுபாடும் அதை விட மோசமாக இருந்தது. இதனால் வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வருவது உறுதியாகிவிட்டது. அதே போல வழக்கமான ஒரு எவிக்‌ஷனுடன், மற்றொரு போட்டியாளரும் வெளியே அனுப்பப் படலாம் என்று தெரிகிறது. சுவாரஸ்யம் என்ற அடிப்படையில் பார்த்தால் அநேகமாக அது அக்‌ஷயா மற்றும் விக்ரமாக இருக்கலாம், ஓட்டின் அடிப்படையில் பார்த்தால் பூர்ணிமாவாக கூட இருக்கலாம். வெளியேறப் போவது யார்? உள்ளே குடியேறப் போவது யார்? என வார இறுதி எபிசோட்களில் தெரிந்து விடும்.

முந்தைய அத்தியாயம்: மூன்று பூகம்பங்களும்... விசித்ரா சொன்ன அதிர்ச்சி சம்பவமும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 hours ago

வலைஞர் பக்கம்

14 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்