தேர்தல் நேரத்தில் கட்சிகள் மேற்கொள்ளும் பிரச்சாரம், மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 70 மற்றும் 80-களில் ஏட்டிக்கு போட்டியாக அரசியல் கட்சிகள் செய்யும் சுவர் பிரச்சாரம், அனைவரின் கவனத்தை ஈர்க்கும்... பின்னர், சுவர் பிரச்சாரம், போஸ்டர் யுத்தமாக மாறியது. இப்போது டிஜிட்டல் யுகமாகிவிட்டது. அன்றைக்கு சுவர்களிலும் போஸ்டர்களிலும் மோதிக் கொண்டவர்கள், இப்போது சமூக ஊடகங்களில் அதை தொடர்கிறார்கள். அதிலும் திமுக, பாஜக ஐ.டி. விங் மோதல்கள் நகைச்சுவையாக கவனம் ஈர்க்கின்றன.
மணிப்பூரில் சமீபத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்தது. ‘மணிப்பூருக்கு பிரதமர் மோடி போகாதது ஏன்?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதை சுட்டிக் காட்டும் விதத்தில் பிரதமருக்கு ‘ஃப்ளைட் டிக்கெட்’ எடுத்திருப்பதுபோல கிண்டலாக வடிவமைத்து, டிக்கெட் மாதிரியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது திமுக ஐ.டி. விங்.
மாதிரி டிக்கெட்டில் ‘இண்டிகோ’ விமான நிறுவனத்தின் பெயரை ‘மோடிகோ’ என்று குறிப்பிட்டு, பயணியின் பெயராக மோடி மற்றும் தொழிலதிபர் அதானியை இணைத்து ‘மோதானி’ என்று குறும்பு காட்டியிருந்தனர். அமலாக்கத்துறை ரெய்டுகளை குறிக்கும் வகையில், சீட் எண்ணின் சீரியல் வரிசை ‘ED’ என்று தொடங்குகிறது. ‘உங்க ஓனருக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டிருக்கோம். போகச் சொல்லுங்க’ என்று பாஜகவினருக்கு அறிவுரையும் இருந்தது.
இதைப் பார்த்த பாஜக ஐ.டி. விங், பதிலடியாக முதல்வர் ஸ்டாலினுக்கு வேங்கைவயலுக்கு பஸ் டிக்கெட் எடுத்து, அதை பகிர்ந்துள்ளது. வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 300 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை சுட்டிக் காட்டும் வகையில் இந்த பஸ் டிக்கெட்டை தயாரித்துள்ளனர்.
» ODI WC 2023 | இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்திய கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லர்!
» கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
‘ரெட் ஜெயன்ட்’ பஸ்: சமூக நீதி டிராவல்ஸ் கம்பெனியின் ‘ரெட் ஜெயன்ட் பஸ்’ஸில் சென்னை செனடாப் ரோடிலிருந்து நேராக வேங்கைவயல் வாட்டர் டேங்குக்கே டிக்கெட் ‘புக்’ செய்துவிட்டனர். பயணியின் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று போட்டு, சீட் நம்பராக ‘2ஜி’ என இவர்களும் குசும்பு காட்டியுள்ளனர். அத்துடன் ‘டிக்கெட் கட்டணத்தை தமிழக பாஜக முழுமையாக செலுத்திவிட்டது. உங்க ஓனரை போய்ட்டுவரச் சொல்லுங்க’ என்று திமுக பாணியிலேயே கோரிக்கையும் விடப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் திமுக-வுக்கு ஆதரவாக உசுரைக் கொடுத்து மல்லுகட்டும் உடன்பிறப்புகளுக்கு 200 ரூபாய் சன்மானம் வழங்கப்படுவதாக ஒரு 'தமாஷ்' பேச்சு உண்டு. அதை கிண்டல் செய்யும் வகையில் சென்னையில் இருந்து வேங்கைவயலுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.200 என்று குறிப்பிட்டிருந்ததுதான் நகைச்சுவையின் உச்சம்!
திமுக, பாஜகவினர் தயாரித்த மாடல் டிக்கெட்டுகள் சமூக ஊடகங்களில் காமெடி கமெண்ட்களுடன் வைரலாகி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் வருமோ?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
26 days ago